என் மலர்tooltip icon

    வேலூர்

    • கொரோனாவையொட்டி நிறுத்தப்பட்ட பஸ் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை
    • போலீசார் பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர் அடுத்த கீழ்மொணவூரில் உள்ள மாணவ மாணவிகள் வேலூரில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் போராட்டம்

    மாணவ, மாணவிகள் வசதிக்காக கீழ்மொணவூரில் இருந்து வேலூருக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படவில்லை.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இது பற்றி தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    துணை தாசில்தார் திவ்யா போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வேலூரில் இருந்து கீழ்மொணவூருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவ மாணவிகள் வசதிக்காக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனாவால் பஸ் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு மீண்டும் இயக்கப்படவில்லை.

    தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பஸ் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வேலூரில் 1390 வாகனங்கள் மட்டுமே பதிவு
    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிய நடவடிக்கை

    வேலூர்:

    வேலூர் நகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப் பாக ஆற்காடு, காட்பாடி சாலை முழுக்க ஆட்டோக் களால் நிரம்பி வழிகிறது. வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் - பதிவு செய்யப்பட்ட ஆட் டோக்கள் தவிர வெளியூர் ஆட்டோக்களும் வேலூர் நகர சாலைகளில் உலா வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

    குறிப்பாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் வேலூர் நகரை ஆக்கிரமித்துள்ளன. பதிவு இல்லாத, பர்மிட் இல்லாத ஆட்டோக்களால் சட்டவிரோத சம்பவங்க ளிலும் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து ஆட் டோக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தர விட்டுள்ளார். இதன் அடிப் படையில் புதிய நடை முறை மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சிக்குட் பட்ட பாகாயம் முதல் பள்ளிக்குப்பம் இடைப் பட்ட பகுதிகளில் மொத்தம் 59 ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன.

    இங்கு மொத்தம் ஆயி ரத்து 390 ஆட்டோக்கள். இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ ஒவ்வொன்றிற் கும் ஒரு எண் ஒதுக்கப் படுகிறது. அதாவது ஒன்று முதல் ஆயிரத்து 390 வரை யான நம்பர் ஸ்டிக்கராக ஆட்டோக்களில் ஒட்டப் படுகிறது. பிறகு அந்த எண்ணுக்கான ஆட்டோ வுக்கான ஆவணங்கள், டிரைவர் தொடர்பான விவரங்களை பெற்று போக்கு வரத்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறது.

    அந்த ஆட்டோக்களிலும் பயணிகளுக்கு தேவைப்படும் அவசர துறைகளின் எண்களும் அச்சிட பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் வெங்கடே சன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில்:- முதல்கட்டமாக ஸ்டாண்டுகளில் உள்ள ஆட்டோக்கள் கண்காணிப் புக்கு உள்ளாக்கப்படுகிறது.படிப்படியாக அனைத்து ஆட்டோக்களின் விவரங்களும் சேகரிக்கப்படும்.

    இதனால், விதிமீறும் ஆட்டோக்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் எளிதில் கண்டறியப்படும்' என்றனர்.

    • வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
    • அதிகபட்சமாக வேலூரில் 33 மி.மீ. மழை கொட்டியது

    வேலூர்:

    வேலூரில் இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையோரங்கள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் மழையில் நனைந்தும், பொதுமக்கள் குடை பிடித்தப்படியும், ரெயின்கோட் அணிந்தும் சென்றனர்.

    வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் பாதாள சாக்கடை, சாலை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அதனால் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதேபோன்று சேண்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில்தெரு, கன்சால்பேட்டை, இந்திராநகர், தோட்டப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதிகபட்சமாக வேலூரில் 33 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    வேலூரில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

    வேலூர்-33, காட்பாடி-9, குடியாத்தம்-15.2, மேல்ஆலத்தூர்-6.2, பொன்னை-30.2, திருவலம்-3.2.

    • ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தின் முதன்மை பொதுமேலாளர் தகவல்
    • வி.ஐ.டி.யில் இஸ்ரோ கண்காட்சி நிறைவு விழா நடந்தது

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல் கலைக்கழகத்தில் இஸ்ரோ சார்பில் 3 நாள் கண்காட்சி கடந்த 7-ம் தேதி தொடங்கியது.

    இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இஸ்ரோ கண்காட்சி

    மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விநாடி-வினா போட்டி, போஸ்டர் மற்றும் மாதிரி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் விண்வெளி வார நிறைவு விழா விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள சென்னா ரெட்டி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், ஸ்ரீஹரி கோட்டாவின் உலக விண்வெளி வார கமிட்டி குழுத்தலைவர் ராம் குமார் வரவேற்றார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன்முன்னிலை வகித்தார். ஸ்ரீ ஹரி கோட்டாவின் விண்வெளி ஏவுதளத்தின் முதன்மை பொது மேலாளர் சங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கேரளாவில் 75 மில்லி மீட்டர் அளவில் உள்ள ராக்கெட் கண்டறிந்து அதன் வடிவத்தில் ஜி.எஸ். எல்.வி.ராக்கெட்டை உருவாக்கியுள்ளோம்.

    ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 ராக்கெட் உலகில் அதிக திறனும், சக்தியும் வாய்ந்த ராக்கெட்டாக தயாராகி வருகிறது. விரைவில் இதுவிண்ணில் ஏவப்படவுள்ளது. தற்போது, சந்திராயன் 3 என்ற பெயரில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. மிக விரைவில் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. உலக அளவில் இந்தியா விண்வெளிஆராய்ச்சியில் 2-வது இடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரியது" என்றார்.

    வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    "கடந்த 1999 ம் ஆண்டு ஐ.நா.சபையில் விண்வெளி வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் தங் 10-ம் தேதி வரை கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. உலகில் 100 நாடுகளில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா விண்வெளி ஆராய்ச்சி யில் உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ச்சி யடைந்துள்ளது.

    கடந்த 1984-ம் ஆண்டில் இந்தி யாவைச் சேர்ந்த ராக்கேஷ்சர்மா முதல் முதலாக விண்வெளிக்கு சென்றார். இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லாவும் விண்வெளிக்கு சென்றவர்.

    உலகில் பல்வேறு நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பல - கோடி செலவு செய்து அதில் தோல்வியை சந்திக்கின்றன. ஆனால், இந்தியா குறுகிய காலத்தில் குறைந்த செலவில் விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளது பாராட்டப்பட வேண்டியது.

    மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும். பாடப்புத்தகம் மட்டுமின்றி தினசரி ஏதாவது ஒரு செய்தித்தாளை படித்து உலக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் உண்டு. விண்வெளி ஆராய்ச்சி குறித்துமாணவர்கள் தெரிந்துக்கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நாடு வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல இன்றைய தலைமுறையினர் முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசும் போது, "விண்வெளிக்கு எல்லைகள் இல்லை. கோள்களில் வியாழன் பெரிய கோள். பூமியில் மனிதன் உள்ளிட்ட ஜீவராசிகள் உயிர் வாழ அறிவியல் முக்கியத்துவம் பெறுகிறது.

    மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி படிக்க வேண்டும். புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும்.

    கண்டறிந்த புதிய தொழில்நுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் இந்திய , மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும்.

    வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் ள கொள்ள வேண்டும். விண்வெளி ய ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்க மாணவர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்" என்றார்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • வாலிபருக்கு உறவினர்கள் அறிவுரை

    வேலூர்:

    சினிமாவில் வரும் காட்சிகளை பார்த்து இளைஞர்கள் பெண்களை தன் வசப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் மிரட்டல் காயப்படுத்துவதில் இது போன்ற சம்பவங்கள் முடிகிறது.

    காட்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தங்கி இருந்து படித்து வருகிறார்.

    மாணவியின் அழகில் மயங்கிய வாலிபர் அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.

    மானவியிடம் அடிக்கடி சென்று தனது காதலை வெளிப்படுத்தினார்.

