என் மலர்
வேலூர்
வேலூர் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் அண்ணாசாலையில் ஊரீசு கல்லூரி எதிரே உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் 3-வது தளத்தில் தனியார் கண் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
இதில் இன்று காலை பேட்டரி மற்றும் இன்வெட்டர் வைக்கப்பட்ட அறையில் மின்கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் புகைமூட்டம் எழுந்தது.உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.
மேலும் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 10 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து பேட்டரி இன்வெட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் ஆஸ்பத்திரியில் இருந்த பேட்டரி மற்றும் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் ஆஸ்பத்திரிலிருந்து நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் 104 டிகிரி வெயிலால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வேலுார்:
வேலுார் மாவட்டத்தில் வெயில் கொளுத்தத் தொடங்கி பல வாரங்க ளாகி விட்டது.
தொடர்ந்து வெயில் சதம் அடிப்பதும், பிறகு சற்று குறைவதுமாக போக்கு காட்டியது. இத னால், பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்டவே முடியாத அளவுக்கு வெப் பக்காற்று வீசுகிறது.
கடந்த 2 நாட்களாக வெயில் 101 டிகிரி அள வுக்கு இருந்தது. அதிகா லையில் மட்டும் லேசான குளிர் காற்று வீசியது. ஆனால், நேற்று வழக்கத் துக்கு மாறாக வெப்பத்தின் அளவு அதிகமாக உணரப் பட்டது.
சாலைகளில் கானல் நீர் தெரிந்தது. நெடுஞ்சாலைகளில் வாக னங்களில் செல்லவே முடி யாத அளவுக்கு வெப்பக் காற்று வீசியது.
கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே நடையைக் கட்டினர்.
நேற்று அதிக பட்சமாக வேலுார் மாவட் டத்தில் 104.5 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. வருகிற 4-ந் தேதி வெப்பத்தின் உச்ச பட்சமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
அக்னி தொடங்க 4 நாட் கள் இருக்கும் நிலையி லேயே வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பது வேலுார் நகர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மதுக்கூடங்கள் அனைத்தும் வருகிற 1-ந் தேதி மே தினம் என்பதால், அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடிவைக்க வேண்டும்.
எனவே மேற்படி தினத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது.
மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சமமந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் மேற்கொள்ளப்படும்.
அதே போல் அன்றைய தினத்தில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மதுக்கூட உரிமதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவர் அவர் கூறியுள்ளார்.
வேலூர் பெண் டாக்டர் கூட்டு பலாத்கார வழக்கு மகளிர் விரைவு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூரில் பெண் டாக்டர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இளம் சிறார் ஒருவரை தவிர்த்து மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி ரவிச்சந்திரன் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 22-ந்தேதி தாக்கல் செய்தார்.
அப்போது, குற்றஞ்சாட்டப் பட்டவர்கள மீது போலீசார் தாக்கல் செய்துள்ள 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையின் நகல்கள் 4 பேரிடம் வழங்கினர்.
இதன் அடிப்படையில் அவர்கள் தரப்பில் விரைவில் வழக்கறிஞர்கள் ஆஜரா வார்கள் என கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த வழக்கு கூடுதல் மகிளிர் கோர்ட்டில் இருந்து, மகளிர் விரைவு கோர்ட்டுக்கு மாற்ற பட்டுள்ளது.
வேலூர் அருகே படிக்க சொல்லி வற்புறுத்தியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரது மகள் பிரவீனா (வயது18) விநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டதால் இவருக்கு சரியாக படிப்பு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பரீட்சை நெருங்குவதால் மாணவியை அவரது பெற்றோர் நன்றாக படிக்குமாறு வற்புறுத்தினர்.
இதனால் மனமுடைந்த மாணவி பிரவீனா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரீட்சைக்கு இன்னும் நாட்கள் உள்ளன. நன்றாக முயற்சி செய்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். பெற்றோர்கள் நன்மைக்காகத்தான் மாணவர்களை படிக்குமாறு வற்புறுத்துகிறார்கள்.
இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே மாணவ மாணவிகள் எந்த காரணத்தைக் கொண்டும் தற்கொலை முடிவுக்கு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர் கோட்டை பூங்காவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேருக்கு 32 ஆண்டு ஜெயில் மற்றொருவருக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணும் அதே கடையில் வேலைபார்த்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி வேலை முடிந்த பின்னர் இரவு 9 மணி அளவில் அந்த இளம்பெண்ணும், வாலிபரும் வேலூர் கோட்டை பூங்காவிற்கு சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் தனியாக இருப்பதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கு இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள், இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்திருந்த நகைகளை பறித்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன் (வயது 43), வசந்தபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்ற கோழி (21), தொரப்பாடி பெரியஅல்லாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்ற கொய்யாமாரி (33) ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் விக்னேஸ்வரி ஆஜராகி வாதாடினார். நீதிபதி கலைபொன்னி விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு அளித்தார்.
