என் மலர்tooltip icon

    வேலூர்

    • விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவு
    • பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடை வைப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வழி முறைகள் வெளியிடப்பட்டது.

    அதன் விவரம் வருமாறு:-

    பட்டாசு கடைகளில் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே இருப்பு வைத்து வியாபாரம் செய்ய வேண்டும். தனி நுழைவு வாயில் மற்றும் அவசர வழியானது வெளிப்புறம் திறக்கும் வகையில் அமைக்கப்பெற்றிருக்க வேண்டும்.

    பட்டாசு வகைகள் வைக்கப்பட்டுள்ள அறை மக்கள் நடமாட்டம் இல்லாமலும், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் இல்லாத இடமாகவும் அமையபெறுதல் வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

    பராமரிப்பு பணிகள் அல்லது பட்டாசு இருப்பு அளவினை உயர்த்துவது தொடர்பாக அல்லது வேறு எந்த பணிகள் செய்தாலும் உரிமம் வழங்கும் அதிகாரிக்கு எழுத்துபூர்வமாக தெரிவித்து உரிய அனுமதி பெற்ற பின்பே செய்யப்பட வேண்டும். வெடிவிபத்தோ அல்லது தீ விபத்தோ அல்லது பட்டாசு கடையில் இருப்பின் அளவு குறைந்தாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும். உரிமம் வழங்கும் அலுவலருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

    பட்டாசு வகைகள் அரசால் அனுமதிக்கப்பட்டதாகவும்

    உரிய அனுமதி பெற்ற முகவரிடம் மட்டுமே வாங்கப்பட வேண்டும். குளோரேட் கொண்டு தயாரிக்கப்படும் வண்ண மத்தாப்பூ, சங்குசக்கரம், பூத்தொட்டி ஆகியவற்றிலிருந்து மற்ற பட்டாசு வகைகள் தனியாக வைத்து விற்பனை செய்யப்பட வேண்டும்.

    சீனாவில் தயாரிக்கப்படும் பட்டாசு வகைகளை எக்காரணத்திற்கொண்டும் இருப்பு வைப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது.

    வேறு வகையான வெடி பொருட்களோ துப்பாக்கி மருந்துகளோ வெடி பொருள் கலவைகளோ வைத்திருக்க கூடாது.

    பட்டாசு இருப்பு வைத்திருக்கும் பகுதி 9 சதுர மீட்டருக்கு குறையாமலும் 25 சதுர மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    மின் சாதனங்களும், கம்பிகளும் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டிருக்க வேண்டும். மின் சாதனங்கள் கட்டிடத்தின் வெளிபுறத்தில் அமைக்கப்பட வேண்டும்.

    எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் இருக்கும் ஸ்தலத்திற்கும் இடையே 15 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.

    அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் திரி கொண்ட எண்ணெய் விளக்குகள், பெட்டர்மாஸ் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

    உரிமதாரர்கள் மற்றும் பணியாளர்கள் அணைவரும் தீத்தடுப்பு சாதனங்களை (தீயணைப்பான்கள்) அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான வழிமுறையை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    மேலும் தீத்தடுப்பு சாதனங்கனை உரிய தேதியில் புதுப்பித்தும், எந்நேரத்திலும் பயன்படுத்தும் வகையிலும் மற்றும் மணல் வாளிகள் தண்ணீர் வாளிகள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது
    • பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்வையிடலாம்

    வேலூர்:

    உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு அக்டோபர் 7,8,9ஆகிய 3 நாட்கள், வி.ஐ.டி.யில் இஸ்ரோவின் கண்காட்சி நடைபெற உள்ளது.

    இந்த கண்காட்சியை ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜீவ் சிங் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த கண்காட்சியை பார்வை யிடலாம், இதற்கு கட்டணம் கிடையாது. இந்த கண்காட்சியில் ராக்கெட் மற்றும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் தகவல்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

    அதேபோல் அறிவியல் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு வினாடி வினா, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, போஸ்டர் மற்றும் மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்தப் போட்டியில் மாணவர்கள் பங்கேற்க https://wsw.vit.ac.in இணையதளம் வழியாக மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் ஸ்பேஸ் வாக் (Space Walk) என்ற விழிப்புணர்வு நடைபயணம் அக்டோபர் 8-ந்தேதி காலை சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து வி.ஐ.டி. பல்கலைக் கழகம் வரை நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு நடை பயணத்தில் மாணவர்கள் பங்கு கொள்ளலாம்.

