என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடந்த காட்சி.
குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா
- குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா43-ஆம் ஆண்டாக நடந்து வருகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா, பேர்ணாம்பட்டு ரோட்டில் உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் 43-ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலையில் பம்பை வாத்தியங்களுடன் தாரை தப்பட்டை உடன் அருள்மிகு கெங்கையம்மன் சிரசு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
அப்போது கிராம மக்கள் ஏராளமான கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர் தொடர்ந்து கெங்கையம்மன் சிரசு கோவிலில் பொருத்தப்பட்ட பின் ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனை தரிசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஆலய நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.






