search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடியாத்தம் வளத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் மாணவர் அதே வகுப்பில் படித்த அவலம் கல்வி அதிகாரிகள் விசாரணை

    குடியாத்தம் வளத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் மாணவர் அதே வகுப்பில் படித்தது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வளத்தூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தங்களுடைய பிள்ளைகளை குடியாத்தம் நகரம் அல்லது வளத்தூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் 491 மாணவ மாணவிகள் வருகின்றனர் 17 ஆசிரியர்கள் உள்ளனர்.

    100 சதவீதம் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே ஊரான வளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி புஷ்பராஜ் சங்கீதாவின் மகன் கணேசன் (வயது 16) கடந்த கடந்த வருட கல்வி ஆண்டில் கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். 

    தமிழக கல்வி துறை 10-ம் வகுப்பு அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது அதில் மாணவன் கணேசனும் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் அந்த மாணவன் பிளஸ் 1 வகுப்பில் சேராமல் தொடர்ந்து 10-ம் வகுப்பிலேயே படித்து வந்துள்ளார்.

    பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் மெத்தனப் போக்கால் கணேசன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதை கவனிக்காமல் கணேசனை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்காமல் பத்தாம் வகுப்பிலேயே இருந்தும் கண்டுக்காமல் இருந்துள்ளனர் தற்போது மே மாதம் முதல் வாரத்தில் இந்த ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் தற்போது மாணவர் களுக்கான ஹால் டிக்கெட் பள்ளிகளுக்கு வந்துள்ளது.

    அப்போது ஹால் டிக்கெட் சரிபார்ப்பு பணியில் இருந்த போது மாணவன் கணேசன் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கணேசனுடன் படித்தவர்கள் பிளஸ் 1 படித்து வரும் நிலையில் இந்த மாணவனை எப்படி 10-ம்  வகுப்பிலேயே தொடர்ந்து படிக்க ஆசிரியர் கள் அனுமதித்தார்கள் என தெரியவில்லை இந்த சம்பவம் குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதால் கல்வித்துறை உயரதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×