என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 32 கல்லூரிகளில் பாதுகாப்பு
- மாணவி மர்ம சாவு எதிரொலி
- போலீஸ் தீவிர கண்காணிப்பு
வேலூர்:
கள்ளக்குறிச்சி அருகே மாணவி மர்ம சாவு காரணமாக நேற்று தனியார் பள்ளி சூறையாடப்பட்டு பயங்கர கலவரமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
மாணவர்கள் போராட்டத்தில் இறங்குவதை தடுக்க கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணா மலை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 32 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த கல்லூரிகள் நுழைவுவாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு கல்லூரி வாசலில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல பள்ளி பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.






