என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயில் வளாகத்தில் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆய்வு செய்த காட்சி.
வேலூர் ஜெயிலுக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம்- மேயர் தகவல்
வேலூர் ஜெயிலுக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் ஜெயில் வளாகத்தில் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரை கண்ணன் மற்றும் அதிகாரிகளுடன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டம் தொடர்பாக மேயர் சுஜாதா ஆனந்தகுமார் கூறும்போது, வேலூர் பாலாற்றில் இருந்து தனி குழாய் மூலம் ஜெயிலுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாய் சேதமடைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறை வளாகம் மற்றும் அதையொட்டிய குடியிருப்புகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய ஆலோசிக்கப்பட்டது.
ஜெயிலுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்ய அதற்குரிய தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.
மேலும், சிறைச்சாலை வளாகத்தில் சேரும் உணவு கழிவுகளை அகற்ற மாநகராட்சி உதவியுடன் சிறை வளாகத்தில் தனி வளாகம் கட்டப்படும்.
அங்கு உணவு உள்ளிட்ட கழிவுகளை எருவாக மாற்ற பயிற்சி அளிக்க முடிவெடுக்கப்பட்டது என்றார்.
Next Story






