search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "It was revealed that the canal was occupied"

    • மழை வெள்ளம் தேங்குவதை தடுக்க நடவடிக்கை
    • கமிஷனர் அசோக்குமார் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பருவமழைக்கும் முன்பாக மழைநீர் தேங்ககூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திடீர் நகர், கன்சால்பேட்டை, இந்திரா நகர் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை வெள்ளம் புகுந்து வருகிறது.

    இதை தொடர்ந்து கொணவட்டத்தை ஒட்டி உள்ள திடீர் நகரில் சதுப்பேரி ஏரியில் இருந்து நிக்கல்சன் கால்வாய் வரை வரக்கூடிய கால்வாயில் ஆக்கிரமித்திருப்பது தெரிய வந்தது.அங்கு ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன.

    தற்போது அந்த கால்வாய் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

    குறுகலாக இருந்த அந்த கால்வாய் தற்போது அகலமாக பொக்லைன் எந்திரங்கள் கொண்டு தூர்வாரப்படுகிறது. இதனால் திடீர் நகர் பகுதியில் இந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது தண்ணீர் தேங்க வாய்ப்பு இல்லை. கால்வாயில் மழை வெள்ளம் வந்து நிக்கல்சன் கால்வாயில் கலந்து விடும்.

    இது ஒரு புறம் இருக்க நிக்கல்சன் கால்வாயில் அடி வாரப் பகுதிகளும் தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது. மழை வெள்ளம் எளிதாக செல்லும் அளவிற்கு பணிகள் நடந்து வருகின்றன.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-

    திடீர் நகர் பாரதி பள்ளியில் இருந்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கார்வாய் தற்போது தூர்வாரப்படுகிறது. சுமார் 1000 மீட்டர் நீளத்திற்கு இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

    இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு திடீர் நகர் முள்ளிப்பாளையம் பகுதியில் மழை வெள்ளம் தேங்க வாய்ப்பில்லை என்றார்.

    ×