என் மலர்
வேலூர்
- இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது
- மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் சுஜாதா கமிஷனர் அசோக்குமார் தலைமை யில் நடைபெற்றது. இதில், மாநகராட்சி பொறியாளர்கள், ஒப்பந்த தாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் முதல் கட்டத்தில் 10 வார்டுகளில் தொடங்கப்பட்ட பணிக்காக முத்துமண்டபம் பகுதியில் 10 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 10 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு கொடுத்ததும் இந்த மையம் முறையாக செயல்பட தொடங்கும்.
இரண்டாம் கட்ட பணி 3 பகுதிகளாக நடைபெற்று வருகிறது. சர்கார்தோப்பு பகுதியில் 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்ட முதல் பகுதியில் மொத்தமுள்ள 105 கி.மீ தொலைவு பணியில் 92 கி.மீ வரை முடிந்துள்ளது. இதில், 3-ல் 2 கழிவு நீரேற்று நிலைய பணிகள் முடிந்துள்ளன. இரண்டாம் பகுதியில் 87 கி.மீ தொலைவு பணிகளில் 70 கி.மீ அளவுக்கு முடிந்துள்ளது. 6 கழிவு நீருந்து நிலையங்களில் 3 பணிகள் முடிந்துள்ளன. பகுதி 3 திட்டத்தில் 242 கி.மீ தொலைவு பணிகளில் இதுவரை 196 கி.மீ முடிந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறும்போது, ''வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை டிசம்பர் 31-ந் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
முடிக்கப்பட்ட பணிகளை 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் எங்களிடம் ஒப்படைக்க இறுதிக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற வேண்டிய பணிகளுக்காக பகுதி, பகுதியாக அனுமதி பெற்று இறுதிக் கட்ட பணிகளை முடிக்கவுள்ளோம். அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி பொறியாளர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அதிக ஆட்களை வைத்து பணிகளை முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்'' என்றார்.
- வி.ஐ.டி. இஸ்ரோ கண்காட்சி தொடக்க விழாவில் வேந்தர் விசுவநாதன் பேச்சு
- பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்
வேலூர்:
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு விஐடியில் இஸ்ரோவின் 3 நாள் கண்காட்சியை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இந்தியா வளர்ந்த நாடுகளோடு விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தோடு போட்டி போட்டு வருகிறது. அமெரிக்காவும், சோவியத் யூனியன் நாடுகளும் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் போட்டி யிட்டு வந்த காலம் மாறி தற்போது இந்தியாவும் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.
தொழில்நுட்பம், மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுள்ள தாக இருக்க வேண்டும். கல்வியால் மட்டும் தான் அறியாமையையும், மக்களின் ஏழ்மைையயும் அகற்ற முடியும். இதற்கு மத்திய, மாநில அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினரான ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜிவ் சிங் பேசியதாவது:-
மாணவர்கள் கருத்துக்களை உள்வாங்கி படிக்க வேண்டும், இவ்வாறு படிக்கும்போது மாணவர்கள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உலக நாடுகளில் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பொருத்தவரை இந்தியா முதல் 5 இடங்களுக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டைய காலத்தில் இந்தியாதான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தது. எதிர்வரும் காலங்களில் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் விண்வெளி ஆய்வுக்கு தேவையான பல்வேறு உதிரிபாகங்களை பெல் நிறுவனம் தயாரித்து கொடுப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.
கவுரவ விருந்தினராக பங்கேற்ற சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் சையது அமித் பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் உலக விண்வெளி வாரம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்காக பிரத்தியோகமாக நடைபெற்று வருகிறது.
காரணம் மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சம்பந்தப்பட்ட விஷ யங்களை மக்கள் அனை வரும் தெரிந்து கொள்ள வேண்டும் .
இந்திய விண்வெளித்துறையின் தந்தையாக கருதப்படும் டாக்டர். விக்ரம் சாராபாய் 1960-களில் விண்வெளி ஆய்வு மற்றும் அதன் பயன்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கிணையாற்றும் என்று அப்போதே கணித்தார்.
இந்தியா, விக்ரம் சாராபாய் போன்ற தலைவர்களின் தலைமை யாளும், தொலைநோக்குப் பார்வையாலும் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்று சாமானிய மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது எனக் கூறினார்.
