என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் திருடுபோன"

    • புதருக்குள் பைக்கை பதுக்கி வைத்திருந்தனர்.
    • ஜி.பி.எஸ். கருவி சமிக்ஞைகளை கொண்டு மீட்பு.

    வேலூர்:

    வேலூரில் திருடுபோன விலையுயர்ந்த பைக்கை, ஜிபிஎஸ் மூலமாக சுமார் 70 கிலோமீட்டர் பின்தொடர்ந்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய பைக் வைத்துள்ளார்.

    அதனை வீட்டின் முன் பார்க்கிங் செய்ய இடமில்லாமல் அவ்வப்போது தாம் வசிக்கும் தெருவோரம் நிறுத்துவது வழக்கம்.

    அத்துடன் பாதுகாப்பு கருதி, பைக்கில் யாருக்கும் தெரியாத வகையில் ஜிபிஎஸ் கருவியை இணைத்த அவர், அதனை மொபைல் போனில் ஆப் மூலம் இணைத்து வைத்தார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பைக்கை தெருவோரத்தில் நிறுத்திய அவர், இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    இதனையடுத்து உடனடியாக சத்துவாச்சாரி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார், தமது இருசக்கர வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்திய தகவலையும் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸ் வாகனத்தில் சென்றால் திருடர்கள் தப்பிவிடுவார்கள் என்று எண்ணிய போலீசார், வாடகை காரில் வாலிபருடன் தங்களது பயணத்தை தொடங்கினர்.

    பைக்கில் உள்ள ஜி.பி.எஸ். கருவி அனுப்பும் சமிக்ஞைகளை கொண்டு, அவ்வாகனம் எத்திசையில் பயணிக்கிறது என்பதை உற்றுநோக்கியவாறு தொடங்கிய இத்தேடுதல் பயணம், வேலூரை தாண்டி ஆற்காடு நகரத்திற்குள் நுழைந்தது. அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைந்தது.

    சுமார் 70 கிலோ மீட்டர் கடந்த பிறகு பெரணமல்லூரை அடைந்தனர். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாவல்பாக்கம் ஏரிபகுதியில் ஒரு புதருக்குள் கேட்பாரற்று கிடந்த பைக்கை மீட்டனர்.

    பைக்கின் சைட்லாக்கை உடைத்து, சாவி இல்லாமலேயே திருடியுள்ளனர். பைக் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரில் திருடுபோன பைக் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜிபிஎஸ் திருட்டை ஒழிக்கும் இரு சக்கர வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தினால் பைக் திருட்டு முற்றிலுமாக ஒழியும் என்கிறார்கள் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்.

    திருப்பட்டால் மொபைலில் அலாரம் அடிக்கும்.3 மாதங்களுக்கான தகவல்கள் சேமிக்கப்படும்.ஜிபிஎஸ் கருவியில் தண்ணீர் படாமல் பார்த்துகொள்வது நல்லது.தற்போது கல்லூரி செல்லும் இளைஞர்களை பெற்றோர் கண்காணிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது நல்லது., ஜிபிஎஸ் கருவியில் மூன்று மாதத்திற்கான பயண விவரங்களை சேமித்து வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ×