என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேர்வு செய்த போது எடுத்த படம்.
செங்கம் அருகே பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேர்வு
செங்கம் அருகே பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செங்கம்:
செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்தனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்து தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்குமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்ஜோதி, துணைத்தலைவர் சின்னபாப்பாமகாதேவன் உள்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராமபொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் ஆசிரியர் நிர்மலா நன்றி கூறினார்.
Next Story