இந்தக் கண்காட்சி வி.ஐ.டி.யில் 9-ந் தேதி வரை நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, போஸ்டர் மற்றும் மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் கிடையாது. மாணவர்கள் https://wsw.vit.ac.in இணையம் வழியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
விழாவில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் , ஜி.வி.செல்வம் இணை துணை வேந்தர் டாக்டர். எஸ். நாராயணன். பதிவாளர் டாக்டர். டி. ஜெயபாரதி, வேலூர் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் முனுசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
- காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
வேலூர்:
தமிழகம் முழுவதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது.
மனித சங்கிலி
வேலூர் மாவட்டத்திலும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் டீக்காராமன், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளங்கோ, சஜன் குமார், ம.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் கோபி, பழனி மற்றும் காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் கப்பல் மணி, கணேஷ் தங்கமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் இருந்து திருப்பதி தேவஸ்தானம் வரை வருகிற 11-ந்தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முடிவு செய்தனர்.
- நாளை பாட்டு பட்டிமன்றம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
விஜயதசமியை முன்னிட்டு வேலூர் சத்–து–வாச்–சாரி கெங்–கை–யம்–மன் கோவி–லில் 38-ம் ஆண்டு விஜ–ய–த–சமி இலக்–கிய விழா நேற்று தொடங்–கி–யது.
விஜ–ய–த–சமி இலக்–கிய விழாக்–குழு தலை–வர் எஸ்.எம். சுந்–த–ரம் தலைமை தாங்கி–னார். செய–லா–ளர் உல–க–நா–தன் வர–வேற்–றார். பொரு–ளா–ளர் ஜே.ஞான–சே–க–ரன், சன்–பீம் பள்ளி சேர்–மன் ஹரி கோபா–லன் ஆகி–யோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு அழைப்–பா–ளர்–களாக கே.எம்.ஜி. கல்வி நிறுவன செய–லா–ளர் கே.எம்.ஜி. ராஜேந்–தி–ரன் மற்–றும் அரு–ணோ–த–யம், வேலூர் மேற்கு மாவட்ட தென்–னிந்–திய செங்–குந்த மகா–ஜன சங்க தலை–வர் சி.என். தட்–சி–ணா–மூர்த்தி ஆகி–யோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்–சியை முன்–னாள் எம்.எல்.ஏ. ஞான–சே–க–ரன் தொடங்கி வைத்–தார்.
விழா–வின் முதல் நாளான நேற்று இரவு பேரா–சி–ரி–யர் சால–மன் பாப்பையா தலை–மை–யில் சிறப்பு பட்–டி–மன்–றம் நடை–பெற்–றது. அதில் எஸ்.ராஜா, கவிதா ஜவ–கர், ராஜா–ராம், ராஜ்–கு–மார் உட்–பட பேச்சாளர்–கள் கலந்து கொண்டு பேசி–னர்.
நிகழ்ச்–சி–யில் திருவண்ணா–மலை மாவட்ட செங்–குந்த மகா–ஜன சங்க தலைவர் சீனு கார்த்திகேயன், பி.ராமசந்திரன், பி.கிரு–பா–னந்–தன், எஸ்.எம்.செல்–வ–ராஜ், எஸ்.எம்.எஸ்.கணே–சன், எஸ்.எம்.எஸ். சதானந்தன் ஆகி–யோர் கலந்து கொண்–ட–னர். முடிவில் அசோக் குமார் நன்றி கூறி–னார்.
முன்–ன–தாக மாலை 4 மணிக்கு ஆன்–மிக சொற்பொ–ழிவு நிகழ்ச்சி கலை–மாமணி திருச்சி கல்யாணராமன் தலைமையில் நடந்தது. முடி–வில் காளத்தி நன்றி கூறி–னார்.
தொடர்ந்து இன்று (சனிக்–கி–ழமை) மாலை 4 மணிக்கு தேடி–வந்த திரு–வருள் என்னும் தலைப்–பில் சொற்–பொ–ழிவு நிகழ்ச்–சி–யும், இரவு 7 மணிக்கு நாட்–டுப்–புற தெம்–மாங்கு பாடல்–கள் நிகழ்ச்சியும், நாளை (ஞாயிற்–றுக்–கிழமை) மாலை 4 மணிக்கு வாழ்வை வசந்தம் ஆக்கு என்–னும் தலைப்–பில் சொற்–பொழிவும் இரவு 7 மணிக்கு இன்னிசை கலந்த பாட்டு பட்–டி–மன்–ற–மும் நடக்–கிறது.
விழா–விற்–கான ஏற்–பா–டு–களை விஜ–ய–த–சமி இலக்–கிய விழா குழு–வி–னர் செய்துள்ள–னர்.
