search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Effective from 10"

    • காட்டிக்கொடுப்பவர்களுக்கு ரூ.200 பரிசு
    • வேலூர் மாநகராட்சியில் அமல்படுத்தப்படுகிறது

    வேலுார்:

    வேலுார் மாநகராட்சி பகுதிகளில், குப்பைகளை சாலையில் கொட்டுவதும் தீ வைத்து எரிப்பதும் நடந்து வருகிறது.

    இதனால் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் தலைமையில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில், மாநகராட்சி திடக்கழிவு மேலா ண்மை துணை விதிகள் 2016ன் கீழ், குப்பைகளை பிரித்து அளிக்காதிருத்தல், தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகி யவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    அதன்படி, வீடுகளில் குப்பைகளை பிரித்து வழங்காமல் இருந்தால் ரூ.100, வணிக. நிறுவனங்களுக்கு ரூ.500 வணிக வளாகங் களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பைகளை வீட்டில் இருப்பவர்கள் கொட்டினால் ரூ.100, அதேபோல், வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும்.

    மேலும், வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100 வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும்.

    அதேநேரம், குப்பைகளை கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை, வருகிற 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இது தொடர்பான துண்டு பிரசுரங்கள், மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மக்கள் அறியும் வகையில் ஒட்டப்படவுள்ளன.

    ஆலோசனைக் கூட்டத்தில், மாநகர நல அலுவலர் (பொறுப்பு) முருகன், சுகாதார அலுவலர்கள் லுார்துசாமி, சிவகுமார், இளநிலை பொறியாளர் வெங்கடேசன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    ×