என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 32 ரவுடிகள் திடீர் கைது
- ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் போலீசார் அதிரடி
- 3 பேர் ஆர்டிஓ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்
வேலூர்:
தமிழகம் முழுவதும் ஆபரேஷன் மின்னல் ரவுடி -வேட்டை 24 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில், ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வேலூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட இடங்களில் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டும், மீதம் உள்ள 17 பேர் ஆர்டிஓ முன்னிலையில் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
காட்பாடி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட இடங்களில் டிஎஸ்பி பழனி தலை மையில் நடத்தப்பட்ட மின்னல் ரவுடி வேட்டையில் 6 பேர் பிடிபட்டனர். இவர்களில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டும், மீதம் உள்ள 3 பேர் ஆர்டிஓ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
தொடர்ந்து, குடியாத்தம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட இடங்களில் டிஎஸ்பி ராம மூர்த்தி தலைமையில் நடத் தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 32 பேர் பிடிபட்ட நிலையில் 5 பேர் சிறையிலும், 27 பேர் ஆர்டிஓ முன்னிலை ஆஜர் படுத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.