அதில் இளம்பெண்ணை மிரட்டல், தாக்குதல், பொருட்கள் பறிப்பு, கடத்தல், பாலியல்பலாத்காரம் என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை உள்பட மொத்தம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த மாரிமுத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை சோதனை சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோரம் உள்ள 5 சோதனைச் சாவடிகளில் வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்கவும் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்கவும் தானியங்கிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்டியன்பேட்டை, முத்தரசிக்குப்பம், பத்தி ராப்பள்ளி, சயனகுண்டா மற்றும் பரதாரமி ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளன.
இங்கு ஏற்கனவே சாதாரண சிசிடிவி கேமராக்கள் உள்ளன, 24 மணி நேரமும் போலீசாரால் கண்காணிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள எல்லையோரம் உள்ள இந்த சோதனை சாவடிகள் வழியாக மணல் கடத்தல் மற்றும் திருட்டு வாகனங்களில் சென்றால் கண்டுபிடிக்கவும் அதிநவீன கேமராக்கள் பொருத்த உள்ளனர்.
இந்த கேமராக்கள் வாகனங்கள் மற்றும் நம்பர் பிளேட்களை படம்பிடிப்பது மட்டுமல்லாமல், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் மற்றும் சுரங்கத் துறை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரடி காட்சிகள் வழங்கும்.
“ஒவ்வொரு ஏ.என்.பி.ஆர். கேமராவும் 15 நாட்கள் சேமிப்பு திறன் கொண்டது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் குறைந்தது 2 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
இந்த கேமராக்கள், குறிப்பாக மாவட்ட காவல்துறை தலைமையகத்தில், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட திருடப்பட்ட வாகனங்கள் குறித்து எச்சரிக்கும். இந்த கேமராக்களின் ட.வி.ஆர். யூனிட்டில் வாகனங்களின் கருப்புப் பட்டியல் மற்றும் வெள்ளைப் பட்டியல் ஆகிய 2 வகையான பட்டியல்களைக் கொண்ட புதிய மென்பொருள் பதிவேற்றப்பட்டுள்ளது.
கருப்பு பட்டியலில் திருடப்பட்ட மற்றும் காணாமல் போன வாகனங்களின் விவரங்கள் உள்ளது. மற்ற அனைத்து வாகனங்கள்வெள்ளை பட்டியல் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் படம்பிடிக்கும். கருப்பு பட்டியலில் உள்ள வாகனங்கள் சிக்கினால், கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தானியங்கி எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும், இது அந்தந்த பகுதியில் உள்ள ரோந்து போலீசாருக்கு எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள வாகனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
மேலும் ஆந்திராவுக்கு மணல் உள்ளிட்டவற்றை கடத்தலை முழுவதிலும் தடுக்க முடியும். தற்போது, மாவட்டத்தில் 200 சிசிடிவி கேமராக்களை மாவட்ட காவல் துறை பராமரிக்கிறது. இந்த கேமராக்களுக்கு அடையாள எண்களை வழங்கும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
வேலூரில் குட்கா கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வேலூர் வழியாக தொடர்ந்து குட்கா பான் மசாலா போன்றவை கடத்தி வருகின்றனர்.
வேலூர் வடக்கு போலீசார் நடத்திய சோதனையில் குட்கா கடத்தி வந்த கிருஷ்ணகிரி பர்கூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.அதன்படி கலெக்டர் உத்தரவின் பேரில் தீபாராம் குண்டர் சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
திருவலத்தில் ஆங்கிலேயர் கால இரும்பு பாலத்தில் இணைப்புகள் சீரமைக்கப்படுவதால் இன்று முதல் 20 நாட்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பேரூராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ராஜேந்திரா இரும்பு பாலம் உள்ளது.
இந்த பாலத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சினிமாக்கள் மற்றும் டிவி சீரியல்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் இரும்பு பாலத்தில் செல்பி எடுத்துச் செல்வார்கள். இந்த பாலத்திற்கு மிக அருகே பொன்னையாறு-பாலாறு கலக்கிறது.
காட்பாடி நெடுஞ்சாலைத்துறையின் (கட்டுமானம் பணி மற்றும் பராமரிப்பு) கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் கனமழை காரணமாக பொன்னையாற்றில் அபாய அளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாலத்தில் உள்ள தார் சாலை வெகுவாக பாதித்துள்ளது.
ஆங்காங்கே விரிசல்களும் உருவாகியுள்ளன. குறிப்பாக கான்கிரீட் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. கம்பியில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது.
கடந்த 4 மாதங்களில் பலர் விபத்தில் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று முதல் இரும்பு பாலத்தில் உள்ள 11 இணைப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் இன்று காலை முதல் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுகந்தி கூறுகையில்சு மார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திருவலம் இரும்பு பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. பாலத்தில் உள்ள 11 இணைப்புகளை கான்கிரீட் கலவை கொண்டு சீரமைக்க வேண்டும்.
