என் மலர்tooltip icon

    வேலூர்

    • வீட்டுமனை பட்டாக்களை அளந்து தராததால் விரக்தி
    • அதிகாரிகள் சமரசத்தை ஏற்று கலைந்து சென்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராமாலை ஊராட்சியை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ராமாலை அடுத்த கணகர் குட்டை பகுதியில் 50 பேருக்கு வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    இந்த வீட்டு மனை பட்டாவை பயனாளிகளுக்கு அளந்து உட்பிரிவு செய்து தரும்படி வீட்டுமனை பட்டா பெற்ற ஏழை, எளிய கிராம மக்கள் பலமுறை வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தும் இதனால் வரை அளந்து தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அரசால் வழங்கப்படும் பசுமை வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளை கட்ட முடிய முடியவில்லை எனவும் வீட்டுமனை பட்டா கொடுத்த விவரங்கள் வருவாய்த்துறை பதிவேடுகளில் ஏற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

    மேலும் கணகர்குட்டையில் பெறப்பட்ட வீட்டுமனைகளை பல ஆண்டுகளாக கட்டாதால் வேறு நபர்களுக்கு வழங்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

    இதனால் இங்கு வீட்டுமனை பட்டா பெற்ற ஏழை, எளிய கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும், குடியாத்தம் நகர் மன்ற உறுப்பினருமான பி. மேகநாதன், ராமாலை ஒன்றிய குழு உறுப்பினர் குட்டிவெங்கடேசன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வீட்டு மனை பெற்ற கிராம மக்கள் நேற்று தாலுகா அலுவலகத்தில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் மற்றும் தாசில்தார் லலிதா ஆகியோரிடம் வீட்டுமனை பட்டாக்களை உடனடியாக அளந்து தருமாறு மனு அளித்தனர்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் தனஞ்செயன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் இதனை தொடர்ந்து திரண்டு வந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • குடியாத்தம் நகராட்சி பகுதியில் நடந்தது
    • பணியாளர்களுக்கு அறிவுரை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத் தம் நகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட காட்பாடி ரோடு என்.ஜி.ஓ காலனியில் நேற்று முன்தினம் மாலை பெய்த மழை யால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் செல்ல ஆரம்பித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரரா சன், நகரமன்ற உறுப்பினர் பி.மேகநாதன், தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் விரைந்து சென்று நகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பொக் லைன் எந்திரம் மூலமாக கால்வாய்களில் அடைப்புகளை அகற்றி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு அப்பகுதியில் கழிவுநீர் சீராக செல்ல செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

    அப்போது குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். 

    • முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
    • சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தொற்று கண்டறியப்படும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலை யங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்டவற்றில் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் சளிமாதிரி சேகரிக்கப்படுகின்றன.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று செய்யப்பட்ட பரிசோத னையின் முடிவில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாதி தொடர்பான கேள்விக்கு கண்டனம்
    • ஏராளமானோர் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.

    பா.ஜ.க பட்டியல அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், பா.ஜ.க.மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் எஸ்.எல். பாபு, செந்தில், ஏழுமலை, மண்டல தலைவர் சிவா, ரவி உட்பட கலந்து கொண்டனர்.

    பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியல் சாதி தொடர்பாக கேள்வி கேட்க பட்டதை கண்டித்தும். அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    • கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி
    • பள்ளி உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு

    வேலூர்:

    தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பு சார்பில் இன்று காலை மாநில அமைப்பு செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு போலீசார் தாக்கப்பட்டதற்கும் மாணவியின் இறப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை எங்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தி.மு‌.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளியை சூறையாடியும் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து தீய சக்திகள் ஒன்று கூடி கட்டவிழ்த்து நடத்திய வன்முறை சம்பவங்கள் மனதை பதை பதைக்க வைக்கிறது.

