என் மலர்
வேலூர்
- குடியாத்தம், அணைக்கட்டு சாலையில் மரங்கள் சாய்ந்தன
- தெருக்கள் சேரும் சகதியுமாக மாறியது
ராணிப்பேட்டை:
வேலூரில் பரவலாக மழை பெய்தது.
பரவலாக மழை
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று இரவு 7 மணி அளவில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
வேலூர், காட்பாடி, திருவலம், அணைக்கட்டு, குடியாத்தம், பள்ளி கொண்டா உள்ளிட்ட பகுதிகளின் பலத்த மழை பெய்து.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அணைக்கட்டு மற்றும் குடியாத்தம் சாலையில் சாலையோரம் இருந்த 2 புளியமரங்கள் நடு ரோட்டில் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
வேலூர் அம்பேத்கர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன. மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர்.
வேலூர் கன்சால்பேட்டை, சமத்நகர், பர்மா காலனி, வசந்தபுரம், இந்திரா நகர், முள்ளிப்பாளையம், திடீர் நகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வரும் பகுதிகளில் தெருக்கள் சேரும் சகதியுமாக மாறியது. அந்த பகுதி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
- தானாக தொடர்பு கொண்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்
- வலையில் இளைஞர்கள் விழக்கூடாது என உளவு பிரிவு அதிகாரி அறிவுறுத்தல்
வேலூர்:
ஐ.எஸ். இயக்கத்தில் சேர ஆர்வத்துடன் இருந்த ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவரை கண்டுபிடித்த ஐ.எஸ். அமைப்பினர் அவரை பயங்கரவாத குழுவில் இணைத்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மிர் அனாஸ் அலி (வயது 22) என்பவரை மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை அதிகாலை பிடித்தனர்.
என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான அவரிடம் சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற விசா ரணைக்குப் பிறகு அவரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
மிர் அனாஸ் அலி, தடை செய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்பின் வலையில் சிக்கியது எப்படி என்ற தகவல் தற்போது வெளி யாகியு ள்ளது. இது தொடர்பாக உளவுப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கைதான மிர் அனாஸ் அலி மேல்விஷாரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ மெக்கா னிக்கல் பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு முடித்து இறுதியாண்டுக்கு செல்ல உள்ளார். தினமும் காலை 6.30 மணிக்கு ஆம்பூரில் இருந்து கல்லூரி பஸ்சில் செல்லும் அவர் மாலை 7 மணிக்கு வீடு திரும்புவார். வெளி நபர்களிடம் யாரிடமும் பெரியளவு நட்பு இல்லாதவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆம்பூரில் தாயுடன் வசித்து வருகிறார். தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். வீட்டுக்கு ஒரே மகன் மிர் அனாஸ் அலி.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலே இருந்த மிர் அனாஸ் அலிக்கு இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்த செய்திகள் வீடியோக்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தில் சேருவது எப்படி என்ற யு-டியூப் தங்கள் மற்றும் சில இணையதளங்களை தேடியுள்ளார்.
அடிக்கடி அந்த தளங்களுக்கு வந்து சென்றதை கண்டுபிடித்த ஐ.எஸ் அமைப்பினர் மிர் அனாஸ் அலியை அவர்களாகவே தொடர்பு கொண்டுள்ளனர். அவரது ஆர்வத்தை கண்ட ஐ.எஸ். அமைப்பினர் டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குழுவில் இணைத்துள்ளனர்.
இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். குழுவில் ஐ.எஸ் அமைப்பின் உரையா டல்கள், சதித்திட்டங்கள் உள்ளிட்டவை பகிரப்பட்டுள்ளன. குழுவின் நடவடிக்கைகளில் மிர் அனாஸ் அலி தொடர்ந்து பங்கெடுத்துள்ளார்.
இந்த குழுவின் செயல்பாடுகளை இந்திய உளவு அமைப்பான 'ரா' பிரிவு சமீபத்தில் கண்டுபிடித்தனர். அந்த குழுவில் இருப்பவர்களை பட்டியலிட்டு நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கைது நடவடிக்கை நடைபெற்றது. இதில், ஆம்பூர் மாணவர் கைதான தகவல் மட்டுமே முதலில் வெளியானது.
மிர் அனாஸ் அலியின் வீட்டுக்குள் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் உள்ளூர் போலீசார் உதவியுடன் நாங்கள் புகுந்தோம். முதலில் எங்களை அவர்கள் திருடர்கள் என்றே கருதினர்.
நாங்கள் யார் என்பதை கூறியதும் மிர் அனாஸ் அலி புரிந்துகொண்டு தவறு செய்துவிட்டேன் என்று கூறினார். ஆம்பூரில் விசாரணை நடத்தினால் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினோம்.
இந்தியாவில் மிர் அனாஸ் அலியை போன்றவர்களை ஐ.எஸ் அமைப்பு தேடி வருகிறது. அவர்களின் வலையில் நமது இளைஞர்கள் விழக்கூடாது.
