என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோர்தானா வனப்பகுதி"

    • கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் மோர்தனா அருகே உள்ள ஜங்காலபள்ளி கன்னி கோவில் வனபகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். முதுகு பகுதி எரிந்த நிலையிலும் முகத்தில் ஆங்காங்கே எரிந்த நிலையிலும் சடலம் இருந்தது.சம்பவ இடத்தில் சற்று அருகே 2 மது பாட்டில்கள் கிடந்தது.

    போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் சைனகுண்டா பகுதியில் உள்ள காவல்துறையினரின் சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும், அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா களையும் அதன் பதிவு களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆந்திர தமிழக எல்லை மோர்தானா அணைக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வருகின்றனர். சிலர் வனப்பகுதியில் அமர்ந்து மது குடித்துவிட்டு செல்கின்றனர்.

    ஆந்திராவில் இருந்து யாராவது வந்து மது குடித்துவிட்டு ஏற்பட்ட தகராறில் கொலை செய்து விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க எரித்திருக்கலாம் என்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    வெளியே எங்கேயாவது கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க மோர் தானா வனப்பகுதியில் சடலத்தை வீசிவிட்டு எரிக்க முயற்சித்தார்களா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×