என் மலர்
நீங்கள் தேடியது "கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்."
- வீட்டுமனை பட்டாக்களை அளந்து தராததால் விரக்தி
- அதிகாரிகள் சமரசத்தை ஏற்று கலைந்து சென்றனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராமாலை ஊராட்சியை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ராமாலை அடுத்த கணகர் குட்டை பகுதியில் 50 பேருக்கு வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த வீட்டு மனை பட்டாவை பயனாளிகளுக்கு அளந்து உட்பிரிவு செய்து தரும்படி வீட்டுமனை பட்டா பெற்ற ஏழை, எளிய கிராம மக்கள் பலமுறை வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தும் இதனால் வரை அளந்து தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அரசால் வழங்கப்படும் பசுமை வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளை கட்ட முடிய முடியவில்லை எனவும் வீட்டுமனை பட்டா கொடுத்த விவரங்கள் வருவாய்த்துறை பதிவேடுகளில் ஏற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் கணகர்குட்டையில் பெறப்பட்ட வீட்டுமனைகளை பல ஆண்டுகளாக கட்டாதால் வேறு நபர்களுக்கு வழங்க உள்ளதாகவும் தகவல் பரவியது.
இதனால் இங்கு வீட்டுமனை பட்டா பெற்ற ஏழை, எளிய கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளரும், குடியாத்தம் நகர் மன்ற உறுப்பினருமான பி. மேகநாதன், ராமாலை ஒன்றிய குழு உறுப்பினர் குட்டிவெங்கடேசன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வீட்டு மனை பெற்ற கிராம மக்கள் நேற்று தாலுகா அலுவலகத்தில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் மற்றும் தாசில்தார் லலிதா ஆகியோரிடம் வீட்டுமனை பட்டாக்களை உடனடியாக அளந்து தருமாறு மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் தனஞ்செயன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் இதனை தொடர்ந்து திரண்டு வந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






