search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடியாத்தம் அருகே 14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் நடத்த முயற்சி

    குடியாத்தம் அருகே 14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் நடக்க இருந்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    குடியாத்தம்:

    தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

    இதன் காரணமாக கிராமப்புறங்களில் 18 வயதுக்கு கீழ் நடைபெற்று வந்த திருமணங்கள் பெரும்பாலும் குறைந்து விட்டன அப்படி நடைபெற இருந்தாலும் அது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பல ஆண்டு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி கூலித் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரே மகள் சிறுமி ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார். 

    தற்போது அந்த சிறுமிக்கு 14 வயதாகிறது. குடும்பம் நடத்த மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்ததால் அந்த சிறுமியின் தாயார் அந்த சிறுமிக்கு வசதியான இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தார். 

    அதற்கேற்றார் போல் தமிழக ஆந்திர எல்லையோரம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த வசதியான 40 வயது நபருக்கு ஏற்கனவே 2 திருமணம் உங்கள் ஆகியுள்ளது 3-வதாக இந்த 14 வயதான இந்த சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை குடியாத்தம் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் சிறுமியின் திருமணம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக அந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவை தொடர்ந்து குடியாத்தம் தாசில்தார் லலிதா, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் செயல்களின் சைல்டு ஹெல்ப்லைன் பணியாளர் மணிசேகரன் உள்ளிட்டோர் போலீசார் உதவியுடன் குறிப்பிட்ட அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் செய்ய இருப்பது தெரியவந்தது இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களிடம் 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து இன்று திங்கட் கிழமை நடைபெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் அந்த சிறுமியை வேலூரில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தின் முன் இன்று ஆஜர்படுத்துமாறு அந்த சிறுமியின் தாயாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×