    ஆனால் மாணவி தான் வெளியூரில் இருந்து படிக்க வந்திருக்கிறேன்.அது மட்டும் தான் எனது வேலை வேறு எதுவும் எனக்கு வேண்டாம் எனக் கூறி காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    நேற்று மாணவி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது வாலிபர் அவரது அறைக்கு சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

    அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் மாணவி அறையில் இருந்த கண்ணாடியை கையால் ஓங்கி குத்தினார். இதில் கண்ணாடி உடைந்து அவரது கையை கிழித்தது. அதை கண்டு மாணவி அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். கையில் காயத்துடன் இருந்த வாலிபரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியை காதலிக்க வற்புறுத்தி தனது கையை காயபடுத்தி கொண்ட வாலிபருக்கு உறவினர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் ரூ.200 அன்பளிப்பு வழங்கப்படும்.
    • வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்தது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. இதனால் குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதனை தடுக்க அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன.

    தெருக்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையைக் கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும்.

    அதேநேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    • தொரப்பாடி சக்தி விநாயகர் கோவிலில் நடந்தது
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் இன்று நடந்தது. சண்டி யாகத்தை ஒட்டி நேற்று காலை கோ பூஜை, கணபதி ஹோமம், கலசஸ்தானம், நவாவண பூஜை மற்றும் 64 பைரவர்கள் 64 மோகினி பழி பூஜை நடந்தது.

    மதியம் கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, கவாஷினி, பிரம்மச்சாரி பூஜைகள் நடந்தது. இன்று காலை பவுர்ணமி திதி, உத்திராட்டி நட்சத்திரம் நட்சத்திரத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உலக மக்கள் நன்மைக்காக மங்கள வாத்தியம் முழங்க, வேத மந்திரங்கள் ஓத மஹா சண்டி யாகம் நடந்தது. யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    • நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூரில் பென்ஸ் பார்க் ஓட்டல் அரங்கில் அகில இந்திய ரேடியாலஜி சங்க தேசிய மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ சங்க மாநில முன்னாள் துணைத் தலைவரும் வேலூர் சிஎம்சி ஐடாஸ் கட்டர் கிளைச் செயலாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    வேலூர் சுதந்திரப் போராட்டம் நினைவாக சங்க அமைப்பாளர்களுக்கு போர்வாள் கேடயம் இக்ராம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநாடு பொறுப்பாளர்கள், சிஎம்சி ரேடியாலஜி பேராசிரியர்கள் டாக்டர்கள் ஷாம்குமார், ஸ்ரீதர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் அமர்நாத், என்.டி.ஆர். பல்கலைக்கழக டாக்டர் சிக்கந்தர், கடலூர் மருத்துவக் கல்லூரி டாக்டர் நடராஜன், வேலூர் டாக்டர் அபர்ணா, டாக்டர் ரேகா செரியன், டாக்டர் அன்பரசன் உள்ளிட்டோருக்கு வால் மற்றும் கேடயம் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மாநாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன. முடிவில் டாக்டர் அபர்ணா நன்றி கூறினார்.

    • பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், பஸ் உரிமையாளர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    பஸ் உரிமையாளர் சங்க துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் ஞானவேலு, அசோகன், அருண் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில், மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதன்படி, சென்னை பெங்களூர் 6 வழிச்சாலையில் இருந்து சென்னை சில்க்ஸ் அருகே வேலூர் மாநகருக்குள் நுழையும் சர்வீஸ் சாலை இணைப்பு பகுதியை, கார், பைக் போன்ற வாகனங்கள் செல் வதற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். கிரீன் சர்க்கிள் பகுதியில் நெரிசலை குறைப்பதற்கு, பழைய காட்பாடி சாலையில் இருந்து புது பஸ் நிலையத்திற்கு புது பாலத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இந்த பணிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் போலீசார் அதிரடி
    • 3 பேர் ஆர்டிஓ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

    வேலூர்:

    தமிழகம் முழுவதும் ஆபரேஷன் மின்னல் ரவுடி -வேட்டை 24 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில், ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர்.

    அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வேலூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட இடங்களில் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டும், மீதம் உள்ள 17 பேர் ஆர்டிஓ முன்னிலையில் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    காட்பாடி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட இடங்களில் டிஎஸ்பி பழனி தலை மையில் நடத்தப்பட்ட மின்னல் ரவுடி வேட்டையில் 6 பேர் பிடிபட்டனர். இவர்களில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டும், மீதம் உள்ள 3 பேர் ஆர்டிஓ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    தொடர்ந்து, குடியாத்தம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட இடங்களில் டிஎஸ்பி ராம மூர்த்தி தலைமையில் நடத் தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 32 பேர் பிடிபட்ட நிலையில் 5 பேர் சிறையிலும், 27 பேர் ஆர்டிஓ முன்னிலை ஆஜர் படுத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • ஆன்லைனில் தங்க வியாபார ஆசை காட்டி துணிகரம்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 24), கம்ப்யூட்டர் டிசைனர்.

    இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஷேர் மார்க்கெட் எனும் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்ந்துள்ளார். அதில், தங்க வியாபாரம் குறித்து ஒருவர் பதிவிட்டு, தான் தங்கத்தில் செய்துள்ள முதலீட்டின் மூலம் பல லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவை படித்த மோகன் குமார் அந்த குரூப்பில் தானும் தங்க விற்பனையில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் உள்ள மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு மோகன் குமாரிடம் தங்க வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பிய அவர் முதற்கட்டமாக ரூ.1 லட்சத்தை மர்மநபர் கொடுத்த வங்கிக்கணக்கில் ஆன்லைனில் செலுத்தி உள்ளார். சிறிதுநேரத்தில் அந்த மர்மநபர், மோகன்குமாரிடம், ரூ.1 லட்சம் முதலீடு செய்த தங்க வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் பணம் திரும்ப வராது என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், ஒரு ரகசிய எண்ணை கொடுத்து இதன் மூலம் ஷேர்மார்க்கெட்டில் தனியாக கணக்கு தொடங்கி, அதில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். அதையடுத்து அவர் தனியாக கணக்கு தொடங்கி வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து ரூ.7 லட்சத்து 31 ஆயிரத்தை அந்த வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் அவருடைய ஷேர் மார்க்கெட் வங்கி கணக்கு திடீரென முடங்கியது. பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் ஷேர் மார்க்கெட் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் படி மோகன் குமாருக்கு குறுந்தகவல் வந்தது.

    இதையடுத்து அந்த செல்போன் எண்ணை அவர் தொடர்பு கொண்டு கேட்ட முயன்ற போது உடனடியாக தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த எண் வெளிநாட்டு எண் என்று தெரியவந்தது. அப்போதுதான் மர்ம நபர்கள் அவரை தங்க வியாபார ஆசை காட்டி ரூ.8 லட்சத்து 31 ஆயிரத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து மோகன் குமார் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் எரித்துக்கொலையில் விசாரணை
    • கேமரா காட்சிகள் ஆய்வு

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த மோர்தானா வனப்பகுதியில் ஜங்காலப்பள்ளி கன்னி கோவில் அருகே 35 வயது ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது. அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    தனிப்படை போலீஸ்

    இந்த சம்பவத்தில் துப்பு துலக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தர வின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் ஒரு தனிப்படையினரும். தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிலம் பரசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இதில் இன்ஸ்பெக்டர் கண பதி தலைமையிலான தனிப்படையினர் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பலமநேர், புங்கனூர், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று போலீஸ் அதிகாரிகளுடன் அப்பகுதியில் காணாமல் போன ஆண்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை காட்டியும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே போல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் சைனகுண்டா சோதனை சாவடி மற்றும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, அப்பகுதியில் உள்ள கிராமங் களில் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை தீவிர மாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    அப்போது வெளியூர் பதி வெண்கொண்ட பைக்கில் சென்று திரும்பும் நபர்கள் குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×