என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்க்கு குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கள் உத்தர குமாரி, கிருஷ்ண மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மனோகரன், சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, துணை தலைவர் தமிழரசி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் அனைவரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பானுமதி திட்ட விளக்க உரையாற்றினார். குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், தாசில்தார் லலிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். மேலும் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்த மருத்துவ முகாமில் இ.சி.ஜி., ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், மகப்பேறு மருத்துவ பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டது மொத்தம் 876 பேர் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனர்.
மருத்துவ முகாமில் மகப்பேறு மருத்துவர்கள், பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story






