என் மலர்
வேலூர்
வேலூரில் பிளஸ்-2 தேர்வை 16,107 பேர் எழுதுகின்றனர்.
வேலூர்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.வேலூர் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 7,527 மாணவர்கள் 8,580 மாணவிகள் உள்பட 16,107 பேர் தேர்வு எழுதுகின்றனர். திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் குடிநீர், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காப்பியடிப்பதை தடு ப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் இருப்பார்கள். அனைத்து மையங்களிலும் சோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்தில் வந்து விட வேண்டும். கால தாமதம் செய்யக்கூடாது. தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க சமூக ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தனர்.
வேலூர்:
வேலூரில் வெப்பத்தின் அளவு, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகப்படியான வெப்பம், தண்ணீர் தாகத்தால் சில நேரங்களில் மனிதர்கள் உயிரிழக்கும் அச்சம் உள்ளது.
மனிதர்களால் கூட தாங்க முடியாத வெப்பத்தை, சிறிய பறவைகள் எப்படி தாங்கும்?; வெயிலின் தாக்கம் காரணமாக பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகள் அடிக்கடி நடக்கின்றன. உணவில்லாமல் கூட ஒரு சில நாட்கள் வாழலாம்.
ஆனால், தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது என்பது, உலகம் அறிந்த உண்மை. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.ஒரு சிறிய முயற்சி தான், பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது. நமது சுற்றுப் புறங்களில் பறவைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, சிறிய குவளைகளில் தண்ணீர் வைக்கலாம்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மரங்களில் டப்பாக்களை கட்டி சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் தலைமையில் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
பறவைகளுக்கு தண்ணீர் வைத்தபின், அவை ஓரிரு நாட்கள் பழக்கமாகி, தண்ணீர் அருந்த வரும் போதும், தண்ணீர் அருந்திவிட்டு செல்லும் போதும் நாம் கவனிக்க தொடங்கி விடுவோம். அதனால் ஏற்படுகிற இன்பம் அலாதியானது.
இதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.வீடுகளில் தண்ணீர் வைப்பவர்கள், முயன்றவரை மண்பானையில் வைப்பது நல்லது. மண்பானையில் நீர் வைத்தால், அது வெகு நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும். பறவைகள் அதில் முங்கி குளித்து, உடல் சூட்டை தணித்துக் கொள்ளும். பிளாஸ்டிக் குவளைகளில் தண்ணீர் வைத்தால், அதன்மீது வெயில் படாமல், நிழலில் வைப்பது நல்லது என்றனர்.
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை புத்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது22). இவர் கானா பாடல்களை தானே எழுதி செல்போனில் படக்காட்சி மூலம் படமெடுத்து யூடியூபில் பரப்பி வந்துள்ளார்.
மேலும் இவர் ஏற்கனவே 2 கானா ஆல்பம் சாங் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகில் தனது நண்பர்களுடன் கானா ஆல்பம் சாங் எடுக்க சென்று அங்குள்ள தண்டவாள பகுதியில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக வந்த ஏதோ ஒரு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக்கண்ட அங்கிருந்த சக நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு அவரை பிடித்து கத்தி கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த மேல்பட்டி ரெயில்வே போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் பெருமுகையில் அரசு மணல் குவாரி செயல்படத் தொடங்கியது.
வேலூர்:
வேலூரை அடுத்த பெருமுகை அரும்பருத்தி பாலாற்றங்கரையோரம் 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குவாரியை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் லெனின் பிரான்சிஸ் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து பாலாற்றில் இருந்து டிராக்டர்கள், லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு, அவை பெருமுகையில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் மணல் விற்பனை இன்று தொடங்கியது.
மணல் குவாரியில் ஒரு யூனிட் மணல் ரூ.3,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குவாரியில் தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களுக்கும், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்களுக்கும் மணல் வழங்கப்படும். பொதுமக்களுக்கு மணல் தேவைப்பட்டால் இசேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டிடம் தொடர்பான வரைப்படத்தை இணைக்க வேண்டும்.
மேலும் மணல் எடுத்து செல்லும் வாகனத்தின் எண்ணையும் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். மணல் வழங்கும் நாளில் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதனை காண்பித்து மணலை பெற்றுக்கொள்ளலாம். லாரி டிராக்டர் போன்றவற்றின் மூலம் லாரி மணல் விற்பனை செய்யப்படுகிறது.
மாட்டு வண்டிகளுக்கு 10 சதவீதம் மட்டுமே மணல் விற்பனை செய்யப்ப–டுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் வரிசை அடிப்படையில் மணல் சப்ளை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்திரி கதகதப்பு தொடங்கியுள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தைகள் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே பல்வேறு நகரங்களில் வெயில் அதிகரித்தது. வேலூரில் படிப்படியாக அதிகரித்து அதிகபட்சமாக 108.1 டிகிரி வரை கொளுத்தியது.
தொடர்ந்து நேற்று 105.4 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையில் 105.2 டிகிரி வாட்டியது.
கரூர், பரமத்தி, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருத்தணி, நாமக்கல், தஞ்சை ஆகிய நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.
