என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ பிடித்து எரிந்த மின்சாரம்.
    X
    தீ பிடித்து எரிந்த மின்சாரம்.

    வேலூர் தனியார் கண் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து

    வேலூர் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் ஊரீசு கல்லூரி எதிரே உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் 3-வது தளத்தில் தனியார் கண் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. 

    இதில் இன்று காலை பேட்டரி மற்றும் இன்வெட்டர் வைக்கப்பட்ட அறையில் மின்கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் புகைமூட்டம் எழுந்தது.உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். 

    மேலும் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 10 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து பேட்டரி இன்வெட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் ஆஸ்பத்திரியில் இருந்த பேட்டரி மற்றும் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் ஆஸ்பத்திரிலிருந்து நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×