என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்"
- ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தின் முதன்மை பொதுமேலாளர் தகவல்
- வி.ஐ.டி.யில் இஸ்ரோ கண்காட்சி நிறைவு விழா நடந்தது
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல் கலைக்கழகத்தில் இஸ்ரோ சார்பில் 3 நாள் கண்காட்சி கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்ரோ கண்காட்சி
மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விநாடி-வினா போட்டி, போஸ்டர் மற்றும் மாதிரி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் விண்வெளி வார நிறைவு விழா விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள சென்னா ரெட்டி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஸ்ரீஹரி கோட்டாவின் உலக விண்வெளி வார கமிட்டி குழுத்தலைவர் ராம் குமார் வரவேற்றார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன்முன்னிலை வகித்தார். ஸ்ரீ ஹரி கோட்டாவின் விண்வெளி ஏவுதளத்தின் முதன்மை பொது மேலாளர் சங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
"இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கேரளாவில் 75 மில்லி மீட்டர் அளவில் உள்ள ராக்கெட் கண்டறிந்து அதன் வடிவத்தில் ஜி.எஸ். எல்.வி.ராக்கெட்டை உருவாக்கியுள்ளோம்.
ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3 ராக்கெட் உலகில் அதிக திறனும், சக்தியும் வாய்ந்த ராக்கெட்டாக தயாராகி வருகிறது. விரைவில் இதுவிண்ணில் ஏவப்படவுள்ளது. தற்போது, சந்திராயன் 3 என்ற பெயரில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. மிக விரைவில் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. உலக அளவில் இந்தியா விண்வெளிஆராய்ச்சியில் 2-வது இடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரியது" என்றார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
"கடந்த 1999 ம் ஆண்டு ஐ.நா.சபையில் விண்வெளி வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் தங் 10-ம் தேதி வரை கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. உலகில் 100 நாடுகளில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா விண்வெளி ஆராய்ச்சி யில் உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ச்சி யடைந்துள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டில் இந்தி யாவைச் சேர்ந்த ராக்கேஷ்சர்மா முதல் முதலாக விண்வெளிக்கு சென்றார். இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லாவும் விண்வெளிக்கு சென்றவர்.
உலகில் பல்வேறு நாடுகள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பல - கோடி செலவு செய்து அதில் தோல்வியை சந்திக்கின்றன. ஆனால், இந்தியா குறுகிய காலத்தில் குறைந்த செலவில் விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளது பாராட்டப்பட வேண்டியது.
மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும். பாடப்புத்தகம் மட்டுமின்றி தினசரி ஏதாவது ஒரு செய்தித்தாளை படித்து உலக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் நிறைய வேலை வாய்ப்புகள் உண்டு. விண்வெளி ஆராய்ச்சி குறித்துமாணவர்கள் தெரிந்துக்கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நாடு வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல இன்றைய தலைமுறையினர் முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசும் போது, "விண்வெளிக்கு எல்லைகள் இல்லை. கோள்களில் வியாழன் பெரிய கோள். பூமியில் மனிதன் உள்ளிட்ட ஜீவராசிகள் உயிர் வாழ அறிவியல் முக்கியத்துவம் பெறுகிறது.
மாணவர்கள் தகவல் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி படிக்க வேண்டும். புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும்.
கண்டறிந்த புதிய தொழில்நுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களில் இந்திய , மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும்.
வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் ள கொள்ள வேண்டும். விண்வெளி ய ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்க மாணவர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்" என்றார்.






