என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பண்டிகை தினத்தன்றும்"

    • மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
    • காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் நேரம் நிர்ணயம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும். கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும். இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்கவேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல், பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டி யவை பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6 முதல் 7 மணி வரை யி லும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும்அதிக ஒலி எழுப்பும். தொடர்ச்சி யாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    மருத்து வமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில், கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×