மிர் அனாஸ் அலி படித்த கல்லூரியில் இருந்து ஏற்கெனவே ஒரு இளைஞர் நக்சலைட் இயக்கத்தில் இணைந்துள்ளார். இப்போது, மிர் அனாஸ் அலி ஐ.எஸ் இயக்கத்தின் தொடர்பில் இருந்து கைதாகியுள்ளார். அந்த கல்லூரியை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி விழிப்புணர்வு
- பொதுமக்கள் பாராட்டினர்
குடியாத்தம்:
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதனை விளம்பரப்படுத்தும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், பள்ளி மாணவர்களுக்கிடையே செஸ் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பொதுமக்கள் இடையே கவரும் வகையில் குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு தனது சொந்த செலவில் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் செஸ் பலகை வடிவத்தை வர்ணம் தீட்ட ஏற்பாடு செய்தார்.
இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலக நுழைவு வாயில் செஸ் பலகை வடிவத்தில் கருப்பு வெள்ளை கட்டங்களால் வர்ணம் தீட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நகராட்சிக்கு வரும் பொதுமக்கள் இதனை பாராட்டினர்.
- நாக சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜிதெரு சக்தி ஸ்ரீ நாகாலம்மன் கோவிலில் நாக சதுர்த்தி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவை தொடர்ந்து நேற்று காலையில் கெங்கையம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்கள் ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டு நாகாலம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் முன்னிலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நகரமன்ற உறுப்பினர்கள் இந்துமதி கோபாலகிருஷ்ணன், தேவகிகார்த்திகேயன், என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், கெங்கையம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன், திமுக பிரமுகர்கள் ஜம்புலிங்கம், தண்டபாணி, மகாலிங்கம், பாபு உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர், அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
- மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ரமேஷை தாக்கினர்.
- குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் வள்ளிமலை அடுத்த கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40). சோளிங்கர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க.துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இவர் மேல்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரோடு அமைக்கும் பணிகளில் பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை இரவு நேரங்களில் பாதுகாக்கும் காவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் மர்ம நபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் ரமேஷிடம் நைசாக பேச்சுக் கொடுத்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ரமேஷை தாக்கினர்.
இதில் நிலை தடுமாறி படுகாயமடைந்த ரமேஷ் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ரமேஷை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மேல்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ரமேஷை தாக்கியவர்கள் பதிவாகியுள்ளார்களா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
- 10-ம் வகுப்போடு கல்வி தடைபடுகிறது
- கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்றுகுறைதீர்வு கூட்டம் நடந்தது. மூஞ்சூர் பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.அதில் மூஞ்சூர் பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 370 மாணவர்கள் படித்து வருகின்றனர்.10-ம் வகுப்பில் மட்டும் 78 மாணவர்கள் உள்ளனர்.
மலைவாழ் மக்கள் விவசாயிகள் மற்றும் கூலிதொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர்.அவர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு முடித்தவுடன் மேல் படிப்பிற்காக 10 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய உள்ளது. இதற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை.10-ம் வகுப்புக்கு பிறகு கல்வி தடைபடுகிறது. மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அரியூர் கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் அளித்த மனுவில் நாங்கள் 30 ஆண்டுகளாக அரியூர் கூட்டுறவு நூற்பாலையில் வேலை செய்து வந்தோம். எங்களுக்கு தற்போது ரூ.700 முதல் 800 வரை பென்ஷன் வழங்குகிறார்கள். மருத்துவம், சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடுகிறோம். எங்கள் வாழ்வாதாரத்திற்காக ரூ.3000 பென்ஷன் கொடுத்து உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
வேலூர் மாநகராட்சி 53 வது வார்டு நம்பிராஜபுரம் பொதுமக்கள் அந்த பகுதியில் வசித்து வரும் 44 குடும்பங்களுக்கு அரசு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
- பாதையை ஆக்கிரமித்து மணல் கொட்டி வைத்துள்ளதாக புகார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
வேலூர் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 66) இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். காயிதே மில்லத் அரங்கு முன்பு வரிசையில் நின்று மனு கொடுக்க சென்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அருகே சென்றதும் தான் மறைத்து வைத்து கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து மேஜையில் வைத்தார்.இதனை கண்டதும் அதிகாரிகள் திடுக்கிட்டனர்.
தனது வீட்டுக்கு செல்லும் வழி பாதையை ஆக்கிரமித்து மணல் கொட்டி வைத்துள்ளனர். இது பற்றி கேட்டால் தகராறு ஏற்படுவதாகவும் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்வேன் என முதியவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெட்ரோல் கேனை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். சத்துவாச்சாரி போலீசார் முதியவர் ரவியிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணல் குவாரி அமைக்க வலியுறுத்தல்
- மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி கேட்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ரேகா, சாம்பலா, சீதா, தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் மணல் குவாரி அமைக்க வேண்டும். காட்பாடி அரும்பருத்தி அரசு மணல் குவாரியில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அட்டையை வழங்க வேண்டும்.
