என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஸ் வடிவமைப்பில் நகராட்சி நுழைவு வாயிலில் வர்ணம் தீட்டப்பட்ட காட்சி.
குடியாத்தம் நகராட்சி நுழைவு வாயிலில் செஸ் வடிவமைப்பில் வர்ணம்
- ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி விழிப்புணர்வு
- பொதுமக்கள் பாராட்டினர்
குடியாத்தம்:
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதனை விளம்பரப்படுத்தும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், பள்ளி மாணவர்களுக்கிடையே செஸ் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பொதுமக்கள் இடையே கவரும் வகையில் குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு தனது சொந்த செலவில் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் செஸ் பலகை வடிவத்தை வர்ணம் தீட்ட ஏற்பாடு செய்தார்.
இதனை தொடர்ந்து நகராட்சி அலுவலக நுழைவு வாயில் செஸ் பலகை வடிவத்தில் கருப்பு வெள்ளை கட்டங்களால் வர்ணம் தீட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நகராட்சிக்கு வரும் பொதுமக்கள் இதனை பாராட்டினர்.