    இவ்வாறு வி.ஐ.டி. சார்பில் வெளியி டப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலூரில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பேச்சு
    • மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம்அளித்தல் துறை இணை மந்திரி நாராயண சாமி கலந்து கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி பேசியதாவது:-

    மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக 60 சதவீதம் நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் மத்திய அரசு வழங்கும் நிதி குறித்து ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பினார்‌. மத்திய அரசு வழங்கும் நிதியை ஏன் மறைக்கிறீர்கள்.

    இந்த கூட்டத்தில் மத்திய அரசு நிதி உதவி பெறும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்.ஒருதுறை மட்டுமே பங்கேற்பது ஏற்புடையதாக இல்லை என்றார். தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய மந்திரி ஆய்வு செய்தார்.

    • தொடர் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பினர்
    • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது

    வேலூர்:

    அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே விடுமுறை நாட்களாகி விட்டது. இடையில் 3ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும் என்ற நிலை. இதனால், வெளி யூர்களில் பணிபுரிபவர்கள் நவராத்திரியை கொண்டா டுவற்காக, சொந்த ஊருக்கு செல்ல மூட்டைமுடிச்சு களுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (செப். 30ம் தேதி) ஊருக்கு வந்தனர்.

    தொடர்ந்து, 5 நாட்க ளுக்கு பின்னர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு திரும்பினர். இதனால், வேலூர் புதிய பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. குறிப்பாக, சென்னை, சேலம், பெங்களூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல் லும் பஸ்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடம்பிடித்தனர்.

    பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால், வேலூர் புதிய பஸ் நிலைய பகுதி நேற்று இரவு வரை பரபரப்பாக காணப்பட்டது.

    • சோதனைச்சாவடிகளில் 3 சுழற்சிகளாக ஆய்வு
    • சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

    வேலூர்:

    ஆந்திர மாநிலத்துடன் வேலூர் மாவட்ட எல்லை சுமார் 80 கிலோமீட்டர் கொண்டதாக உள்ளது. பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சயனகுண்டா சோதனைச்சாவடிகள் உள்ளன. கஞ்சா கடத்தல் தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால், மாவட்ட எல்லையில் உள்ள சில கிராமங்கள் வழியாக சுலபமாக வந்து செல்ல முடியும் என கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்துடன் இணைக்கும் கிராம அளவிலான அனைத்து பாதைகள் குறித்த விவரங்களையும் உட்கோட்ட அளவில் போலீசார் சேகரித்துள்ளனர்.

    இங்கு சோதனையை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து இனி வேலூர் மாவட்டம் வழியாக ஒரு கிலோ கஞ்சாவும் கடத்த முடியாத அளவுக்கு சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தர விட்டுள்ளார்.

    மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் 3 சுழற்சிகளாக சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பஸ்களில் இன்று போலீசார் சோதனை நடத்தினர்.

    • நள்ளிரவில் கொட்டியது
    • தெருக்கள் சேரும் சகதியுமானது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் சுட்டெரித்தது.2 நாட்களாக மேகம் மந்தமாக காணப்பட்டது. நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. வேலூர் நகர பகுதியில் 27.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    இடி மின்னலுடன் நகர பகுதியில் மழை பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடப்பதால் சில தெருக்கள் சேரும் சகதியமாக காட்சியளித்தன.

    காட்பாடியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது அங்குள்ள பல தெருக்களில் இன்னும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த தெருக்களில் சேரும், சகதியுமாக காட்சி அளித்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்பாடியில் 41 மில்லிமீட்டர் மழை பதிவானது. பொன்னை திருவலம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செங்கம், வந்தவாசி பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆரணி செய்யாறு பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏரி கால்வாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது.

