என் மலர்tooltip icon

    வேலூர்

    • போலீசாருக்கு பாதுகாப்பு பணி இடங்கள் ஒதுக்கி எஸ்.பி. பேட்டி
    • பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர்

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார், ஆயுதப்படை போலீசார் அதிவிரைவு படை மற்றும் கமாண்டோ படை போலீசாருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது.

    பணியிடம் ஒதுக்கீடு

    இதையடுத்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.அப்போது அவர் கூறியதாவது, பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் சிலைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள சூழ்நிலை குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு போலீஸ்க்கு 3 விநாயகர் சிலை பாதுகாப்பு பணி வழங்க படலாம். எந்தவித அசம்பாவித பணிகளும் நடைபெறாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். போலீசாருக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார்.

    இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    30 மற்றும் 31-ந் தேதிகளில் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 62 பேரிடம் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதையில் 1888 சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன மேலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் 3 டிரோன் கேமராக்கள் மூலம் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்

    மொபைல் கமெண்ட் கண்ட்ரோல் யூனிட் ஒன்றும் கண்காணிப்பு பணியில் புதிதாக ஈடுபடுத்தப்பட உள்ளது என்றார்.

    • வேலூர் கலெக்டர் தகவல்
    • இலக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    வேலூர்:

    ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 1,171 விவசா யிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் விவ சாயத்துக்கான இலவச மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 2001 முதல் மின் இணைப்பு கோரி லட்சக்க ணக்கான விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தனர்.

    இதில், 2001 முதல் 2016-ம்் ஆண்டு வரை பதிவு செய்து காத்திருக்கும் ஒரு லட்சம் விவ சாயிகளுக்கு ஓராண்டுக்குள் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டில் மின்வாரியத் தின் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் மாவட் டத்தில் மட்டும் 1,171 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள் ளதாக கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம், வேலூர் மாவட்டத்துக்கு அளிக்கப்பட்டிருந்த இலக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏராளமானோர் பங்கேற்றனர்
    • 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது இதில் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி சங்கர் நோயாளிகளை பரிசோதனை செய்தார்.

    வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சிடி ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது . காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி. சங்கர் தலைமை தாங்கி நோயாளிகளை பரிசோதனை செய்து முகாமைதொடங்கி வைத்தார். இந்த முகாமில் இலவசமாக அறுவை சிகிச்சை ஆலோசனை, மகளிருக்கான மருத்துவ ஆலோசனை, இருதய ஆலோசனை, சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கான ஆலோசனை, டயாலிசிஸ் சிகிச்சை, தோல் வியாதி ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தேவைப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழும், அதில் அல்லாதவர்கள் சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    .இந்த முகாமில் மூலம் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக பிரச்சனைகள், தோல் வியாதிகள் ஆகியவற்றுக்கு மகப்பேறு நிபுணர் டாக்டர் லதா லட்சுமி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கரண்சங்கர், அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் சீனிவாசன், தோல் மருத்துவ சிகிச்சை டாக்டர் ரூபன் ஜேசுதாஸ், சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    • வேலூர் மாவட்ட தனியார் மழலையர் தொடக்கப்பள்ளிகள் நல சங்கம் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் நல சங்க ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது.

    கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் முரளி, செயலாளர் சிவபெருமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். வரும் ஆண்டுகளில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு பணத்தை அதே கல்வியாண்டில் வழங்க ஆவண செய்ய வேண்டும்

    பள்ளிகளுக்கு சுகாதார சான்று இணையதளம் வழியாக பெற அரசு வழிவகை செய்ய வேண்டும்.

    இணையதளம் வழியாக பள்ளிகளின் புதுப்பித்தல் கருத்துருக்கள் ஏற்கப்பட்டு சான்று வழங்க வேண்டும்.

    மாணவர்கள் மாற்று சான்றிதழ் இன்றி எந்த பள்ளியிலும் சேர்க்கை செய்ய அனுமதிக்க கூடாது. பாலர் வகுப்பு, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்களுக்கு ஆதார் எண் இணைக்க தடை செய்ய வேண்டும். ஏற்கனவே அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் அனுமதி பெற்று பல ஆண்டுகளாக இயங்கி வரும் அனைத்து பள்ளிகளுக்கும் டி.டி.சி.பி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

    இனி புதிய பள்ளிகளுக்கு மட்டுமே டி.டி.சி.பி அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சைமன் நன்றி கூறினார்.

    • பேரணாம்பட்டு தோட்டத்தில் சிறுத்தை சாவில் நடவடிக்கை
    • பவர் பேட்டரி பாக்ஸ், ஒயர் பறிமுதல்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள சேராங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேணுமூர்த்தி.விவசாயி. வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ளஇவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 26-ந் தேதி சுமார் 4 முதல் 5 வயதுள்ள ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

    இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி மருத்துவ குழுவினரால் அதே இடத்தில் சிறுத்தை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது.

    இதன் பின்னர் மாவட்ட வன அதிகாரி (பொறுப்பு) நாகசத்தீஷ்கிடி ஜாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது சிறுத்தை மின்வேலியில் சிக்கி இறக்க வில்லை.விஷம் கலந்த உணவு என எதுவும் வயிற்றில் இல்லை. காலியாக உள்ளது.

