என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வெயில்
    X
    வெயில்

    வேலூர், கரூர், திருச்சியில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்த வெயில்

    திருச்சி, கரூரில் நேற்று 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையிலும் 100 டிகிரி வெயில் கொளுத்தியது.
    வேலூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. கோடை மழையும் பரவலாக பெய்து வந்தாலும் வெயிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் சில வாரங்களாக வெயில் சதம் அடிப்பதும், பிறகு சற்று குறைவதுமாக போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் வெளியில் தலைகாட்டவே முடியாத அளவுக்கு வெப்ப காற்று வீசுகிறது.

    நேற்று வழக்கத்துக்கு மாறாக வெயில் கொளுத்தியது. இதனால் வெப்பத்தின் அளவு அதிகரித்து அனல்காற்று வீசியது. சாலைகளில் கானல் நீர் தெரிந்தது. வெயிலுக்கு பயந்து மக்கள் குடைபிடித்தபடி வெளியில் சென்றனர்.

    வெப்பக்காற்று வீசியதால் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றி சென்று வந்தனர். கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் வியர்வை மழையில் நனைந்தபடி சென்றனர். நேற்று முன்தினம் வேலூரில் 103.1 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. நேற்று அதையும் தாண்டி இந்தாண்டின் அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் சுட்டெரித்தது. நேற்று நள்ளிரவில் கருமேகங்கள் திரண்டு இடிமின்னலுடன் கடுமையான மழை வருவது போல் வந்தது. ஆனால் சில துளிகள் மட்டுமே விழுந்தது. இதனால் மழையை எதிர் பார்த்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோல் கரூர், திருச்சியிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. திருச்சி, கரூரில் நேற்று 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையிலும் 100 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இதேபோல் மதுரையிலும் வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பரவலான மழை பெய்ததால் வெயில் தாக்கம் தெரியவில்லை.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. மழை பெய்தாலும் அங்கு வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    Next Story
    ×