என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் பஸ் நிலையத்தில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

    வேலூர் பஸ் நிலையத்தில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம், வேலூர் மாவட்ட  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 

    நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் விஜயகோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் காந்தி, பொருளாளர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் அடுத்ததாக அந்த ஊருக்கு செல்லும் பஸ்சில் பயணம் மேற்கொள்ள வேண்டும். 

    அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக படியில் தொங்கியபடி பயணம் செய்து விபரீதத்தில் சிக்கி கொள்ள வேண்டாம். 

    பஸ்சின் இருக்கையில் அமர்ந்தோ அல்லது உள்பகுதியில் நின்றோ பாதுகாப்பான முறையில் பயணம் செய்வோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    பின்னர் அவர்கள் தனியார் பஸ்களின் முன், பின்பக்க படிக்கட்டின் அருகே பயணம் செய்ய வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை ஒட்டினார். 

    இதில், வேலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×