    சிறுத்தை இறந்து 3 நாட்களுக்கு மேலானதால் சரியாக எதுவும் சொல்ல முடியவில்லை.சென்னை உயர் நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் சிறுத்தையின் உடல் பாகங்கள், தடயங்களை சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பின்னர் சிறுத்தையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.

    இந்நிலையில் சிறுத்தை சடலமாக இறந்து கிடந்த விவசாயி வேணுமூர்த்தியின் பக்கத்து விவசாய நிலத்தின் உரிமையாளர்சேராங்கல் கிராமத்தை சேர்ந்த மோகன் பாபு (40) என்பவரை நேற்று மாலை திடீரென பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் பிடித்து விசாரணைக்கு வனசரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    விவசாயி மோகன் பாபு மீது தனது விவசாய நிலத்திற்கு வனத்துறை அனுமதியின்றி வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு பேட்டரி மூலம் இணைப்பு கொடுத்து சைரன் சிஸ்டம் ஏற்படுத்தியதாகவும், இதனால் வன விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இறக்க வாய்ப்புள்ளதால் 1972 வன உயிரின சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    மேலும்மோகன் பாபுவிடமிருந்து பவர் பேட்டரி பாக்ஸ், சைரன், ஒயரை பறிமுதல் செய்தார்.

    • 10, 12, 14 வயது பிரிவினருக்கு போட்டிகள் நடந்தது
    • வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் பதக்கங்களை வழங்கினர்.

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தடகள போட்டி இன்று நடந்தது.

    தடகள அறக்கட்டளை சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் 10,12, 14 வயது பிரிவினருக்கு போட்டிகள் நடந்தது.

    இதில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு 60 மீட்டர் ஓட்டப்போட்டியும், 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 80 மீட்டர் ஓட்ட போட்டியும், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 100 மீட்டர் ஓட்ட போட்டி, உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

    10 வயது குட்பட்டவர்களுக்கான 60 மீட்டர் ஓட்ட போட்டியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி மஹதி தங்கப்பதக்கமும், மேல் மாயிலை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஹரிணி வெள்ளி பதக்கமும் வென்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தடகள அறக்கட்டளை நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், யுவராஜ் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.

    • குடும்பத் தகராறால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி வஞ்சூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி சுகன்யா (வயது 26) தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை இதன் காரணமாக குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த சுகன்யா நேற்று வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு விருதம்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விருதம்பட்டு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் சத்துவாச்சாரி இந்திராநகரை சேர்ந்தவர் சேரளி (42) சிக்கன் கடை நடத்தி வந்தார். இதில் போதுமான வருமானம் இல்லை. இதனால் அவர் மனம் உடைந்தார். நேற்று வீட்டில் இருந்த சேரளி அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்துவாச்சாரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1,500 போலீஸ் குவிப்பு
    • ஊர்வல பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக வேலூர், காட்பாடி, குடியாத்தம் உட்கோட்ட அளவில் விழா தொடர்பான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், சிலைகளை கரைக்க உள்ள ஏரிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதிக்கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூத்தி மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

    இதில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் செப்டம்பர் 2-ந் தேதி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    விழாவை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ''மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.

    அனைத்து ஊர்வல பாதையிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • நுரையீரலில் கட்டி, ரத்தக் கட்டிகளை அகற்ற எண்டோஸ்கோபி சிகிச்சை
    • 50-க்கும் மேற்பட்ட நுரையீரல் சிகிச்சை துறை டாக்டர்கள் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் நறுவீ மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை துறை சார்பில் , மூச்சுக்குழாய் அழற்சி கார ணமாக நுரையீரலில் ஏற் படும் கட்டி மற்றும் ரத்த கட்டிகளை, அறுவை சிகிச் சையின்றி எண்டோஸ் கோபி முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து 2 நாள் நேற்று கருத்தரங்கம் தொடங்கியது.

    சிகிச்சை நுரையீரல் பிரிவு தலைமை டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ் வரவேற் றார். மருத்துவமனை மருத் துவ சேவைகள் தலைவர் அரவிந்தன் நாயர், மருத் துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ் முன் னிலை வகித்தனர்.

    கருத்த ரங்கின் நோக்கம் குறித்து , செயல் இயக்குனர் பால் ஹென்றி விளக்கினார். " தொடர்ந்து, நறுவீ மருத் துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் , கருத்தரங்கினை தொடங்கி மலரை வெளி யிட்டு பேசியதாவது:-

    நறுவீ மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன், பல நோய்களுக்கான சிகிச்சை அளிக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையாக உள்ளது . மருத் துவத்துறையில் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க நாட்டின் ஹென்றி போர்டு மருத்துவ தொழில்நுட் பத்தை அடிப்படையாக கொண்டு, நாட்டில் ஒரே மருத்துவமனையாக நறுவீ மருத்துவமனை விளங்குகிறது.

    நுரையீரல் சிகிச்சை என்பது முன்பு பொது வான காசநோய், இதய நோய் சம்பந்தப்பட்டதா கவே இருந்தது. கரோனா தொற்றுக்கு பிறகு, நுரை யீல் சிகிச்சை துறையின் அவசியம், தேவை முக்கி யமானதாக மாறியுள்ளது.

    மூச்சுக்குழாயின் உட்புறத்தில் உருவாகும் அழற்சி காரணமாக, நுரையீரலில் ஏற்படும் கட்டி, ரத்த கட் டிகளை அகற்றுவதற்கு, இதுவரையிலும் அறுவை மூலமாகவே சிகிச்சை செய்யப்பட்டது .

    இப்போது எண் டோஸ்கோபி முறையில் அறுவைசிகிச்சை இன்றி நுரையீரல் கட்டியை அகற்றி சிகிச்சை அளிக்கும் முறை கடைப்பிடிக்கயப்ப டுகிறது. இதனால், நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாமல் , புறநோயாளிகளாக சிகி ச்சை பெற்று குணமடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் செகந்தி ராபாத் யசோதா மருத்துவ மனை டாக்டர் அரிகிஷண் குனகுன்ட்லா, ஐதராபாத் மலகாப்பேட் யசோதா மருத்துவமனை டாக்டர் விஸ்வேஸ்வரன், விசாகப் பட்டினம் இதய மருத்துவ மனை டாக்டர் பாலராஜூ தடிகொண்டா, பெங்களூர் நாராயணா ஹெல்த் சிட்டி டாக்டர் கேதார் ஹிப்பாரே, அகமதாபாத் ஸ்பர்ஷ் மருத் துவமனை டாக்டர் பிரதீப் தாபி, நாராயணி மருத்து வமனை டாக்டர் கிருஷ்ண பிரியா, வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரி டாக் டர் பிரியா என 50-க்கும் மேற்பட்ட தேசிய அளவி லான நுரையீரல் சிகிச்சை துறை சிறப்பு டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர். நறுவீ மருத்துவமனை நுரையீரல் துறை டாக்டர் ராஜகோபால் நன்றி கூறினார் .

    • 1 - ந்தேதி நடக்கிறது
    • கல்லூரி முதல்வர் தகவல்

    வேலூர்:

    வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை 4 - ம் கட்ட கலந்தாய்வு வருகிற 1 - ந் தேதி நடைபெற உள்ளது.

    எனவே தமிழ் , ஆங்கிலம், வரலாறு , பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடப்பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் என சுழற்சி வரிசையில் 889 மாணவர்களும் 44 மாணவிகளும் சேர்க்கப்பட உள்ளனர்.

    அதன்படி 274.9 முதல் 255 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வு காலை 9:30 மணி அளவில் தொடங்குகிறது.

    மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வந்து அவற்றை ஒப்படைத்து சரிபார்க்கப்பட்ட பின்னரே சேர்க்கை உறுதி செய்யப்படும் என கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.

    • ராணுவ வீரர் கைது
    • போலீசார் விசாரணை

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் விலாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 38 ) , ராணுவ வீரர்.

    விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள இவர் குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று குடும்பத் தகராறு காரணமாக கையில் இருந்த கத்தியால் மனைவியை குத்த முயன்றுள்ளார். அப்போது அவரது மனைவியின் தம்பி கார்த்தி (32) தடுத்துள்ளார்.

    இதில் அவருக்கு கத்தி வெட்டு விழுந்தது . இதனால் காயமடைந்த கார்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகு றித்து கே.வி.குப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோசடியில் ஈடுபட்டனரா? போலீசார் விசாரணை
    • 44 சிம்கார்டுகள் பறிமுதல்

    வேலூர்:

    வேலுார் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு காந்திநகர் பகுதியில் வாகன பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பைக் ஒன்று வந்தது. அதில் முன்பக்கத்தில் மட்டும் பதிவெண் எழுதப்பட்டிருந்தது. பின் பக்கம் எழுதப்பட வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் வந்த 2 பேரை விசாரித்தனர்.அவர்கள் கொணவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) ஷேக் தஸ்தகீர் (21) என்பது தெரியவந்தது.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது 44 சிம் கார்டுகள் இருந்தன.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் அபர்ணா, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் விசாரணை நடத்தினர்.

    இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துள்ளனர். போலியான அடையாள அட்டை மூலம் சிம்கார்டு களை பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.

    முதல்கட்ட விசாரணையில், 'ஜெராக்ஸ் எடுக்கும் சில கடைகளில், இவர்கள் தொடர்பு வைத்துக் கொண்டு, அங்கு ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வருபவர்களுக்கு தெரியாமல், ஒரு ஜெராக்ஸ் அதிகப்படியாக எடுத்துக் கொண்டு, அதற்கு குறிப்பிட்ட பணம், அந்தக் கடைக்காரர்களுக்கு கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

    மேலும், இந்த ஆதார் கார்டில் வேறு போட்டோ ஒட்டி, அதன் மூலமாக 100க்கும் அதிகமான சிம்கார்டுகளை பெற்று, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    சைபர் கிரைம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×