என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோக்களில் வரிசை எண் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது
    X

    ஆட்டோவில் வரிசை எண் ஸ்டிக்கர் ஒட்டிய காட்சி.

    ஆட்டோக்களில் வரிசை எண் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது

    • வேலூரில் கண்காணிப்பு தீவிரம்
    • அனுமதி பெறாத டிரைவர்கள் சிக்குவார்கள்

    வேலூர்:

    வேலூர் நகரில் ஆட்டோக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆற்காடு, காட்பாடி சாலை முழுக்க ஆட்டோக் களால் நிரம்பி வழிகிறது. வேலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் - பதிவு செய்யப்பட்ட ஆட் டோக்கள் தவிர வெளியூர் ஆட்டோக்களும் வேலூர் நகர சாலைகளில் உலா வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

    குறிப்பாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் வேலூர் நகரை ஆக்கிரமித்துள்ளன. பதிவு இல்லாத, பர்மிட் இல்லாத ஆட்டோக்களால் சட்டவிரோத சம்பவங்களிலும் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து ஆட் டோக்களின் நடமாட் டத்தை கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தர விட்டுள்ளார். இதன் அடிப்படையில் புதிய நடை முறை மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சிக்குட் பட்ட பாகாயம் முதல் பள்ளிக்குப்பம் இடைப் பட்ட பகுதிகளில் மொத் தம் 59 ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன.

    இங்கு மொத்தம் ஆயிரத்து 390 ஆட்டோக்கள். இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ ஒவ்வொன்றிற் கும் ஒரு எண் ஒதுக்கப் படுகிறது. அதாவது ஒன்று முதல் ஆயிரத்து 390 வரையான நம்பர் ஸ்டிக்கராக ஆட்டோக்களில் ஒட்டப் படுகிறது.

    பிறகு அந்த எண்ணுக்கான ஆட்டோ வுக்கான ஆவணங்கள், டிரைவர் தொடர்பான விவ ரங்களை பெற்று போக்கு வரத்து போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகிறது.

    அந்த ஆட்டோக்களிலும் பயணிகளுக்கு தேவைப்படும் அவசர துறைகளின் எண்களும் அச்சிடப்பட்டுள்ளது.

    ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

    இதனால், விதிமீறும் ஆட்டோக்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்கள், அனுமதிபெறாத வாகனங்கள் எளிதில் கண்டறியப்படும்' என்றனர்.

    Next Story
    ×