என் மலர்
வேலூர்
வேலூர் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுக்க ஜெயிலில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி ஜெயிலர் குணசேகரன் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் ஜெயில் வளாகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள 4-வது கண்காணிப்பு கோபுரத்தின் கீழே மண்ணை தோண்டி மூடியது போன்று காணப்பட்டது. அதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர்.
அங்கு ஒரு செல்போன் மற்றும் பேட்டரி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஜெயிலர் குணசேகரன் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் அருகே ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மகன் ஆனந்தபாபு (வயது 25). சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு பணிக்கு செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் இருந்தார். அவரது குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி பணிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் மீண்டும் வேலைக்கு சென்ற ஆனந்தபாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்த பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தத்தில் வீட்டின் மீது மரம் விழுந்தததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக் காற்றுடன் மழை பெய்தது இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது.
குடியாத்தம் அடுத்த சென்ராம்பள்ளி பகுதியில் பெரிய புளியமரம் ஒன்று விவசாயி ரவி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் ரவியின் மனைவி குமாரி (வயது 50), அவரது பேரன்கள் யோகித் (4) குபேந்திரன் ( 1½) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த குமாரி மற்றும் சிறுவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் மீது விழுந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு அறுத்து அப்புறப்படுத்தினர்.
குடியாத்தம் பகுதி விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் தனியாக விஜய் நடித்த பீட்ஸ் படத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.
குடியாத்தம்:
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டபோது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் வந்தார்.
மாற்றுத்திறனாளிகளான நாங்களும் மனிதர்கள்தானே, நாங்களும் நடிகர்களின் ரசிகர்கள் தானே. ஆனால் எங்களால் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்க முடியவில்லை என கண்ணீர் மல்க பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனை கண்ட குடியாத்தம் பகுதி விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் தனியாக விஜய் நடித்த பீட்ஸ் படத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.
இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனமான கிரீன்வே டிரஸ்ட் உடன் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தொண்டரணி சார்பில் குடியாத்தம் சக்தி சினிமாவில் நடிகர் விஜய் நடித்த பீட்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று காலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காலையிலே மாற்றுத்திறனாளிகள், நடக்க இயலாதவர்கள் வீல் சக்கர வண்டியில் என 110 பேர் அவர்களின் உதவியாளர்கள் என மொத்தம் 175 பேர் திரையரங்கிற்கு வந்தனர். அவர்களை திரையரங்கத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரையரங்கு ஊழியர்கள் வரவேற்று பத்திரமாக அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
மேலும் அவர்களுக்கு இடைவேளையின் போது தேவையான தண்ணீர் பாட்டில் பாப்கான் உள்ளிட்டவைகளையும் இலவசமாக வழங்கினர்.
திரைப்படம் முடிந்தபின் மாற்றுத்திறனாளிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். படத்தை பார்த்த அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். சிறு குழந்தைகளாக இருந்த போது பெரியவர்கள் தூக்கிச்சென்று திரைப்படத்தை காண்பித்தனர். அதன்பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையங்கில் வந்து சினிமா பார்த்தது கனவு போல் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டபோது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் வந்தார்.
மாற்றுத்திறனாளிகளான நாங்களும் மனிதர்கள்தானே, நாங்களும் நடிகர்களின் ரசிகர்கள் தானே. ஆனால் எங்களால் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்க முடியவில்லை என கண்ணீர் மல்க பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனை கண்ட குடியாத்தம் பகுதி விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு முற்றிலும் தனியாக விஜய் நடித்த பீட்ஸ் படத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.
இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனமான கிரீன்வே டிரஸ்ட் உடன் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தொண்டரணி சார்பில் குடியாத்தம் சக்தி சினிமாவில் நடிகர் விஜய் நடித்த பீட்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று காலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காலையிலே மாற்றுத்திறனாளிகள், நடக்க இயலாதவர்கள் வீல் சக்கர வண்டியில் என 110 பேர் அவர்களின் உதவியாளர்கள் என மொத்தம் 175 பேர் திரையரங்கிற்கு வந்தனர். அவர்களை திரையரங்கத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரையரங்கு ஊழியர்கள் வரவேற்று பத்திரமாக அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
மேலும் அவர்களுக்கு இடைவேளையின் போது தேவையான தண்ணீர் பாட்டில் பாப்கான் உள்ளிட்டவைகளையும் இலவசமாக வழங்கினர்.
திரைப்படம் முடிந்தபின் மாற்றுத்திறனாளிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். படத்தை பார்த்த அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். சிறு குழந்தைகளாக இருந்த போது பெரியவர்கள் தூக்கிச்சென்று திரைப்படத்தை காண்பித்தனர். அதன்பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையங்கில் வந்து சினிமா பார்த்தது கனவு போல் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மஞ்சேரி குந்தன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி.இவரது மகன் தினகரன் (வயது 21).கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக பைக் விபத்தில் சிக்கியது.
அவரது உறவினர்கள் தினகரனை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தினகரன் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.
தினகரனின் இருதயம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், சிறுநீரகம் சி.எம்.சி. மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுவிழாவை முன்னிட்டு காப்பு கட்டப்பட்டது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குடியாத்தம் வருவார்கள்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததால், தமிழக அரசு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவு பக்தர்களை கொண்டு கடந்த ஆண்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி தேர், கெங்கையம்மன் சிரசு பூபல்லக்கு, ஆகிய விழாக்கள் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொண்டதால் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா 2 ஆண்டுகளுக்குப்பிறகு பக்தர்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது.
கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு தொடங்கியது. குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் ஊர்வலம் தொடங்கியது தொடர்ந்து முத்தாலம்மன் கோவில் சென்று அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலை வந்தடைந்தது.
