என் மலர்tooltip icon

    வேலூர்

    • குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா43-ஆம் ஆண்டாக நடந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா, பேர்ணாம்பட்டு ரோட்டில் உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் 43-ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலையில் பம்பை வாத்தியங்களுடன் தாரை தப்பட்டை உடன் அருள்மிகு கெங்கையம்மன் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    அப்போது கிராம மக்கள் ஏராளமான கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர் தொடர்ந்து கெங்கையம்மன் சிரசு கோவிலில் பொருத்தப்பட்ட பின் ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனை தரிசித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஆலய நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • குடியாத்தம் அருகே உள்ள செட்டிக்குப்பத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கு திருமணம் நடக்க இருந்தது.
    • வேலூரை அடுத்த அத்தியூரை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் சைல்டுலைன் அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

    வேலூர்:

    வேலூரை அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சைல்டு லைன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அதில், வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள 16 வயது மாணவிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் 10-ந் தேதி மணமகனின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    இதேபோல் குடியாத்தம் அருகே உள்ள செட்டிக்குப்பத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கு 9-ந் தேதி நடக்க இருந்த திருமணமும், வேலூரை அடுத்த அத்தியூரை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவிக்கு 10-ந் தேதி நடக்க இருந்த திருமணமும் சைல்டுலைன் அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. 3 மாணவிகளின் பெற்றோரிடமும் பெண்ணுக்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என எழுதி வாங்கப்பட்டது. பின்னர் 3 பேரும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் தனக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, சாந்தன் கடிதம் அனுப்பி உள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. அதனால் இந்த வழக்கில் கைதான மற்ற 6 பேரும் தங்களையும் விடுதலை செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சாந்தன் தனது விடுதலை தொடர்பாக சிறை நிர்வாகம் மூலம் நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இலங்கையில் வசித்த எனது தந்தை உயிரிழந்தபோது இறுதிசடங்கிற்கு கூட செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது தாயார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    தாயாரை கவனிக்கவும், குடும்பத்தை பிரிந்து, அனைத்து ஆசைகளையும் மறந்து சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் எனக்கு குடும்பத்தோடு இணைந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அம்மன் சிரசு பொருத்தம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா கடந்த 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 2-ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    மூன்றாம் திரு நாளில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. 4-வது நாள் துர்க்கை அலங்காரத்தில் அம்மன் உற்சவம் நடைபெற்றது.

    5-வது நாள் சரஸ்வதி அலங்கார உற்சவம் 6-வது நாள் ஈஸ்வர பூஜை அலங்கார உற்சவம், 7-வது நாள் மகிடாசூர சம்மார அலங்கார உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று இரவு புஷ்ப பல்லக்கில் கெங்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று அதிகாலை கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் விஸ்வரூப காட்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கெங்கை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி சத்துவாச்சாரி பகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது. சிறுவர்க ளுக்கான பொழுதுபோக்கு ராட்டினங்கள் பல விதமாக கடைகள் கோவில் வளாகத்தில் களை கட்டுகிறது. ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் வளாகம் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலக சாலை, பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.

    இதேபோல வேலூர் கலெக்டர் அலுவலகம் மேம்பாலத்தின் அருகே சர்வீஸ் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    • கோழி வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும்.
    • நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கறிக்கோழிகளை கையில் ஏந்தியபடி நூதன முறையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குபேரன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாநிலத் தலைவர் லதா, மாநில பொருளாளர் வள்ளி, செயலாளர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கூலி உயர்வு சம்பந்தமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.ஒரு கிலோ கோழி வளர்ப்பு கூலியாக ரூ.20 வழங்க வேண்டும்.

    கறி கோழி வளர்ப்புக்கான கூலியை அரசு விலை நிர்ணயம் செய்து தொழிலாளர்களின் நலத்துறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கோழிக்குஞ்சு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

    கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு கோழிப்பண்ணைகள் அமைக்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் காப்பீடு மருத்துவ காப்பீடு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

    கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்கு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 21-ந் தேதி புதிய பஸ் நிலையம் திறப்பு விழா
    • 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூரில் வருகிற 21-ந் தேதி புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக பொதுமக்களிடம் தொகுதி வாரியாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    காட்பாடி தொகுதியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நாராயண நாடார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எல்லோருக்கும் குறை உண்டு நீங்கள் தேடிப்போய் முதியோர் பென்ஷன் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்து வருகின்றீர்கள்.

    இந்த நிலையை மாற்றுவதற்கு இதுபோல சிறப்பு குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது.

    முதியோர் பென்சன், பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவி பெறுவதற்கு இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொண்டு வாங்கித்தரும் நிலையை ஒழிக்கவே முதல்வர் பொதுமக்களிடம் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்த அறிவுறுத்தி உள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    மனுக்கள் கொடுப்பது பொதுவானது தான். கொடுத்த மனு மீது பயன் கிடைத்தது என்று சொல்ல வேண்டும்.

    நம்பிக்கையோடு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு நீர்நிலை புறம்போக்கு வசிப்போருக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்ட பிறகு அவர்களை மாற்ற வேண்டும்.

    மாவட்டத்தில் 100 சதவீதம் பெறப்படும் மனுக்களில் 80 சதவீத மனுக்களுக்கு கலெக்டர் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம். பி. எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, துணைமேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3,589 பொங்கல் தொகுப்புகள் மீதம்.
    • 4,39,395 ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.23 கோடியே 51 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 708 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் 4,50,709 அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

    பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் ரேசன் அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு பொருட்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள 4,39,395 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.23 கோடியே 51 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமிருந்த 3,589 மளிகைத்தொகுப்பு பொருட்கள் ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது.

    • கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
    • ஆர்ப்பாட்டம் செய்வதாக எச்சரிக்கை.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் அண்ணாதெரு, ஜி.பி.எம்.தெரு, கொசஅண்ணாமலை தெரு, தாடிஅருணாசல தெரு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    மேலும் கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கூரை சீட்டுகள் அகற்றப்பட்டது மேலும் கால்வாய் மீது கட்டப்பட்ட இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இந்நிலையில் குடியாத்தம் நகர செயலாளர் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, நகர்மன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஆர்.கே.அன்பு, நகர்மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி, சிட்டிபாபு, லாவண்யாகுமரன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான பி.மேகநாதன் உள்ளிட்டோர் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசை சந்தித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் ஒரு குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் பாரபட்சமான முறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதாகும் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் தெரிவித்தனர்.

    ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டினால் விரைவில் அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    • 7-வது பிளாக் பகுதியில் ரோந்து
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு சோதனைகள் செய்யப்படுகிறது.

    ஜெயில் வளாகத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையும் மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று ஜெயிலர் மோகன் குமார் என்பவர் 7-வது பிளாக் பகுதியில் ரோந்து சென்றார்.

    அங்குள்ள கழிவறைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு ஒரு செல்போன் பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தனர். அதனை மோகன்குமார் பறிமுதல் செய்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் செல்போன் பயன்படுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதருக்குள் பைக்கை பதுக்கி வைத்திருந்தனர்.
    • ஜி.பி.எஸ். கருவி சமிக்ஞைகளை கொண்டு மீட்பு.

    வேலூர்:

    வேலூரில் திருடுபோன விலையுயர்ந்த பைக்கை, ஜிபிஎஸ் மூலமாக சுமார் 70 கிலோமீட்டர் பின்தொடர்ந்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய பைக் வைத்துள்ளார்.

    அதனை வீட்டின் முன் பார்க்கிங் செய்ய இடமில்லாமல் அவ்வப்போது தாம் வசிக்கும் தெருவோரம் நிறுத்துவது வழக்கம்.

    அத்துடன் பாதுகாப்பு கருதி, பைக்கில் யாருக்கும் தெரியாத வகையில் ஜிபிஎஸ் கருவியை இணைத்த அவர், அதனை மொபைல் போனில் ஆப் மூலம் இணைத்து வைத்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பைக்கை தெருவோரத்தில் நிறுத்திய அவர், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    இதனையடுத்து உடனடியாக சத்துவாச்சாரி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார், தமது இருசக்கர வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்திய தகவலையும் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸ் வாகனத்தில் சென்றால் திருடர்கள் தப்பிவிடுவார்கள் என்று எண்ணிய போலீசார், வாடகை காரில் வாலிபருடன் தங்களது பயணத்தை தொடங்கினர்.

    பைக்கில் உள்ள ஜி.பி.எஸ். கருவி அனுப்பும் சமிக்ஞைகளை கொண்டு, அவ்வாகனம் எத்திசையில் பயணிக்கிறது என்பதை உற்றுநோக்கியவாறு தொடங்கிய இத்தேடுதல் பயணம், வேலூரை தாண்டி ஆற்காடு நகரத்திற்குள் நுழைந்தது. அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைந்தது.

    சுமார் 70 கிலோ மீட்டர் கடந்த பிறகு பெரணமல்லூரை அடைந்தனர். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாவல்பாக்கம் ஏரிபகுதியில் ஒரு புதருக்குள் கேட்பாரற்று கிடந்த பைக்கை மீட்டனர்.

    பைக்கின் சைட்லாக்கை உடைத்து, சாவி இல்லாமலேயே திருடியுள்ளனர். பைக் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரில் திருடுபோன பைக் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜிபிஎஸ் திருட்டை ஒழிக்கும் இரு சக்கர வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தினால் பைக் திருட்டு முற்றிலுமாக ஒழியும் என்கிறார்கள் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்.

    திருப்பட்டால் மொபைலில் அலாரம் அடிக்கும்.3 மாதங்களுக்கான தகவல்கள் சேமிக்கப்படும்.ஜிபிஎஸ் கருவியில் தண்ணீர் படாமல் பார்த்துகொள்வது நல்லது.தற்போது கல்லூரி செல்லும் இளைஞர்களை பெற்றோர் கண்காணிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது நல்லது., ஜிபிஎஸ் கருவியில் மூன்று மாதத்திற்கான பயண விவரங்களை சேமித்து வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    • போளூரை சேர்ந்தவர்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    வேலூர்:

    போளூர் அருகே உள்ள எட்டி வாடி பாலாத்து வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48). பூ வியாபாரி. தினமும் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு பூக்கள் கொண்டு செல்வது வழக்கம். நேற்று அதிகாலை பைக்கில் பூக்கள் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி வந்தார்.

    கணியம்பாடி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொது மக்கள் அவதி.
    • அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தல். அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தல்.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,700 ரேசன் கடைகள் உள்ளன. இந்த ரேசன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இவர்கள் பணிக்கு வராமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைக்கு சென்று வாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்க சேர்ந்த மாநில செயலாளர் செல்வம் கூறுகையில்:-

    அரசுப் பணியாளா்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை ரேசன் கடை பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும்.

    பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 9-ந் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் 1300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து கடைகளை திறக்கவும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×