என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவியை காதலிக்க வற்புறுத்தி கையை கண்ணாடியில் குத்திய வாலிபர்
- தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- வாலிபருக்கு உறவினர்கள் அறிவுரை
வேலூர்:
சினிமாவில் வரும் காட்சிகளை பார்த்து இளைஞர்கள் பெண்களை தன் வசப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் மிரட்டல் காயப்படுத்துவதில் இது போன்ற சம்பவங்கள் முடிகிறது.
காட்பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தங்கி இருந்து படித்து வருகிறார்.
மாணவியின் அழகில் மயங்கிய வாலிபர் அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.
மானவியிடம் அடிக்கடி சென்று தனது காதலை வெளிப்படுத்தினார்.
ஆனால் மாணவி தான் வெளியூரில் இருந்து படிக்க வந்திருக்கிறேன்.அது மட்டும் தான் எனது வேலை வேறு எதுவும் எனக்கு வேண்டாம் எனக் கூறி காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நேற்று மாணவி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது வாலிபர் அவரது அறைக்கு சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.
அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் மாணவி அறையில் இருந்த கண்ணாடியை கையால் ஓங்கி குத்தினார். இதில் கண்ணாடி உடைந்து அவரது கையை கிழித்தது. அதை கண்டு மாணவி அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். கையில் காயத்துடன் இருந்த வாலிபரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாணவியை காதலிக்க வற்புறுத்தி தனது கையை காயபடுத்தி கொண்ட வாலிபருக்கு உறவினர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.






