பைக் விபத்தில் பூ வியாபாரி பலி.

போளூரை சேர்ந்தவர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்:

போளூர் அருகே உள்ள எட்டி வாடி பாலாத்து வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48). பூ வியாபாரி. தினமும் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு பூக்கள் கொண்டு செல்வது வழக்கம். நேற்று அதிகாலை பைக்கில் பூக்கள் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி வந்தார்.

கணியம்பாடி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com