என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் மீது விழுந்த மரம்.
குடியாத்தத்தில் வீட்டின் மீது மரம் விழுந்தது
குடியாத்தத்தில் வீட்டின் மீது மரம் விழுந்தததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக் காற்றுடன் மழை பெய்தது இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது.
குடியாத்தம் அடுத்த சென்ராம்பள்ளி பகுதியில் பெரிய புளியமரம் ஒன்று விவசாயி ரவி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் ரவியின் மனைவி குமாரி (வயது 50), அவரது பேரன்கள் யோகித் (4) குபேந்திரன் ( 1½) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த குமாரி மற்றும் சிறுவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் மீது விழுந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு அறுத்து அப்புறப்படுத்தினர்.
Next Story






