என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் லாட்ஜிகளில் விபச்சாரம்
- போலீசார் அதிரடி சோதனை
- 3 ஜோடிகள் சிக்கினர்
வேலூர்:
வேலூருக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர்.
இதனை பயன்படுத்தி விபச்சார கும்பல் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். வேலூர், காட்பாடி பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சிலர் விபசாரம் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் அரியூரில் உள்ள தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடந்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் அனைத்து தங்கும் விடுதிகளையும் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அரியூரில் உள்ள லாட்ஜ், தங்கும் விடுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்குள்ள 8 லாட்ஜூகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது லாட்ஜில் உள்ள அறைகளில் 3 ஜோடிகள் இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இனிமேலும் இது போன்ற விபச்சாரம் நடந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். லாட்ஜ் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் அரியூர் பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.