    தமிழ்நாட்டில் இதுபோன்ற தாக்குதல் நடத்தும் தீய சக்திகளுக்கு எதிராக குற்றம் பாயும் வண்ணம் சட்டங்கள் இயற்ற வேண்டும். தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் மற்றும் பள்ளி சொத்துகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    மேலும் வேலூர் மாவட்டத்தில் 89 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 21 சிபிஎஸ்சி மற்றும் பள்ளிகள் உட்பட 175 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் இன்று 40 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    • மாணவி மர்ம சாவு எதிரொலி
    • போலீஸ் தீவிர கண்காணிப்பு

    வேலூர்:

    கள்ளக்குறிச்சி அருகே மாணவி மர்ம சாவு காரணமாக நேற்று தனியார் பள்ளி சூறையாடப்பட்டு பயங்கர கலவரமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

    மாணவர்கள் போராட்டத்தில் இறங்குவதை தடுக்க கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    வேலூர், திருவண்ணா மலை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 32 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் நுழைவுவாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு கல்லூரி வாசலில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌. அதேபோல பள்ளி பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு
    • 5 மூட்டை வெல்லம், பேரல், அடுப்புகள் அழிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலைப்பகுதியில் பால் சுனை, மாமரத்து பள்ளம், அல்லேரி, கங்காச்சாரம், பன்னீர் குட்டை ஆகிய இடங்களில் வற்றாத நீரோடைகள் உள்ளன. இதை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டுக்கு திடீரென சென்று ஆயிரம் அடி உயரம் செங்குத்தான சாத்கர் மலைப்பகுதியில் 4 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.

    கரடு முரடான மலை குன்றுகளுக்கு இடையே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று ஆய்வு செய்தார். கலெக்டர் இந்த மலைப்பகுதிக்கு வருவது குறித்து உள்ளூர் வருவாய் துறையினர் போலீசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    சப் கலெக்டர் தனஞ்செயன் மலைப்பகுதிக்கு சென்ற பிறகுதான் வருவாய்த்துறையினர் பேரணாம்பட்டு போலீசார் வனத்துறையினருக்கு தெரிய வந்தது. அவர்கள் அவசரமாக அவசரமாக மலைப்பகுதிக்கு பதறியடித்து சென்றனர்.

    கலெக்டர் மீது கல்லை உருட்டி விட்ட கும்பல்

    சாத்கர் மலைப்பகுதி கங்காச்சாரம் என்ற இடத்தில் நின்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியனை பார்த்து அங்கிருந்து 4 பேர் கொண்ட கள்ளச்சாராய கும்பல் மலையிலிருந்து கல்லை கலெக்டர் மீது உருட்டி விட்டனர்.

    அது சற்று தள்ளி வந்ததால் அவருக்கு எதுவும் ஆகவில்ல. இதை சற்றும் எதிர்பாராத கலெக்டர் மற்றும் வருவாய் துறையினர் திடுக்கிட்டனர். இதை யடுத்து சாராய கும்பல் அங்கிருந்து மலைப்பகுதியில் தப்பி ஓடிவிட்டனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத்தை அழைத்து கல்லை உருட்டிவிட்டு தப்பிய சாராய கும்பலை கைது செய்ய உத்தரவிட்டார்.

    சுமார் 4 மணி நேரம் கலெக்டர் அந்த மலையில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டார். அங்கு கள்ளச்சாயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 மூட்டை வெல்லம் பட்டைகள் மற்றும் 4 பேரல் ஊரல்கள் மற்றும் அடுப்புகள் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தார். அதன் பின்னர் பேரணாம்பட்டு ஒன்றியம் பத்தலப்பள்ளி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கலெக்டர் இந்த அதிரடி ஆய்வு பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேன்-பைக் நேருக்கு நேர் மோதியது
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு டவுன் அம்பேத்கர் தெருவைச் ஜூலை.17 முருகேசன் (வயது 48). இவருடைய மனைவி சுபா (38) தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று காலை முருகேசன் தனது மனைவி சுபாவை பள்ளியில் விடுவதற்காக மொபட்டில் அழைத்துச் சென்றார்.

