search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூஞ்சூர் பட்டு அரசு பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்
    X

    மூஞ்சூர் பட்டு அரசு பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்

    • 10-ம் வகுப்போடு கல்வி தடைபடுகிறது
    • கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்றுகுறைதீர்வு கூட்டம் நடந்தது. மூஞ்சூர் பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.அதில் மூஞ்சூர் பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 370 மாணவர்கள் படித்து வருகின்றனர்.10-ம் வகுப்பில் மட்டும் 78 மாணவர்கள் உள்ளனர்.

    மலைவாழ் மக்கள் விவசாயிகள் மற்றும் கூலிதொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர்.அவர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு முடித்தவுடன் மேல் படிப்பிற்காக 10 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய உள்ளது. இதற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை.10-ம் வகுப்புக்கு பிறகு கல்வி தடைபடுகிறது. மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    அரியூர் கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் அளித்த மனுவில் நாங்கள் 30 ஆண்டுகளாக அரியூர் கூட்டுறவு நூற்பாலையில் வேலை செய்து வந்தோம். எங்களுக்கு தற்போது ரூ.700 முதல் 800 வரை பென்ஷன் வழங்குகிறார்கள். மருத்துவம், சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடுகிறோம். எங்கள் வாழ்வாதாரத்திற்காக ரூ.3000 பென்ஷன் கொடுத்து உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி 53 வது வார்டு நம்பிராஜபுரம் பொதுமக்கள் அந்த பகுதியில் வசித்து வரும் 44 குடும்பங்களுக்கு அரசு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    Next Story
    ×