ஏழை மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- 922 பேருக்கு சிகிச்சை அளித்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா பரதராமி ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் இந்திராகாந்தி, தியாகராஜன், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஏ.ஜே. பத்ரிநாத், கே.ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் அனைவரையும் வரவேற்றார்.வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பரதராமி மருத்துவ அலுவலர் ஞானப்பிரியா தலைமையில் மருத்துவ குழுவினர் 922 பேருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில் திமுக பேச்சாளர் குடியாத்தம்குமரன், தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்திமகாலிங்கம், ஊராட்சி மன்ற செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
- 80 அணிகள் பங்கேற்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் மற்றும் சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் வேலூர் மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் தேர்வு போட்டியும் நடைபெற்றது.
இந்த போட்டிகளுக்கு சீவூர் பெரிய தனக்காரர்கள், ஜாலி பிரதர்ஸ் குழுவினர் தலைமை தாங்கினார்கள். ஸ்ரீ காளியம்மன் அறக்கட்டளை, சீவுர் இளைஞர் அணியினர், விநாயகர் குழுவினர் முன்னிலை வகித்தனர்.
தொடக்க விழாவை ஒன்றியகுழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் நத்தம் பிரதீஷ், எஸ்.முரளிதரன் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ஏகாம்பரம், ஒன்றியகுழு உறுப்பினர் மனோகரன், திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
கபடி போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்தப் போட்டிகளில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 70 ஆண்கள் அணியும் 10 பெண்கள் அணியும் என மொத்தம் 80 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசும் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட கபடி கழக தலைவர் சீவூர்சேட்டு, மாவட்ட தலைவர் பூஞ்சோலை சீனிவாசன், சர்வதேச கபடி நடுவர் பி.கோபாலன், ஆசிய வலுதூக்கும் வீரர் சீ.மூர்த்தி யூ.லிங்கம் கே.எஸ்.பாபு உள்பட விழாவுக்கு குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- போலீசார் அதிரடி சோதனை
- 3 ஜோடிகள் சிக்கினர்
வேலூர்:
வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர்.
இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். வேலூர், காட்பாடி பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சிலர் விபசாரம் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் அரியூரில் உள்ள தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் அனைத்து தங்கும் விடுதிகளையும் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அரியூரில் உள்ள லாட்ஜ், தங்கும் விடுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்குள்ள 8 லாட்ஜூகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது லாட்ஜில் உள்ள அறைகளில் 3 ஜோடிகள் இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இனிமேலும் இது போன்ற விபச்சாரம் நடந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். லாட்ஜ் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் அரியூர் பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
- நெற்றியில் குங்குமம் வைக்க முயன்றதால் பரபரப்பு
- போலீசார் கடும் எச்சரிக்கை
பள்ளிகொண்டா:
பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி கிராமத் தில் நேற்று 15 பேர் கொண்ட ஒரு மத குழுவினர் வீடு வீடாக பைபிள் மற்றும் மதமாற்றம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டிருந்தனர்.
இதனை அறிந்த பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் குவிந்தனர்.
அவர்கள் நோட்டீஸ் வழங்கியவர்களிடம் நீங்கள் யார், எங்கிருந்து வருகின்றீர்கள் என்று கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் அவர்கள் வந்த காரில் புறப்பட்டு செல்ல முற்பட்டனர். உடனே, பாஜவை சேர்ந்தவர்கள் அந்த காரை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த பள்ளிகொண்டா போலீசார் வாக்குவாதத்தில் ஈடு பட்டவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். அப்போது, பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் மத மாற்றம் செய்ய வந்தவர்களிடம் நாங்கள் இதுபோன்று உங்கள் இடத்தில் வந்து மதமாற்றம் செய்தால் ஒப் புக்கொள்வீர்களா இல்லை சும்மாதான் இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், அவர்களின் நெற்றியில் இந்து முறைப்படி குங்குமம் பொட்டு வைக்க சென்றதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. நிலைமை கட்டுக்குள் அடங்காமல் கைமீறி சென்றதால் உடனடியாக குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் அதிரடிப் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருதரப்பை அழைத்து சமாதான பேச்சுவர்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் பள்ளிகொண்டா அடுத்த கூத்தம்பாக்கத்தில் இருக்கும் ஒரு வழிபாட்டுத்தலத்திலிருந்து பரப்புரை நிகழ்த்துவதற்கு வந்ததாக 15 பேர் கொண்ட குழுவி னர் போலீசாரிடம் தெரி வித்தனர்.
மேலும், இனி இது போன்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறான மதமாற்றம் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ் பிக்கள் எச்சரிக்கை விடுத்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.






