என் மலர்tooltip icon

    வேலூர்

    • பென்ஷன் வழங்க கோரி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்

    மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் முருகன் வரவேற்று பேசினார்.

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் சுசிலா சிறப்புரையாற்றினார். சட்டபூர்வ பென்ஷன் ரூ.7,850 வழங்க வேண்டும் 3 சதவீதம் வழங்க வேண்டும்.

    குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி, ரமாபாய், விஜயலட்சுமி, கமலா ருக்மணி, உமா மகேஸ்வரி, ரம்யா மேனகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பலத்த சோதனைக்கு பிறகு அனுமதி
    • சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும்

    வேலூர்:

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு இன்று முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 5220 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் கிங்ஸ்டன் என்ஜினியரிங் கல்லூரி, வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் மற்றும் தந்தை பெரியார் என்ஜீனியரிங் கல்லூரி ஆகிய 3 மையங்களில் காலை மாலை இரு வேளைகள் நடைபெறுகிறது.

    கணினி வழித் தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (www.trb.tn.nic.in) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலையில் மையங்களில் தேர்வு தொடங்கியது. திருவண்ணா மலை திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இன்று ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தேர்வு மையங்களில் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்ப ட்டனர்.கால்குலேட்டர் செல்போன் உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை.

    வருகிற நாட்களில் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள குகையநல்லூர் கிராத்தில் 'செயின்ட் ஜோசப் கருணை இல்லம்' என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது.

    இந்த இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சரியான உணவு, தங்குமிட வசதி இல்லை என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அங்கு வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கிருந்த முதியவர்கள் தங்களை கொடுமை படுத்துவது குறித்து அவர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குகையநல்லூர் கருணை இல்லத்தில் தங்கி இருந்த முதியவர்கள் 69 பேர் மீட்கப்பட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமை யிலான வருவாய்துறை அதிகாரிகள் காப்பகத்துக்கு சீல் வைத்தனர்.

    அப்போது அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்த ஊழியர் சாந்தி போலீசார் எச்சரிக்கை விடுத்ததால் அங்கிருந்து சென்றார்.

    நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 42 பேர் வேலூர் ரெட்கிராஸ் முதியோர் இல்லம், நம்பிக்கை இல்லம், வள்ளலார், விவேகானந்தர், கசம் எம்.பி.கே.ஜி பண்ணை, ஆத்ம சாந்தி ஆகிய இல்லங்களுக்கு அனுப்பிவைக்க பட்டனர்.

    மற்றவர்கள் உறவி னர்கள் அரவணைப்பிலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.

    இந்த கருணை இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த தொண்டு நிறுவனத்தில் எத்தனை பேர் தங்கி இருந்தனர்.

    போலீசில் புகார்

    அவர்களில் எத்தனை பேர் இறந்தனர் போன்ற விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    கருணை இல்ல நிர்வாகிகள் மீது வருவாய் துறை சார்பில் இன்று திருவலம் போலீசில் புகார் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த மேல்பட்டி கீழ் செண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் நவீன்குமார் வயது 28 ஆம்பூரில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அனிதா இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் நவீன்குமார் பெட்ரோல் பங்க்கிற்கு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட சென்றுள்ளார்.

    அப்போது பெட்ரோல் பங்கில் உள்ள மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கும், நவீன்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நவீன்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய நவீன்குமார் அந்தப் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள தென்னந்தோப்பில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்துள்ளார். இதில் மூழ்கி இறந்தார்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய நவீன்குமார் உடலை மீட்டு குடியாத்தம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு நவீன் குமாரின் உடலை ஒப்படைக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நேரத்திற்கு மேலாக போலீசார் நவீன்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சேகர், குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு பூபதிராஜா, குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ராஜன்பாபு, லட்சுமி, செந்தில்குமாரி, சுந்தரமூர்த்தி உள்பட 100க்கும் மேற்பட்ட, அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நவீன்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் நிலையத்தில் இறந்துபோன நவீன்குமாரின் தம்பி நந்தகுமார் (24) என்பவர் புகார் அளித்தார். அதில் எனது அண்ணன் நவீன்குமாரை அந்த தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பெட்ரோல் போட வந்த போது ஏற்பட்ட தகராறில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    அவர்களிடம் தப்பித்து ஓடிய நவீன்குமாரை அந்த வழியில் வந்த அப்பகுதியை சேர்ந்தவர் கன்னத்தில் அடித்துள்ளார். அவர்களிடம் தப்பிக்க பெட்ரோல் பங்க் எதிரே உள்ள நிலத்தில் ஓடிய போது கிணற்றில் விழுந்து விட்டார். எனது அண்ணனை அவர்கள் விரட்டியதால் தான் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    குடியாத்தம் தாலுகா போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனியார் பெட்ரோல் பங்க் மேலாளர் கோப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (63), அணங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (19) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பேட்டி
    • வங்கிகளில் கடன் உதவி பெற்று தரப்படும்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிங்குன்றம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பதை தடுக்க கோரி கொட்டும் மழையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் லிங்குன்றம் கிராமத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியின் போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், பாண்டியன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது-

