என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் மோசமான நடத்தைகள் ஆசிரியர்களுக்கு சவால்
- கருத்தரங்கில் பயிற்சியாளர்கள் பேச்சு
- மாணவர்களை ஆசிரியர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அண்ணா நிர்வாகப் பயிற்சி கல்லூரி சார்பில் மாணவர்களின் நடத்தை, உணர்ச்சி மேலாண்மை, ஆளுமை மேம்பாடு குறித்த பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
ஒருங்கணைப்பாளர் முகமது மிரான், பயிற்சியாளர் மனோகரன் ஆகியோர் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
மாணவர்கள் எல்லா சூழலிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வது கிடையாது. அவர்களது நடத்தை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி மாறுவதை நீங்கள் பார்க்கலாம்.
மாணவர்கள் எப்போதும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நடந்துகொள்வது இல்லை. மாணவர்கள் தெரியாமல் தன்னிச்சையாக தவறாக நடப்பது போல உள்ளது. தெரியாமல் சத்தம் போட்டு விட்டேன்.
சாரி ஏன் இப்படி நடந்துகிட்டேன்னு எனக்கே தெரியல இது தப்புனு தெரியது' டீச்சர். ஆனால் என்னையும் மீறிச் செய்துவிடுகிறன்" இப்படி விதவிதமாகக் மாணவர்கள் விளக்கம் தருவதைப் பார்க்கலாம்.
மாணவர்கள் நடத்தை விருப்பத்தேர்வு என்பதை வைத்து நடக்கிறது. தான் வளர்ந்த சூழல், தங்களது சொந்தத தேவைகள் மற்றும் உளவியல் கூறுகளின்படி சட்டென மாறிவிடுகிறார்கள்.
மோசமான நடத்தைகளை அவர்கள் தேர்வு செய்ததன் காரணங்களை அறிய வேண்டியது ஆசிரியர்ளுக்கு விடப்பட்டிருக்கும் சவால். சகமாணவர் உரையாடல் கதைகள் சினிமா தொலைக்காட்சி எனப் பல பரிமாண உலகிடமிருந்துதான் கற்கிறார்கள்.
மாணவர்கள் தனது அன்றாட வாழ்வில் பெரும்பகுதியை பள்ளியில் தனது வகுப்பறையில் கழிக்கிறார்கள்.ஒரு மாணவரின் நடத்தை விருப்பத்தேர்வை செப்பனிடும் பணி ஆசிரியருடையதாக இருக்கிறது. அதுவே மாணவர் பெரியவராகும் போது அவரது வாழ்க்கை முறையாக மாறப்போகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.
மாணவர்களை ஆசிரியர்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என்றனர்.