என் மலர்
நீங்கள் தேடியது "குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியது"
- வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
- அதிகபட்சமாக வேலூரில் 33 மி.மீ. மழை கொட்டியது
வேலூர்:
வேலூரில் இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையோரங்கள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் மழையில் நனைந்தும், பொதுமக்கள் குடை பிடித்தப்படியும், ரெயின்கோட் அணிந்தும் சென்றனர்.
வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் பாதாள சாக்கடை, சாலை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அதனால் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதேபோன்று சேண்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில்தெரு, கன்சால்பேட்டை, இந்திராநகர், தோட்டப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதிகபட்சமாக வேலூரில் 33 மில்லி மீட்டர் மழை பதிவானது.
வேலூரில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
வேலூர்-33, காட்பாடி-9, குடியாத்தம்-15.2, மேல்ஆலத்தூர்-6.2, பொன்னை-30.2, திருவலம்-3.2.






