என் மலர்
வேலூர்
தபால் துறை பெயரில் ஆன்லைன் முகவரி அனுப்பி மோசடி ஈடுபடுபவர்களுக்கு வேலூர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் தபால் துறை அனுப்புவது போன்ற தகவல் வாட்ஸ் அப்பில் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் தபால் துறை வாயிலாக மானியம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கபடுவதாகவும் மேலும் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறுஞ்செய்தியுடன் அனுப்பி பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் அஞ்சலகத்தின் பெயரில் வரும் போலி லிங்கை தொடும் போதும் பிறந்த தேதி, செல்போன் எண், வங்கி கணக்கு விவரங்கள் கேட்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற போலி வலைதளங்களில் பொதுமக்கள் யாரும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம்.தபால் துறைக்கும் இதுபோன்று பரப்பப்படும் போலி செய்திகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
எனவே பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். இ-துபோன்ற போலி தகவல்களை தடை செய்ய தபால் துறை உடனடி நடவடிக்கை-களை எடுத்து வருகிறது.
மானியம், பரிசு வழங்குவதாக செல்போனுக்கு மெசேஜ் தபால் துறை பெயரில் வரும் போலி லிங்கில் விவரங்களை பதிவு செய்து ஏமாறாதீர்கள்.மானியம், பரிசு வழங்குவதாக கூறி தபால் துறை பெயரில் செல்போனுக்கு வரும் போலி லிங்கில் விவரங்களை பதிவு செய்து ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பரோல் முடிந்து இன்று ஜெயிலுக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 4-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெண்கள் தனிச்ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 27-ந்தேதி நளினி ஒரு மாதம் பரோலில் வந்து காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி பரோலை நீட்டிக்க வேண்டும் என மனு வழங்கினார்.
இதையடுத்து, நளினியின் மனுவை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் இன்று ஜெயிலுக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 4-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து நளினி மே மாதம் 27-ந்தேதி வேலூர் ஜெயிலுக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திராவிலிருந்து குடியாத்தம் வழியாக காரில் கடத்திய ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதி ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ளது.
சைனகுண்டா சுற்றி வனப் பகுதியாக உள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரம் உள்ளிட்ட மரங்களை இரவு நேரங்களில் வாகனங்களில் கடத்துவதாக வந்த தொடர் புகாரின் பேரில் வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார்,
உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனவர் முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள கொண்டம்மா கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த சொகுசு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவர்கள் இறங்கி அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடினர்.
அந்த வாகனத்தை வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர் அதில் சுமார் 4 அடி நீளம் கொண்ட 17 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. சுமார் 500 கிலோ இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ. 50 லட்சம் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் காரையும், செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.செம்மரக் கட்டைகளை குடியாத்தம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஜெயிலுக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் ஜெயில் வளாகத்தில் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரை கண்ணன் மற்றும் அதிகாரிகளுடன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டம் தொடர்பாக மேயர் சுஜாதா ஆனந்தகுமார் கூறும்போது, வேலூர் பாலாற்றில் இருந்து தனி குழாய் மூலம் ஜெயிலுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாய் சேதமடைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறை வளாகம் மற்றும் அதையொட்டிய குடியிருப்புகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய ஆலோசிக்கப்பட்டது.
ஜெயிலுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்ய அதற்குரிய தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.
மேலும், சிறைச்சாலை வளாகத்தில் சேரும் உணவு கழிவுகளை அகற்ற மாநகராட்சி உதவியுடன் சிறை வளாகத்தில் தனி வளாகம் கட்டப்படும்.
அங்கு உணவு உள்ளிட்ட கழிவுகளை எருவாக மாற்ற பயிற்சி அளிக்க முடிவெடுக்கப்பட்டது என்றார்.
