என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ரேசன் கடைகளில் மீதமிருந்த பொங்கல் தொகுப்பு ஆதரவற்ற இல்லங்களுக்கு வினியோகம்
- 3,589 பொங்கல் தொகுப்புகள் மீதம்.
- 4,39,395 ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.23 கோடியே 51 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 708 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் 4,50,709 அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து அரிசி பெறும் ரேசன் அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு பொருட்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள 4,39,395 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.23 கோடியே 51 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமிருந்த 3,589 மளிகைத்தொகுப்பு பொருட்கள் ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது.
Next Story