என் மலர்
நீங்கள் தேடியது "வாக்குவாதம் ஏற்பட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நவீன்குமாரை தாக்கினர்"
- பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2 பேர் கைது
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த மேல்பட்டி கீழ் செண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் நவீன்குமார் வயது 28 ஆம்பூரில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அனிதா இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் நவீன்குமார் பெட்ரோல் பங்க்கிற்கு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட சென்றுள்ளார்.
அப்போது பெட்ரோல் பங்கில் உள்ள மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கும், நவீன்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் நவீன்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய நவீன்குமார் அந்தப் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள தென்னந்தோப்பில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்துள்ளார். இதில் மூழ்கி இறந்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய நவீன்குமார் உடலை மீட்டு குடியாத்தம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு நவீன் குமாரின் உடலை ஒப்படைக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நேரத்திற்கு மேலாக போலீசார் நவீன்குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சேகர், குணசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு பூபதிராஜா, குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ராஜன்பாபு, லட்சுமி, செந்தில்குமாரி, சுந்தரமூர்த்தி உள்பட 100க்கும் மேற்பட்ட, அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
நவீன்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் நிலையத்தில் இறந்துபோன நவீன்குமாரின் தம்பி நந்தகுமார் (24) என்பவர் புகார் அளித்தார். அதில் எனது அண்ணன் நவீன்குமாரை அந்த தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பெட்ரோல் போட வந்த போது ஏற்பட்ட தகராறில் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அவர்களிடம் தப்பித்து ஓடிய நவீன்குமாரை அந்த வழியில் வந்த அப்பகுதியை சேர்ந்தவர் கன்னத்தில் அடித்துள்ளார். அவர்களிடம் தப்பிக்க பெட்ரோல் பங்க் எதிரே உள்ள நிலத்தில் ஓடிய போது கிணற்றில் விழுந்து விட்டார். எனது அண்ணனை அவர்கள் விரட்டியதால் தான் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
குடியாத்தம் தாலுகா போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனியார் பெட்ரோல் பங்க் மேலாளர் கோப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் (63), அணங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (19) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