வள்ளிமலை கோவிலில் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் சரவணபொய்கை தெப்பகுளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூர்:
வேலு£ர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் வள்ளி மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தனிச்சிறப்பு உடையது. கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சரவண பொய்கை தெப்பகுளம் 1978-ம் ஆண்டு அப்போதைய தமிழக கவர்னரால் திறக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்-துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தெப்பகுளத்தில் உள்ள தண்ணீர் காகிதக் குப்பை கூளங்களுடன் மஞ்சள் நிறத்தில் சாக்கடை நீர் போல் காணப்படுகிறது.
மேலும் குளத்தில் மீன்கள் 25 நாட்களுக்கு முன்பு செத்து மிதந்ததை அப்பகுதி மக்கள் அப்பு றப்படுத்-தியுள்ளனர். வள்ளிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சரவண பொய்கை குளத்தில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இப்போது குளத்தில் மஞ் சள் நிறத்தில் தண்ணீர் இருப்பது கண்டு முகம் சுளித்து விட்டு குழாயடியை தேடிச் செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவதற்கு அக்கறை காட்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் 45 நாட்களுக்கும் மேலாக சாக்கடை தண்ணீர்போல் உள்ள கோவில் குளத்தை துர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர அக்கறை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-
வள்ளிமலை சரவணப் பொய்கை தெப்பக்கு ளம் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக புகார் வந்துள்ளது. தண்ணீரை அப்புறப்படுத்தி விட்டு போர்வெல் மூலம் குளத்துக்கு புதியதாக தண்ணீர் நிரப்பி மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு-வர உடனடி நட வடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வேலூர் அரசு காப்பகத்தில் இருந்து சென்னை இளம்பெண்கள் தப்பி ஓடினர்.
வேலூர்:
வேலூர் பெரிய அல்லாபுரத்தில் அரசினர் பிற்காப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆதரவற்ற மற்றும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப் பட்ட மைனர் பெண்கள், பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த பிரியா (வயது 19) மேரி (19) ஆகியோர் கடந்த ஆண்டு சென்னை கெல்லீஸ் காப்பகத்தில் இருந்து வேலூர் பிற்காப்பு இல்லத்திற்கு மாற்றப் பட்டனர்.
நேற்று அவர்கள் இருவரும் பிற்காப்பு இல்லத்தில் உள்ள குப்பைகளை வெளியே சென்று கொட்டி வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
இல்லத்தில் இருந்து வெளியே வந்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பிற்காப்பு இல்ல சூப்பிரண்டு சிவகாமி பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரியா, மேரி 2 பேரையும் தேடி வருகிறார். அவர்கள் சென்னைக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தோட்டப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய பீகார் வியாபாரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது சலாவுதீன் (வயது 38). பொம்மை வியாபாரி. வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் இவரது வீட்டின் அருகே உள்ள தெருவின் வழியாக தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். மாணவியை முகமது சலாவுதீன் நோட்டமிட்டு வந்துள்ளார்.
நேற்று காலை மாணவி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. முகமது சலாவுதீன் மாணவி முன்பு சென்றார். திடீரென அவரது ஆடைகளை அவிழ்த்து மனைவியை பார்த்து சைகை காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சலிட்டபடி வீட்டுக்கு ஓடிச் சென்றார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது முகமது சலாவுதீன் தனது ஆடைகளை அவிழ்த்து சைகை காட்டியதாக மாணவி தெரிவித்தார்.
பொதுமக்கள் முகமது சலாவுதீனை மடக்கிப் பிடித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மாணவி முன்பு அநாகரீகமாக நடந்து கொண்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் முகமது சலாவுதீனை கைது செய்தனர. பின்னர் அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

கே.வி.குப்பம் அருகே பள்ளி மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், மாணவியை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார் வந்தது.
அதன்பேரில் சைல்டுலைன் ஊழியர்கள், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியர்கள், பனமடங்கி போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொட்டாளத்தை சேர்ந்த 29 வயது வாலிபருக்கும் கொட்டாளத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி மாணவியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மாணவியை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நலகுழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோரிடம் எழுதி வாங்கினர்.