சுமார் 3 மணிநேரம் மக்கள் வெள்ளத்தில் பூங்கரகம் மிதந்து வந்தது 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் இரவென்றும் பாராமல் காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். வாணவேடிக்கையும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் ஆய்வாளர் பாரி, ஊர்நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, நிர்மலா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
வருகிற 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும், வரும் 17ம-ந் தேதி பூப்பல்லக்கும் நடைபெறுகிறது.
குடியாத்தத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் பகுதி விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான நேரடி நெல் கொள்முதல் நிலையம் குடியாத்தம் காட்பாடி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நேற்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அலுவலர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.
முன்னாள் திமுக ஒன்றிய கழக செயலாளர் கள்ளூர்ரவி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏகாம்பரம், நகரமன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ், திமுக பிரமுகர்கள் எம்.முத்து, எம்.சத்யமூர்த்தி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் குடியாத்தம் பகுதி பட்டியல் எழுத்தர் ஜி. வடிவேல் அனைவரையும் வரவேற்றார்.குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்ஏ. கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் எஸ்.உதயகுமார், மாவட்ட செயலாளர் பி. ஜெயப்பிரகாஷ் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குடியாத்தம் பேர்ணாம்பட்டு, கே வி குப்பம் பகுதி விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை இங்கு கொண்டுவந்து பயன்பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
செங்கம் அருகே பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செங்கம்:
செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்தனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்து தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்ஜோதி, துணைத்தலைவர் சின்னபாப்பாமகாதேவன் உள்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராமபொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் ஆசிரியர் நிர்மலா நன்றி கூறினார்.
வேலூர் பஸ் நிலையத்தில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர்:
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், வேலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் விஜயகோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் காந்தி, பொருளாளர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது.
பஸ்சில் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் அடுத்ததாக அந்த ஊருக்கு செல்லும் பஸ்சில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக படியில் தொங்கியபடி பயணம் செய்து விபரீதத்தில் சிக்கி கொள்ள வேண்டாம்.
பஸ்சின் இருக்கையில் அமர்ந்தோ அல்லது உள்பகுதியில் நின்றோ பாதுகாப்பான முறையில் பயணம் செய்வோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் அவர்கள் தனியார் பஸ்களின் முன், பின்பக்க படிக்கட்டின் அருகே பயணம் செய்ய வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
இதில், வேலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடக்கிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நாளை 1-ந்தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 10 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என்று அனைத்து வட் டார வளர்ச்சி அலுவ லர்களுக்கும் ‘ கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 முடிய) குறித்து விரிவாக விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற் றம் மற்றும் நிதி செல வின விவரங்கள் குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறும லர்ச்சி திட்டம்- 2, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜூவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை இடம் பெற வேண்டும்.
கிராம சபைக்கூட் டங்களில் அனைத்து துறை உயர் அலுவலர் கள் பார்வையாளர்க ளாக கலந்து கொள்ள கலெக்டர் மூலம் உத் தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கிராம சபைக் கூட்டம் நடை பெறு வதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண் டல அலுவலர்கள் நியம னம் செய்தும், வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட 247 கிராம ஊராட்சிகளி லும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து உத்தர விடப்பட்டுள்ளது.
வேலூரில் 106 டிகிரி வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
வேலுார்:
வேலூர் மாவட் டத்தில் அக்னி தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் சூரியன் அனலை கக்கிக் கொண் டிருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்துக் கொண்டே போகிறது.
கடந்த ஒரு வாரத்துக்குள் வெப்பத்தின் அளவு 100 டிகிரிக்கு மேல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 104 டிகிரி சுட்டெரித்தது. இதனால், மக்கள் அனலில் தவித்தனர்.
நேற்று அதிகபட்சமாக நேற்று 106.3 டிகிரியாக வெப்ப அளவு பதிவானது. ஒரே நாளில் 2 டிகிரி எகிறி மக்களை பரிதவிக்க வைத்து வருகிறது கோடை வெயில்.
அக்னி மே 4-ந்தேதி தொடங்குகிறது, அதற்கு முன்னதாகவே நாளுக்கு நாள் எகிறும் இந்த வெப்பநிலை உயர்வை எண்ணி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
குடியாத்தத்தில் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைெபற்றது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. அதேபோல் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா மே 14-ந் தேதியும், சிரசு ஊர்வலம் மே 15-ந்தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான அனைத்து துறை முன்னேற்பாடுகள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்ஜெயன் தலைமை தாங்கினார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகர்மன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, தீயணைப்பு துறை அலுவலர் சரவணன், வனத்துறை அலுவலர் மாசிலாமணி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கீர்த்தனா, நீர்வள ஆதார துறை உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார்.
நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும் குடிநீர் வசதி சுகாதார வசதிகளை செய்து தர வேண்டும் தேரோட்டம் மாலை 6 மணிக்குள் நிலையை அடைய வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தேரை பொது ப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே தேரோட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விழா குழுவைச் சேர்ந்த வி.பிச்சாண்டி, ஆடிட்டர் கிருபானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.எஸ். சம்பத், திருப்பணிக்குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் விழாக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.அப்போது விழாக்குழுவினர்
இ-டெண்டர் முறை கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்கு மட்டும் கொண்டு வரப் படுவதால் மற்ற கோவில்களுக்கும் இ-டெண்டர் முறையை அமல்படுத்த வேண்டும்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்பதாக கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்
தொடர்ந்து அதிகாரிகள் திருவிழா பாதுகாப்பு குறித்து செய்யப்படும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.






