என் மலர்
உள்ளூர் செய்திகள்

வள்ளிமலை சரவணப் பொய்கை தெப்பக்குளத்தில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் காட்சி அளிக்கிறது.
வள்ளிமலை கோவிலில் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் சரவணபொய்கை தெப்பகுளம்
வள்ளிமலை கோவிலில் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் சரவணபொய்கை தெப்பகுளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூர்:
வேலு£ர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் வள்ளி மலை சுப்பிரமணியசுவாமி கோவில் தனிச்சிறப்பு உடையது. கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சரவண பொய்கை தெப்பகுளம் 1978-ம் ஆண்டு அப்போதைய தமிழக கவர்னரால் திறக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்-துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தெப்பகுளத்தில் உள்ள தண்ணீர் காகிதக் குப்பை கூளங்களுடன் மஞ்சள் நிறத்தில் சாக்கடை நீர் போல் காணப்படுகிறது.
மேலும் குளத்தில் மீன்கள் 25 நாட்களுக்கு முன்பு செத்து மிதந்ததை அப்பகுதி மக்கள் அப்பு றப்படுத்-தியுள்ளனர். வள்ளிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சரவண பொய்கை குளத்தில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இப்போது குளத்தில் மஞ் சள் நிறத்தில் தண்ணீர் இருப்பது கண்டு முகம் சுளித்து விட்டு குழாயடியை தேடிச் செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பணம் எண்ணுவதற்கு அக்கறை காட்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் 45 நாட்களுக்கும் மேலாக சாக்கடை தண்ணீர்போல் உள்ள கோவில் குளத்தை துர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர அக்கறை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-
வள்ளிமலை சரவணப் பொய்கை தெப்பக்கு ளம் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக புகார் வந்துள்ளது. தண்ணீரை அப்புறப்படுத்தி விட்டு போர்வெல் மூலம் குளத்துக்கு புதியதாக தண்ணீர் நிரப்பி மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு-வர உடனடி நட வடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Next Story






