என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்

    வேலூர் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். 

    ஜெயிலில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுக்க ஜெயிலில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

    அதன்படி ஜெயிலர் குணசேகரன் தலைமையிலான காவலர்கள் நேற்று முன்தினம் ஜெயில் வளாகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது அங்குள்ள 4-வது கண்காணிப்பு கோபுரத்தின் கீழே மண்ணை தோண்டி மூடியது போன்று காணப்பட்டது. அதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். 

    அங்கு ஒரு செல்போன் மற்றும் பேட்டரி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து ஜெயிலர் குணசேகரன் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×