என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கிரீன் சர்க்கிள் போக்குவரத்து மாற்றத்திற்காக மூடப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில் கார், பைக்கை அனுமதிக்க வேண்டும்
    X

    வேலூர் கிரீன் சர்க்கிள் போக்குவரத்து மாற்றத்திற்காக மூடப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில் கார், பைக்கை அனுமதிக்க வேண்டும்

    • பஸ் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், பஸ் உரிமையாளர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    பஸ் உரிமையாளர் சங்க துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் ஞானவேலு, அசோகன், அருண் பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில், மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதன்படி, சென்னை பெங்களூர் 6 வழிச்சாலையில் இருந்து சென்னை சில்க்ஸ் அருகே வேலூர் மாநகருக்குள் நுழையும் சர்வீஸ் சாலை இணைப்பு பகுதியை, கார், பைக் போன்ற வாகனங்கள் செல் வதற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். கிரீன் சர்க்கிள் பகுதியில் நெரிசலை குறைப்பதற்கு, பழைய காட்பாடி சாலையில் இருந்து புது பஸ் நிலையத்திற்கு புது பாலத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

    இந்த பணிக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×