என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை
    X

    வேலூரில் நேற்று இரவு பெய்த மழையால் கிரீன் சர்கிள் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை

    • நள்ளிரவில் கொட்டியது
    • தெருக்கள் சேரும் சகதியுமானது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் வெயில் சுட்டெரித்தது.2 நாட்களாக மேகம் மந்தமாக காணப்பட்டது. நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. வேலூர் நகர பகுதியில் 27.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    இடி மின்னலுடன் நகர பகுதியில் மழை பெய்ததால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடப்பதால் சில தெருக்கள் சேரும் சகதியமாக காட்சியளித்தன.

    காட்பாடியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது அங்குள்ள பல தெருக்களில் இன்னும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த தெருக்களில் சேரும், சகதியுமாக காட்சி அளித்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்பாடியில் 41 மில்லிமீட்டர் மழை பதிவானது. பொன்னை திருவலம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செங்கம், வந்தவாசி பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆரணி செய்யாறு பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏரி கால்வாய்களில் நீர்வரத்து ஏற்பட்டது.

    அந்த பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக ஆரணியில் 61 மீட்டர் மழை பதிவானது. சேத்துப்பட்டு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.

    வேலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    வேலூர்-27.2, காட்பாடி-41, பொன்னை- 16.4, திருவலம்-17.6, மேல்ஆலத்தூர்-2.2. ஆரணி-61, செய்யாறு-58, வந்தவாசி-35, சேத்பட்டு-7, வெம்பாக்கம்-13.

    Next Story
    ×