இந்த காங்கிரீட் இணைப்புகள் முழுவதுமாக அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர 20 நாட்கள் வரை ஆகலாம். அதுவரை பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
குடியாத்தம் வளத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் மாணவர் அதே வகுப்பில் படித்தது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வளத்தூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தங்களுடைய பிள்ளைகளை குடியாத்தம் நகரம் அல்லது வளத்தூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் 491 மாணவ மாணவிகள் வருகின்றனர் 17 ஆசிரியர்கள் உள்ளனர்.
100 சதவீதம் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே ஊரான வளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி புஷ்பராஜ் சங்கீதாவின் மகன் கணேசன் (வயது 16) கடந்த கடந்த வருட கல்வி ஆண்டில் கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.
தமிழக கல்வி துறை 10-ம் வகுப்பு அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது அதில் மாணவன் கணேசனும் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் அந்த மாணவன் பிளஸ் 1 வகுப்பில் சேராமல் தொடர்ந்து 10-ம் வகுப்பிலேயே படித்து வந்துள்ளார்.
பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் மெத்தனப் போக்கால் கணேசன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதை கவனிக்காமல் கணேசனை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்காமல் பத்தாம் வகுப்பிலேயே இருந்தும் கண்டுக்காமல் இருந்துள்ளனர் தற்போது மே மாதம் முதல் வாரத்தில் இந்த ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் தற்போது மாணவர் களுக்கான ஹால் டிக்கெட் பள்ளிகளுக்கு வந்துள்ளது.
அப்போது ஹால் டிக்கெட் சரிபார்ப்பு பணியில் இருந்த போது மாணவன் கணேசன் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கணேசனுடன் படித்தவர்கள் பிளஸ் 1 படித்து வரும் நிலையில் இந்த மாணவனை எப்படி 10-ம் வகுப்பிலேயே தொடர்ந்து படிக்க ஆசிரியர் கள் அனுமதித்தார்கள் என தெரியவில்லை இந்த சம்பவம் குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதால் கல்வித்துறை உயரதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் பஸ் படிக்கட்டில் தொங்கிய மாணவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
வேலூர்:
வேலூர் பாகாயம் முல்லை நகர் 2-வது தெருவைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு பஸ்சில் வந்து செல்கிறார்.
இன்று காலை பாகாயத்திலிருந்து பள்ளிக்கு பஸ்சில் வந்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி மாணவன் பயணம் செய்தார்.
விருப்பாட்சிபுரம் அருகே வந்தபோது திடீரென பஸ் டிரைவர் பிரேக் போட்டார். அப்போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த மாணவன் தவறி கீழே விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மேலும் தலையில் காயம் ஏற்பட்டது. பயணிகள் மாணவனை மீட்டு முதலுதவி அளித்து அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகர பகுதியில் ஓடும் டவுன் பஸ்களில் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள் ளனர். பொது மக்கள் மற்றும் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
எதையும் கண்டு கொள்ளாமல் சில தனியார் பஸ்களில் டிக்கெட் அதிகளவு ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்கட்டில் தொங்கும் அளவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் வகையில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்லும் நபர்கள் மீதும், ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத் தியுள்ளனர்.
வேலூர் கோட்டையில் கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்க கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் கோட்டையில் புகழ்மிக்க ஜலகண்டேஸ்வரர் கோவில் அருங்காட்சியகம் போன்றவை அமைந் துள்ளது. மேலும் கோட்டையினுள் கண்டி மகால், கிளை சிறை மற்றும் பழமையான கட்டிடங்கள் ஏராளமாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் கலெக்டர் குமரவேல் பாண்டியன் இன்று காலை கோட்டையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருவள்ளுவர் பல்கலைக் கழக கட்டிடம், தாலுகா அலுவலக கட்டிடம், கிளைச் சிறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
அந்த பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கவும், கட்டிடங்களில் வளர்ந்துள்ள செடி, கொடி, மரங்களை வெட்டவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கோட்டையில் உள்ள அனைத்து பழமையான கட்டிடங்கள் புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கோட்டை கண் காணிப்பாளர் ராமாராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் கோட்டையில் ஏராளமான பழமையான கட்டிடங்கள் அமைந்துள்ளன. இந்த கட்டிடங்கள் நாளடைவில் சிதிலமடைந்து வருகிறது.
இதை தடுக்க அனைத்துக் கட்டிடங்களையும் கணக்கெடுத்து புணரமைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக எந்தெந்த கட்டிடங்கள் புனரமைக்கப் படவேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் பழமையை பறைசாற்றும் வகையில் தற்போதும் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு விட வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






