என் மலர்
நீங்கள் தேடியது "How did the student get involved?"
- தானாக தொடர்பு கொண்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள்
- வலையில் இளைஞர்கள் விழக்கூடாது என உளவு பிரிவு அதிகாரி அறிவுறுத்தல்
வேலூர்:
ஐ.எஸ். இயக்கத்தில் சேர ஆர்வத்துடன் இருந்த ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவரை கண்டுபிடித்த ஐ.எஸ். அமைப்பினர் அவரை பயங்கரவாத குழுவில் இணைத்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மிர் அனாஸ் அலி (வயது 22) என்பவரை மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை அதிகாலை பிடித்தனர்.
என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான அவரிடம் சுமார் 15 மணி நேரம் நடைபெற்ற விசா ரணைக்குப் பிறகு அவரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
மிர் அனாஸ் அலி, தடை செய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்பின் வலையில் சிக்கியது எப்படி என்ற தகவல் தற்போது வெளி யாகியு ள்ளது. இது தொடர்பாக உளவுப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கைதான மிர் அனாஸ் அலி மேல்விஷாரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ மெக்கா னிக்கல் பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு முடித்து இறுதியாண்டுக்கு செல்ல உள்ளார். தினமும் காலை 6.30 மணிக்கு ஆம்பூரில் இருந்து கல்லூரி பஸ்சில் செல்லும் அவர் மாலை 7 மணிக்கு வீடு திரும்புவார். வெளி நபர்களிடம் யாரிடமும் பெரியளவு நட்பு இல்லாதவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆம்பூரில் தாயுடன் வசித்து வருகிறார். தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். வீட்டுக்கு ஒரே மகன் மிர் அனாஸ் அலி.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலே இருந்த மிர் அனாஸ் அலிக்கு இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்த செய்திகள் வீடியோக்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தில் சேருவது எப்படி என்ற யு-டியூப் தங்கள் மற்றும் சில இணையதளங்களை தேடியுள்ளார்.
அடிக்கடி அந்த தளங்களுக்கு வந்து சென்றதை கண்டுபிடித்த ஐ.எஸ் அமைப்பினர் மிர் அனாஸ் அலியை அவர்களாகவே தொடர்பு கொண்டுள்ளனர். அவரது ஆர்வத்தை கண்ட ஐ.எஸ். அமைப்பினர் டெலிகிராம் செயலியில் உள்ள ஒரு குழுவில் இணைத்துள்ளனர்.
இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தான், பங்களாதேஷ், காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். குழுவில் ஐ.எஸ் அமைப்பின் உரையா டல்கள், சதித்திட்டங்கள் உள்ளிட்டவை பகிரப்பட்டுள்ளன. குழுவின் நடவடிக்கைகளில் மிர் அனாஸ் அலி தொடர்ந்து பங்கெடுத்துள்ளார்.
இந்த குழுவின் செயல்பாடுகளை இந்திய உளவு அமைப்பான 'ரா' பிரிவு சமீபத்தில் கண்டுபிடித்தனர். அந்த குழுவில் இருப்பவர்களை பட்டியலிட்டு நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கைது நடவடிக்கை நடைபெற்றது. இதில், ஆம்பூர் மாணவர் கைதான தகவல் மட்டுமே முதலில் வெளியானது.
மிர் அனாஸ் அலியின் வீட்டுக்குள் சனிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் உள்ளூர் போலீசார் உதவியுடன் நாங்கள் புகுந்தோம். முதலில் எங்களை அவர்கள் திருடர்கள் என்றே கருதினர்.
நாங்கள் யார் என்பதை கூறியதும் மிர் அனாஸ் அலி புரிந்துகொண்டு தவறு செய்துவிட்டேன் என்று கூறினார். ஆம்பூரில் விசாரணை நடத்தினால் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினோம்.
இந்தியாவில் மிர் அனாஸ் அலியை போன்றவர்களை ஐ.எஸ் அமைப்பு தேடி வருகிறது. அவர்களின் வலையில் நமது இளைஞர்கள் விழக்கூடாது.
மிர் அனாஸ் அலி படித்த கல்லூரியில் இருந்து ஏற்கெனவே ஒரு இளைஞர் நக்சலைட் இயக்கத்தில் இணைந்துள்ளார். இப்போது, மிர் அனாஸ் அலி ஐ.எஸ் இயக்கத்தின் தொடர்பில் இருந்து கைதாகியுள்ளார். அந்த கல்லூரியை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