    சின்னதாமல்செருவு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே பெரியதாமல்செருவு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், முருகேசனின் மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் கணவன், மனைவி மற்றும் சிறுவன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

    அதேபோல் பேரணாம்பட்டு அருகில் உள்ள பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (25) ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஷிப்ட் வேலை முடிந்ததும் லோகேஷ் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டை நோக்கி தனது மோட் டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மதினாப்பல்லி கிராமம் அருகில் வந்தபோது அந்த வழியாக எதிரே தேங்காய் பாரம் ஏற்றி வந்த மினி வேனும், அவரின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் லோகேஷ் படுகாயம் அடைந்தார். மினிவேன் டிரைவர் தப்பியோடி விட்டார்.

    • முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை வலியுறுத்தல்
    • கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எனினும் மக்களிடையே கொரோனா தொற்று பரவல் இருந்து வரு கிறது.

    வேலூருக்கு தினமும் வெளிமாநிலங்களில் இருந்து பலர் சிகிச்சைக்கு வருவதால் அவர்கள் மூலமாக தொற்று பரவல் இருந்து வருவதாக தெரிகிறது. இதை தடுக்க கண்காணிப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று வெளியான பரிசோ தனை முடிவில் வேலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதில் 7 பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • 2 பேர் கைது
    • வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் தனியார் மருத்துவமனை அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு இளவரசன் என்பவர் வேலை செய்து வருகிறார்.

    பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    நேற்று 3 பேர் ஒரே பைக்கில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். அப்போது பெட்ரோல் பங்க் வளாகத்தில் தங்களது பைக்கை நிறுத்திவிட்டு செல்ல முயன்றனர். இதற்கு இளவரசன் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பைக்கில் வந்த3 பேரும் இளவரசனை சரமாரியாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த இளவரசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இருந்தாலும் 3 பேரும் அவரை தொடர்ந்து தாக்கினர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

    தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    2 பேர் கைது

    இது குறித்து இளவரசன் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசனை தாக்கிய சைதாப்பேட்டையை சேர்ந்த கணபதி( வயது 26), அவரது சகோதரர் பார்த்தசாரதி (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • சுவர் இடிந்து கார், பைக் சேதம் ஒருவர் படுகாயம்
    • குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும் மாலை வேளை களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நேற்று பகலில் 95.5 டிகிரி வெப்பம் பதிவானது. பிற்பகலில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங் களில் மழைநீர் தேங்கியது.

    வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் அருகே சாலையோரம் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சில நிறுவனங்களும், குடோன்களும் உள்ளன.

    இந்த நிலையில் இரவு 9.30 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் மேல் தளத்தின் நடைபாதை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அதன் கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமானது. இதில் அங்கிருந்த ஒருவருக்கு காலில்காயம் ஏற்பட்டது.

    இதேபோல் குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசிய தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 3,689 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
    • பறக்கும்படை அமைத்து கண்காணிப்பு

    வேலூர்:

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 23 மையங்களில் இன்று நடைபெறும் 'நீட்' நுழைவுத் தேர்வில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். முதல் முறையாக நீட் தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., என இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கட்ட ாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் விஐடி பல்கலைக்கழகம், சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, காட்பாடி சன்பீம் பள்ளி, வேலூர் வி.வி.என். கே.எம் சீனியர் செகண்டரி பள்ளி, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம், காட்பாடி கிங்ஸ்டன் சர்வதேச பள்ளி, ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி, டி.கே.எம் மகளிர் கல்லூரி, காட்பாடி பிரம்மபுரம் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி என 10 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.

    அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை டிஏவி பள்ளியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் 12 மையங்களில் மொத்தம் 7,009 மாணவ, மாணவிகள் இன்று தேர்வில் பங்கேற்கவுள்ளனர். தேர்வுக் காக, சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 மையங்களில் 3,689 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

    புதிய கட்டுப்பாடுகள்

    இந்தாண்டு நீட் தேர்வில் ஒவ்வொரு அறையிலும் 24 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளனர். வழக்கம்போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அனுமதி இல்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் ஜாமர் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

    மேலும், டெல்லியில் இருந்தபடி அனைத்து தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வுகளை கண்காணிக்கும் வகை யில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.தேர்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுடன் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பள்ளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் முதல் முறையாக பறக்கும் படை அமைத்துள்ளனர். நடப்பு கல்வியாண்டு நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 8 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    ×