சென்னை மீனம்பாக்கத்தில் 99 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் வெயில் பதிவானது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி இன்று தொடங்கியது. 28ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதற்கு முன்னோட்டமாக இன்று காலையிலேயே வெயில் வாட்ட தொடங்கியுள்ளது. காலை 9 மணியளவிலேயே மதியம்போல் வெயில் சுட்டெரித்தது.
கத்திரி கதகதப்பு தொடங்கியுள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை குழந்தைகள் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது. நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும். 25 நாட்கள் தொடரும் வெயிலில் முடிந்த வரை வெளியில் செல்வதைத் தவிர்த்தால் உடலில் நீர் வற்றிப் போகும் அபாயத்தை தவிர்க்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதிகபட்சமாக வாணியம்பாடியில் 12.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. அக்னி வெயில் தொடங்கிய நேரத்தில் மழை பெய்ததால் அந்த பகுதிகளில் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவியது. ஏலகிரி மலையில் குளிர்ந்த காற்று வீசுகிறது.
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தை குறைக்க சிவன் கோவில்களில் தாராபிஷேகம் நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தராபிஷேகம் தொடங்கியது.
வழிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் அருகே 6ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தென் கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அக்னி காலகட்டத்தில் பரவலாக மழை பெய்தால் ஓரளவு வெப்பம் தணியும் என்று எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
வேலூர்:
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
ரம்ஜான் பண்டிகை வேலூர் மாவட்டத்தி லும் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
வேலூர் திருப்பத்தூர் ராணி ப்பேட்டை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தினார்கள்.
வேலூர்
வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். அதேபோல் வேலூர் டவுன் சைதாப்பேட்டை பெரிய மசூதி, சின்ன மசூதி, கஸ்பா மசூதி, டிட்டர்லைன் மசூதி, சைதாப்பேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி மற்றும் பேரணாம்பட்டில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, மேல்விஷாரம் மசூதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.
ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதியில் உள்ள உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர் வாணியம்பாடி ஈத்கா மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரம்ஜான் கூட்டுத் தொழுகைக்கு தடை செய்யப்பட்டிருந்தது.
வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து இடங்களிலும் கூட்டுத்தொழுகை நடந்ததால் இஸ்லாமியர்கள் உற்சா கத்துடன் காணப்பட்டனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருவண்ணாமலை
இதேபோல திருவண்ணாமலை, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், கண்ண மங்கலம், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குடியாத்தத்தில் ரம்ஜானை முன்னிட்டு ஏழை எளியோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரம்ஜானை முன்னிட்டு ஏழை எளியோருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தாஜூதீன் தலைமை தாங்கினார். நவாஸ், செயலாளர் குதுப்அலிஷா, பொருளாளர் முனவர்ஷரிப், மன்சூர்அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் குடியாத்தம் அமலுவிஜயன்எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், தாசில்தார் லலிதா ஆகியோர் கலந்து கொண்டு 750 ஏழை எளியோருக்கு ரம்ஜான் கொண்டாடும் வகையில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர்.
நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதால் குழந்தைகள் முதியவர்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 102 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதுநாள் வரையில் மிக உயர்ந்த வெப்பநிலையான 108.14 டிகிரி பதிவாகியுள்ளது.
இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை முதல் கத்தரிவெயில் காலம் தொடங்க உள்ளது. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
எனவே, முற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு செல்ல அவசியம் ஏற்பட்டால் உரிய பாதுகாப்புடன் அதாவது போதுமான குடிநீர், குடை, தொப்பி ஆகியவற்றுடன் செல்ல வேண்டும்.
பொதுமக்கள் வெயில் காலங்களில் அடிக்கடி தண்ணீர் மற்றும் நீர்மோர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் வெயில் காலங்களில் லேசான பருத்தி ஆடைகளை அணியுமாறும், இக்காலங்களில் இளநீர், நீர்ச்சத்துள்ள இயற்கையான பழவகைகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளுமாறும், செயற்கையான குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
மேலும் கோடைகாலத்தில் ஒருவருக்கு சுய நினைவு இழப்பு ஏற்படும் போது அவருக்கு முதலுதவியாக முதலில் குளிர்ந்த இடத்திற்கு மாற்றம் செய்து உடல் சூட்டை குறைக்க அவர் மீது குளிர்ந்த தண்ணீர் தெளிக்க வேண்டும்.
குடிதண்ணீர் வழங்க வேண்டும். பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பாக தினமும் மருந்துகளை எடுப்பவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் வெப்ப வாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் ஆவார்கள், இதன் அறிகுறிகள் அளவுக்கு அதிகமான வியர்வை அல்லது வியர்வை வராமல் இருப்பது, திடீர் மனநிலை மாற்றங்கள் இதய துடிப்பில் மாற்றங்கள் மயக்கம், தாகம், தலைவலி ஆகியவை அறிகுறிகளாக காணப்படும்.
மேலும் இவ்வாறான நிலையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை பருக வேண்டும்.
மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை நிழல் பகுதிகளில் வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவணம் அளித்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேலூரில் காப்பகத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
சோளிங்கர் அரக்கோணம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவரது தந்தை சோளிங்கரில் காப்பகம் நடத்தி வந்தார்.
இதில் 13 வயது மாணவி ஒருவர் தங்கி படித்து வந்தார். அந்த மாணவியை கார்த்திக் ஏமாற்றி பலாத்காரம் செய்தார்.
இதைத்தொடர்ந்து மாணவி காட்பாடியில் உள்ள காப்பகத்தில் வந்து தங்கினார். அங்கு வந்து கார்த்திக் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
காப்பக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
இந்த நிலையில் கார்த்திக் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பட்டது. வேலூர் ஜெயிலில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தை போலீசார் ஒப்படைத்தனர்.
லத்தேரி அருகே உள்ள கரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (26).இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி பலாத்காரம் செய்தார்.
அந்த சிறுமி கர்ப்பம் ஆனார்இதுபற்றிய புகாரின்பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரனை கைது செய்தனர்.
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட ராஜசேகரன் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
காட்பாடி அருகே உள்ள வடுகந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (21) கணேசன் என்கிற விநாயகம் (24) இவர்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் கோட்டையில் போலீஸ் குவிப்பு
வேலூர்:
வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்த வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்பட 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரையும் போலீசார் சோதனைக்கு உட்படுத்தினர். அதன்பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் கோட்டைக்கு வந்த கார், வேன் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.
ரம்ஜான் விடுமுறையை ஒட்டி இன்று கோட்டை பூங்காவில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்து சென்றனர்.
இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் சாலை விபத்துகளில் 68 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,
மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதைத்தவிர பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலையை கடக்கும் பகுதிகளில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் (பேரிகார்டு), மண் நிரப்பிய இரும்பு பேரல்கள் வைத்து வாகனங்கள் மெதுவாக செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சாலை விபத்தினால் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் நடந்த சாலை விபத்தில் 68 பேர் பலியாகி உள்ளனர். விபத்து தொடர்பாக 424 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்தில் 31 பேர் பலத்த காயமும், 325 பேர் லேசான காயங்களும் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 236 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிவேகமாக செல்வது, மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் தான் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பயணம் செய்வது நல்லது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை குறைப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 51 பேர் மட்டுமே பலியாகினர். இந்த ஆண்டு அதைவிட 17 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,
மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பங்கள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதைத்தவிர பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலையை கடக்கும் பகுதிகளில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் (பேரிகார்டு), மண் நிரப்பிய இரும்பு பேரல்கள் வைத்து வாகனங்கள் மெதுவாக செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சாலை விபத்தினால் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை காணப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் நடந்த சாலை விபத்தில் 68 பேர் பலியாகி உள்ளனர். விபத்து தொடர்பாக 424 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்தில் 31 பேர் பலத்த காயமும், 325 பேர் லேசான காயங்களும் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 236 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிவேகமாக செல்வது, மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றால் தான் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பயணம் செய்வது நல்லது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை குறைப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் 51 பேர் மட்டுமே பலியாகினர். இந்த ஆண்டு அதைவிட 17 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தத்தில் மின்வெட்டை கண்டித்து கிராம மக்கள் தாக்கிய மின்வாரிய ஊழியர்க 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது.
பல இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் பல இடங்களில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
குடியாத்தம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பங்களில் மீது விழுந்த மரக்கிளைகளை அகற்றி படிப்படியாக மின் வினியோகம் வழங்கினர்.
பாக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் பல மணி நேரமாகியும் மின்சாரம் வழங்கப்படாமல் இருந்தது.
குறிப்பாக கள்ளூர், பாக்கம், சீவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. மரக்கிளைகள் விழுந்த பகுதிகளை பாக்கம் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் பார்வையிட்டு மரக்கிளைகளை அப்புறப்படுத்தி படிப்படியாக மின்சாரம் வழங்கினார்கள்.
இருப்பினும் சிறிது நேரத்தில் லட்சுமணாபுரம், கள்ளூர் பகுதிகளில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து கிராமங்களை சேர்ந்தவர்கள் பாக்கம் துணை மின் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர்.
அப்போது கள்ளூர் கிராமத்தை சேர்ந்த மதன்குமார் உள்ளிட்ட சிலர் பல மணி நேரம் மின்தடை ஏற்படுத்தியது ஏன் என மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது என விளக்கியுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் துணை மின் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்தொடர்ந்து வந்த மதன்குமார் மற்றும் சிலர் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களை சித்தூர் கேட் அருகே வழி மடக்கி சரமாரியாக அடித்து தாக்கினர்.
இதில் இளநிலை பொறியாளர் என். பாலகிருஷ்ணன் (வயது 57), போர்மேன் ஆர்.ரவிச்சந்திரன் (60), ஒயர்மேன்கள் ஏ.பிரகாசம் (46), டி.என். பெருமாள் (55), மின் பாதை ஆய்வாளர் சேகர்(50), ஊழியர் ராஜ்குமார் (25) உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