    குடியாத்தம் மற்றும் பேராணம்பட்டு பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    சாராய காய்ச்சுவது மற்றும் விற்பவர்களை அழைத்து இனி சாராயத் தொழில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கப்படும். தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சாராய தொழிலில் இருந்து விடுபடுபவர்களின் வாழ்வாதாரத்திற்காக காவல்துறை சார்பில் தமிழக அரசின் உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும், வங்கி கடனுதவி, கறவை மாடுகள் வளர்க்கவும், சிறு தொழில் புரிய கடன் உதவி பெற்று தரப்படும் இத்தொழிலில் இருந்து விடுபடும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்விக்காக அனைத்து உதவிகளும் போலீஸ் முன்வந்து செய்து தரப்படும் கள்ளச்சாராய காய்ச்சுவது மற்றும் விற்பது தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

    • மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
    • காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் நேரம் நிர்ணயம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும். கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும். இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்கவேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டி யவை பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6 முதல் 7 மணி வரை யி லும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்அதிக ஒலி எழுப்பும். தொடர்ச்சி யாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    மருத்து வமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில், கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கருத்தரங்கில் பயிற்சியாளர்கள் பேச்சு
    • மாணவர்களை ஆசிரியர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அண்ணா நிர்வாகப் பயிற்சி கல்லூரி சார்பில் மாணவர்களின் நடத்தை, உணர்ச்சி மேலாண்மை, ஆளுமை மேம்பாடு குறித்த பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.

    ஒருங்கணைப்பாளர் முகமது மிரான், பயிற்சியாளர் மனோகரன் ஆகியோர் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மாணவர்கள் எல்லா சூழலிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வது கிடையாது. அவர்களது நடத்தை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி மாறுவதை நீங்கள் பார்க்கலாம்.

    மாணவர்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வது இல்லை. மாணவர்கள் தெரியாமல் தன்னிச்சையாக தவறாக நடப்பது போல உள்ளது. தெரியாமல் சத்தம் போட்டு விட்டேன்.

    சாரி ஏன் இப்படி நடந்துகிட்டேன்னு எனக்கே தெரியல இது தப்புனு தெரியது' டீச்சர். ஆனால் என்னையும் மீறிச் செய்துவிடுகிறன்" இப்படி விதவிதமாகக் மாணவர்கள் விளக்கம் தருவதைப் பார்க்கலாம்.

    மாணவர்கள் நடத்தை விருப்பத்தேர்வு என்பதை வைத்து நடக்கிறது. தான் வளர்ந்த சூழல், தங்களது சொந்தத தேவைகள் மற்றும் உளவியல் கூறுகளின்படி சட்டென மாறிவிடுகிறார்கள்.

    மோசமான நடத்தைகளை அவர்கள் தேர்வு செய்ததன் காரணங்களை அறிய வேண்டியது ஆசிரியர்ளுக்கு விடப்பட்டிருக்கும் சவால். சகமாணவர் உரையாடல் கதைகள் சினிமா தொலைக்காட்சி எனப் பல பரிமாண உலகிடமிருந்துதான் கற்கிறார்கள்.

    மாணவர்கள் தனது அன்றாட வாழ்வில் பெரும்பகுதியை பள்ளியில் தனது வகுப்பறையில் கழிக்கிறார்கள்.ஒரு மாணவரின் நடத்தை விருப்பத்தேர்வை செப்பனிடும் பணி ஆசிரியருடையதாக இருக்கிறது. அதுவே மாணவர் பெரியவராகும் போது அவரது வாழ்க்கை முறையாக மாறப்போகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

    மாணவர்களை ஆசிரியர்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என்றனர்.

    • ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ள வழி வகை
    • பேராசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

    வேலூர்:

    வி.ஐ.டி. மற்றும் டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவங்களின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வி.ஐ.டி., டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் (பி.எச்.டி) மேற்கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகை செய்யும்.

    மேலும் வி.ஐ.டி. மற்றும் டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டோகோ நாட்டின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைச்சர் பேராசிரியர் அய்ஹோ வட்டேபா மற்றும் வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் கையெழுத்திட்டனர்.

    நிகர்ச்சியில் இந்தியாவிற்கான டோகோ நாட்டின் தூதரக அதிகாரி யாவோ இடம் ஆக்பேமாடோ , வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் டாக்டர். எஸ்.நாராயணன், பதிவாளர் டி.ஜெயபாரதி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • 5 நாட்கள் நடக்கிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராம குடிநீர் திட்டக் கோட்டம் வேலூர் மாவட்டம் மூலமாக ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கிராம குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை முகாம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் 50 ஊராட்சிகளை சேர்ந்த 250 பேருக்கு 5 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது இந்த பயிற்சி முகாமில் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர்களுக்கு நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும் முறைகள் மற்றும் களநீர் பரிசோதனை பயன்கள், கையாளும் முறைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நுண்ணுயிர் பரிசோதனைக்கு நீர் சேகரிக்கும் முறை உள்ளிட்ட வை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் குமரவேல் மற்றும் சேவ் அறக்கட்டளை உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர்.

    இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனைக்கான பயிற்சி கையேடுகளை ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் வழங்கினார்.நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ஆலோசனைக்குழு உறுப்பினர் நத்தம்பிரதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதியோர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
    • கருணை இல்லத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள குகையநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் கருணை இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், சரியான உணவு, தங்குமிட வசதி இல்லை என்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில், உதவி கலெக்டர் பூங்கொடி தலைமையில் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அந்த முகாமில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அந்த இல்லத்தில் 37 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 69 பேர் தங்கியிருப்பதும் அவர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமல் துன்புறுத்தப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்து 61 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர், வாலாஜா, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், கருணை இல்லம் மூடப்படுகிறது. கருணை இல்லத்திற்கு சீல் வைக்கும்படி காட்பாடி வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் எழுத்துப்பூர்வ கடிதம் பெற்று கருணை இல்லத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த இல்லத்தில் தற்போது தங்கியிருக்கும் 8 பேர் வேறு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்படுகிறார்கள். 

    • வேலூரில் கண்காணிப்பு தீவிரம்
    • அனுமதி பெறாத டிரைவர்கள் சிக்குவார்கள்

    வேலூர்:

    வேலூர் நகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆற்காடு, காட்பாடி சாலை முழுக்க ஆட்டோக் களால் நிரம்பி வழிகிறது. வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் - பதிவு செய்யப்பட்ட ஆட் டோக்கள் தவிர வெளியூர் ஆட்டோக்களும் வேலூர் நகர சாலைகளில் உலா வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

    குறிப்பாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் வேலூர் நகரை ஆக்கிரமித்துள்ளன. பதிவு இல்லாத, பர்மிட் இல்லாத ஆட்டோக்களால் சட்டவிரோத சம்பவங்களிலும் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து ஆட் டோக்களின் நடமாட் டத்தை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தர விட்டுள்ளார். இதன் அடிப்படையில் புதிய நடை முறை மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சிக்குட் பட்ட பாகாயம் முதல் பள்ளிக்குப்பம் இடைப் பட்ட பகுதிகளில் மொத் தம் 59 ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன.

    இங்கு மொத்தம் ஆயிரத்து 390 ஆட்டோக்கள். இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ ஒவ்வொன்றிற் கும் ஒரு எண் ஒதுக்கப் படுகிறது. அதாவது ஒன்று முதல் ஆயிரத்து 390 வரையான நம்பர் ஸ்டிக்கராக ஆட்டோக்களில் ஒட்டப் படுகிறது.

    பிறகு அந்த எண்ணுக்கான ஆட்டோ வுக்கான ஆவணங்கள், டிரைவர் தொடர்பான விவ ரங்களை பெற்று போக்கு வரத்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறது.

    அந்த ஆட்டோக்களிலும் பயணிகளுக்கு தேவைப்படும் அவசர துறைகளின் எண்களும் அச்சிடப்பட்டுள்ளது.

    ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

    இதனால், விதிமீறும் ஆட்டோக்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்கள், அனுமதிபெறாத வாகனங்கள் எளிதில் கண்டறியப்படும்' என்றனர்.

    • எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3 லட்சம் பேர் பயனடைய இலக்கு
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி என்ற 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27' என்ற திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் கார்த்திகேயன் அமலு விஜயன் (குடியாத்தம்), மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் மாற்று கல்வி கொள்கை நுழைந்து விடக்கூடாது என்று முதல்வர் கற்றுத்தந்துள்ளார். திராவிட மாடல் என்பது அனைவரும் படிக்க வேண்டும் என்பதுதான். 2011-ம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் படித்த ஆண்கள் 86 சதவீதம் ஆகவும், பெண்கள் 73 சதவீதம் ஆகவும் இருந்தனர்.

    இதை அதிகரித்து காட்ட வேண்டும். எழுத்தறிவு பெறும் சமுதாயம் மேம்பட்ட சமுதாயமாக இருக்கும். வேலூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் 10,820 பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம் 2021-22 ஆம் ஆண்டில் 3 லட்சம் பேர் பயனடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை கடந்து 3.10 லட்சமாக எட்டப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23 -ம் ஆண்டின் இலக்காக 4.08 லட்சமாக இருக்கிறது. இதை 5 லட்சமாக மாற்றிக்காட்ட வேண்டும்.

    இதற்காக 9.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் வெற்றிபெற்று தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்க வேண்டும். அதேபோல், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தையும் நிரூபித்துக்காட்ட வேண்டும். இதை ஆசிரியர்கள் தொண்டாக செய்து வெற்றிகரமான திட்டமாக மாற்ற வேண்டும்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×