ஆடியோ தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் போலீஸ்காரர் பிரசாந்த்தை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:
வேலூர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் டேனியல் என்பவர் அடுக்கம்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டுக்கு மணல் தேவைக்காக வேலூர் மாவட்ட எஸ்.பி. தனிப்படையில் பணியாற்றி வந்த காவலர் பிரசாந்த் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
அவரும், தனிப்படையில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மூலம் பஞ்சர் மணி என்பவரை தொடர்புகொண்டு டேனியல் வீட்டுக்கு மணல் கடத்திச்செல்ல பேசியுள்ளனர். மணல் வண்டி யாரிடமும் சிக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முறைகேடாக மணலை கடத்திச் சென்றபோது பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தார்.
இதில் சிக்கிய வாகனத்தை மீட்டுக்கொடுக்குமாறு பஞ்சர் மணி தனிப்படை போலீஸ்காரர் பிரசாந்திடம் பேசும் 4 ஆடியோக்கள் கடந்த மாதம் வெளியானது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த ஆடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், தனிப்படையில் இருந்து பிரசாந்த் விடுவிக்கப்பட்டு ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டார். இந்த ஆடியோ தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் போலீஸ்காரர் பிரசாந்த்தை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

குடியாத்தம் அருகே தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தினர்.
குடியாத்தம்:
மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் முதல் கட்டமாக தமிழக எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறை சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின் பேரில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் ஆந்திர மாநில எல்லை பகுதி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர் களுக்கு கொரோனா பரிசோ-தனை செய்யப்பட்டு வருகிறது.
குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் மேற்பார் வையில் மருத்துவர் தயாளன், சுகாதார ஆய்வாளர் கபாலீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மற்றும் பணியாளர்கள் ஆந்திரா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சைனகுண்டா சோதனைச்சாவடி தாண்டி குடியாத்தம் வரும் வாகனங்களை நிறுத்தி அதில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறவுறுத்தினர். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.
குடியாத்தம் அருகே 14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் நடக்க இருந்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
குடியாத்தம்:
தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கிராமப்புறங்களில் 18 வயதுக்கு கீழ் நடைபெற்று வந்த திருமணங்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன அப்படி நடைபெற இருந்தாலும் அது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பல ஆண்டு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி கூலித் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரே மகள் சிறுமி ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.
தற்போது அந்த சிறுமிக்கு 14 வயதாகிறது. குடும்பம் நடத்த மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்ததால் அந்த சிறுமியின் தாயார் அந்த சிறுமிக்கு வசதியான இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதற்கேற்றார் போல் தமிழக ஆந்திர எல்லையோரம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த வசதியான 40 வயது நபருக்கு ஏற்கனவே 2 திருமணம் உங்கள் ஆகியுள்ளது 3-வதாக இந்த 14 வயதான இந்த சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை குடியாத்தம் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் சிறுமியின் திருமணம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக அந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவை தொடர்ந்து குடியாத்தம் தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் செயல்களின் சைல்டு ஹெல்ப்லைன் பணியாளர் மணிசேகரன் உள்ளிட்டோர் போலீசார் உதவியுடன் குறிப்பிட்ட அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் செய்ய இருப்பது தெரியவந்தது இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களிடம் 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று திங்கட் கிழமை நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் அந்த சிறுமியை வேலூரில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தின் முன் இன்று ஆஜர்படுத்துமாறு அந்த சிறுமியின் தாயாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்க்கு குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கள் உத்தர குமாரி, கிருஷ்ண மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மனோகரன், சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, துணை தலைவர் தமிழரசி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பானுமதி திட்ட விளக்க உரையாற்றினார். குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், தாசில்தார் லலிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். மேலும் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்த மருத்துவ முகாமில் இ.சி.ஜி., ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், மகப்பேறு மருத்துவ பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டது மொத்தம் 876 பேர் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனர்.
மருத்துவ முகாமில் மகப்பேறு மருத்துவர்கள், பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.