    அந்த பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக ஆரணியில் 61 மீட்டர் மழை பதிவானது. சேத்துப்பட்டு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.

    வேலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    வேலூர்-27.2, காட்பாடி-41, பொன்னை- 16.4, திருவலம்-17.6, மேல்ஆலத்தூர்-2.2. ஆரணி-61, செய்யாறு-58, வந்தவாசி-35, சேத்பட்டு-7, வெம்பாக்கம்-13.  

    • பள்ளிகொண்டாவை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 38). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜகுரு வேலூரில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தினமும் அவர் பைக்கில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அன்பூண்டி வங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது பைக் சாலை தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுருவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து மனைவி குழந்தைகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    ராஜகுருவிற்கு பின் புறம் தலையில் மட்டும் அடிபட்டுள்ளது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழக்காமல் தப்பித்து இருக்கலாம்.

    அவர் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதினாரா அல்லது வேறு ஏதாவது வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம் பேத்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(48). கட்டிட தொழிலாளி.

    இவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையி லிருந்து சேலம் நோக்கி சென்ற கார் மூர்த்தி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி இறந்து விட்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • 13 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி வழியாக சென்ற ெரயிலில் கடத்திய 13 கிலோ கஞ்சாவை ெரயில்வே பாதுகாப்பு படைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

    ெரயில்வே பாதுகாப் புப்படை சென்னை டிவி ஷன்'சீனியர் கமிஷனர் கே.செந்தில், அரக்கோணம் ெரயில்வே பாதுகாப் புப்படை உதவி கமிஷனர் ஏ.கே.பிரீத் உத்தரவின் பேரில் காட்பாடிரயில்வே பாதுகாப்புப்படை உதவி சப் இன்ஸ்பெக்டர் சஜிகு மார்,கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலை டாடா நகரில் இருந்து காட்பாடி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் - செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ெரயிலின் பொதுப் இதில் பெட்டியில் பயணிகளின் சீட்டின் அடியில் 6 பாலி தீன் பைகள் இருந்ததை கண்டறிந்து அதை சோத னையிட்டபோது, அதில் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மொத்த எடை 13 கிலோவாகும்.

    இதன் மதிப்பு 72 லட் சத்து 60 ஆயிரம் ஆகும்.இவற்றை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப்ப டையினர் அதை போதை பொருள்நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது பற்றி வேலூர் போதை பொருள் நுண் ணறிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • ராணுவ வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • போலீசார் விசாரணை

    பொன்னை:

    காட்பாடி தாலுகா வள்ளிமலை அடுத்த மேல்போடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். விவசாயி. இவரது மகன் தமிழ்ச்செல்வன்(21), கல்லுாரி மாணவன்.

    அதே பகுதியைச் சேர்ந்த அரிதாஸ் (24) ராணுவ வீரர். இவர்கள் இருவரும் நேற்று மாலை மேல்போடிநத்தம் கிராமத் தில் இருந்து அருகில் உள்ளராமாபுரம் கிராமத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதிய விபத்தில் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராணுவ வீரர் அரிதாஸ் கால்களில் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மேல்பாடி போலீசார் மாண வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல், அரிசியில் ‘அ’ எழுதி சேர்த்தனர்
    • பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது

    வேலூர்:

    விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை காரணமாக, பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.

    விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை.

    குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    இன்று விஜயதசமியை முன்னிட்டு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வித்யாரம்பம் நடைபெற்றது. பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைக்கு முதன் முதலாக எழுத கற்றுக் கொடுத்து, பள்ளியிலேயே சேர்த்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 510 அரசு தொடக்கப்பள்ளி, 151 அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 118 அரசு உதவி பெறும், தனியார் தொடக்கப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது.

    குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து நெல், அரிசி போன்றவற்றில் 'அ' எழுத வைத்து பெற்றோர்கள் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது.

    அரசு தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் கொண்டு வந்து சேர்த்தனர்.

    • சுமதி கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
    • சுமதிக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசியை சேர்ந்தவர் சுமதி (வயது 40). கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். விசாரணை கைதியான இவர் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சுமதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×