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் மோர்தனா அருகே உள்ள ஜங்காலபள்ளி கன்னி கோவில் வனபகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். முதுகு பகுதி எரிந்த நிலையிலும் முகத்தில் ஆங்காங்கே எரிந்த நிலையிலும் சடலம் இருந்தது.சம்பவ இடத்தில் சற்று அருகே 2 மது பாட்டில்கள் கிடந்தது.
போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சைனகுண்டா பகுதியில் உள்ள காவல்துறையினரின் சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும், அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா களையும் அதன் பதிவு களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆந்திர தமிழக எல்லை மோர்தானா அணைக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வருகின்றனர். சிலர் வனப்பகுதியில் அமர்ந்து மது குடித்துவிட்டு செல்கின்றனர்.
ஆந்திராவில் இருந்து யாராவது வந்து மது குடித்துவிட்டு ஏற்பட்ட தகராறில் கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க எரித்திருக்கலாம் என்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெளியே எங்கேயாவது கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க மோர் தானா வனப்பகுதியில் சடலத்தை வீசிவிட்டு எரிக்க முயற்சித்தார்களா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குடியாத்தம் அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் வெங்கடேச பெருமாள் கருட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் 27 ஆம் ஆண்டு புரட்டாசி பெருவிழா நடைபெற்றது தொடர்ந்து மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் வெங்கடேச பெருமாள் சந்தன காப்பில் கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
- 40 கிலோ கஞ்சா போதை சாக்லேட்டுகள் இருந்தன. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
- கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்:
மாணவர்கள் இளைஞர்கள் இடையே போதை கலாசாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கஞ்சா, போதை மாத்திரை என நாளுக்கு நாள் புதிய புதிய போதைப் பழக்க வழக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.
ஒடிசா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருகின்றனர்.
இதனை தடுக்க ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம் ஆகிய இடங்களில் வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் இருந்து பெங்களூரு கே.ஆர் புரம் செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அதில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது எஸ் 5 பெட்டியில் சீட்டுகளுக்கு அடியில் 5 கருப்பு நிற பை மற்றும் 3 பெரிய பிளாஸ்டிக் மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர்.
அதில் 40 கிலோ கஞ்சா போதை சாக்லேட்டுகள் இருந்தன. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய்குமார் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.
பெங்களூரு, சென்னை, கோவை பகுதிகளில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கடத்திவரப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் பெங்களூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது.
அங்கிருந்து சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பிறபகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காய்கறிகள் வரத்து குறைவு
- விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது
வேலூர்:
வேலூரில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.10 முதல் 15 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்த தால், விலை சற்று அதிகரித்துள்ளது.
தக்காளி விலை உயர்வு
அதேநேரம், ஆந்திரா வில் இருந்துதான் தக்காளி வரத்து உள்ளது. இதன் காரணமாக, மொத்த வியா பாரிகளுக்கு 27 கிலோ எடை கொண்ட பெட்டி தக்காளி, ரூ. 700 முதல் 900 வரை விலை உள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. உள்ளூர் பகுதிகளில் விளையும் தக்காளி வரத்து அதிகரித்தால்தான், தக்காளி விலை குறையும்.
இதேபோல், கத்தரிக் காய் கிலோ ரூ.40 ரூபாய், கேரட்-40, வெங்காயம்-30 ரூபாய் என்ற நிலையே தொடர்கிறது.
மழைக்காலத்தில் காய்கறிகள் வரத்து குறைந்தால் அவற்றின் விலை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- சாலை தடுப்புகள் அகற்றம்
- போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது
வேலூர்:
வேலூர் மாநகரின் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை திகழ்கிறது. இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளிமாநிலங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையின் இருபுறமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். பலர் கடைகளின் முன்பே வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வேலூர் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தனியார் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு விதிமீறல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 120 பைக் களுக்கு உடனடி அபராதம் விதித்தனர்.
அங்குள்ள சாலை நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளில் பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டன எதனால் ஆர்காடு ஆக்கிரமிப்பு இல்லாமல் காணப்பட்டது.
ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக பல வருடங்களாக நீடிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்கதையாக உள்ளது. ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரி சலை தவிர்ப்பதற்காக சாலையின் நடுவே இருப்பு தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர்.இதனால் ஓரளவு வாகனங்கள் வரிசையாக சென்றதால் நெரிசல் குறைவாக இருந்தது.இந்த நிலையில் ஆற்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.இதனால் சில வாகனங்கள் குறுக்கு நெடுக்கமாக சாலையில் திரும்புகின்றன.இதன் காரணமாக ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சாலையின் நடுவில் இருந்த இரும்பு தடுப்புகளை அகற்றியதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது அதை ஏன் அகற்றினார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- மழைநீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது
- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் புதைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாநகர சாலைகள் வெயில் காலங்களில் புழுதியாகவும் மழைக்காலங்களில் சேறும் சகதியமாக காணப்படுகிறது.
காட்பாடி காந்திநகர் மாநகராட்சி அலுவலகம் உள்ள காந்தி நகர், விஜி ராவ் நகர், பாரதி நகர் காந்தி நகர் மற்றும் ஓடை பிள்ளையார் கோவிலில் இருந்து செல்லும் மதிநகர், அருப்புமேடு சாலைகள் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு படு மோசமாக சேறும் சகதியமாக காணப்படுகிறது. ஒரு நாள் மழைக்கு கூட இந்த சாலைகள் தாங்குவதில்லை.
பணிகளை விரைந்து முடித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அவதியை போக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழை வெள்ளம் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
- கமிஷனர் அசோக்குமார் தகவல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பருவமழைக்கும் முன்பாக மழைநீர் தேங்ககூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திடீர் நகர், கன்சால்பேட்டை, இந்திரா நகர் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை வெள்ளம் புகுந்து வருகிறது.
இதை தொடர்ந்து கொணவட்டத்தை ஒட்டி உள்ள திடீர் நகரில் சதுப்பேரி ஏரியில் இருந்து நிக்கல்சன் கால்வாய் வரை வரக்கூடிய கால்வாயில் ஆக்கிரமித்திருப்பது தெரிய வந்தது.அங்கு ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன.
தற்போது அந்த கால்வாய் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
குறுகலாக இருந்த அந்த கால்வாய் தற்போது அகலமாக பொக்லைன் எந்திரங்கள் கொண்டு தூர்வாரப்படுகிறது. இதனால் திடீர் நகர் பகுதியில் இந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது தண்ணீர் தேங்க வாய்ப்பு இல்லை. கால்வாயில் மழை வெள்ளம் வந்து நிக்கல்சன் கால்வாயில் கலந்து விடும்.
இது ஒரு புறம் இருக்க நிக்கல்சன் கால்வாயில் அடி வாரப் பகுதிகளும் தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது. மழை வெள்ளம் எளிதாக செல்லும் அளவிற்கு பணிகள் நடந்து வருகின்றன.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-
திடீர் நகர் பாரதி பள்ளியில் இருந்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கார்வாய் தற்போது தூர்வாரப்படுகிறது. சுமார் 1000 மீட்டர் நீளத்திற்கு இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு திடீர் நகர் முள்ளிப்பாளையம் பகுதியில் மழை வெள்ளம் தேங்க வாய்ப்பில்லை என்றார்.
- காட்டிக்கொடுப்பவர்களுக்கு ரூ.200 பரிசு
- வேலூர் மாநகராட்சியில் அமல்படுத்தப்படுகிறது
வேலுார்:
வேலுார் மாநகராட்சி பகுதிகளில், குப்பைகளை சாலையில் கொட்டுவதும் தீ வைத்து எரிப்பதும் நடந்து வருகிறது.
இதனால் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், மாநகராட்சி திடக்கழிவு மேலா ண்மை துணை விதிகள் 2016ன் கீழ், குப்பைகளை பிரித்து அளிக்காதிருத்தல், தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகி யவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
அதன்படி, வீடுகளில் குப்பைகளை பிரித்து வழங்காமல் இருந்தால் ரூ.100, வணிக. நிறுவனங்களுக்கு ரூ.500 வணிக வளாகங் களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பைகளை வீட்டில் இருப்பவர்கள் கொட்டினால் ரூ.100, அதேபோல், வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும்.
மேலும், வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100 வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும்.
அதேநேரம், குப்பைகளை கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை, வருகிற 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பான துண்டு பிரசுரங்கள், மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மக்கள் அறியும் வகையில் ஒட்டப்படவுள்ளன.
ஆலோசனைக் கூட்டத்தில், மாநகர நல அலுவலர் (பொறுப்பு) முருகன், சுகாதார அலுவலர்கள் லுார்துசாமி, சிவகுமார், இளநிலை பொறியாளர் வெங்கடேசன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.






