என் மலர்tooltip icon

    வேலூர்

    • கலெக்டர் அறிவுரை
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் டி. கே.எம். மகளிர் கல்லூரியில் இன்று நடந்தது.

    விழிப்புணர்வு கூட்டம்

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பது குறித்து தெரிவித்துள்ளனர்.இந்த கருத்துக்களை உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தைகள் பெண்களுக்கு எதிராக யார் மூலம் குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியும்.அப்படி நடந்து கொள்பவர்களை முன்கூட்டியே அறிந்து அவர்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் தங்களது குறிக்கோள் ஒன்றே கடமையாகக் கொண்டு அதனை நோக்கி நடை போட வேண்டும்.

    தற்போது கல்வி, வருங்காலத்தில் என்ன வேலை பார்க்கப் போகிறோம் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

    இந்தக் கட்டத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் கவனத்தை சிதறவிடாமல் செயல்பட வேண்டும்.

    சின்ன சின்ன ஆசைகள் மூலம் உங்களுடைய குறிக்கோள்களை இழந்து விடக்கூடாது.தற்காலிகமாக வரக்கூடிய ஆசைகளை கடந்து செல்பவர்கள் தான் சமூகத்தில் முக்கியமானவர்களாகவும் சமூக கட்டமைப்பை உருவாக்குபவர்களாகவும் வருவார்கள்.

    எதிர்த்து போராட வேண்டும்

    உங்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் அதைக் கொண்டு பயந்து விடக்கூடாது.தைரியமாக எதிர்த்து போராட வேண்டும்.

    கல்லூரி காலங்களை கடந்து தான் நாங்களும் வந்திருக்கிறோம்.கல்லூரி படிக்கும் காலத்தில் திருமணம் செய்து கொண்ட சிலர் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அது போன்ற நிலை உங்களுக்கு வந்து விடக்கூடாது.

    கவனத்தை சிதறவிடாமல் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தாசில்தார் செந்தில், கல்லூரி தாளாளர் மணி நாதன் மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, குடும்ப நல பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, டி கே எம் கல்லூரி முதல்வர் பானுமதி, வக்கீல் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
    • வீடுகளின் சுற்றுப்பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நல்ல நீரில் வளரக்கூடிய கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிலருக்கு ஏற்பட்டு வருகிறது.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர காய்ச்சல் பிரிவில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் காய்ச்சல் சிகிச்சை பிரிவு வாடில் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு கட்டுப்படுத்த வீடு வீடாக கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படு வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்து டெங்கு அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

    விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நல்ல நீரில் வளரக்கூடிய கொசுக்கள் மூலம் டெங்கு பரவி விடும்.பொது மக்கள் தங்களது வீடுகளில் பழைய பிளாஸ்டிக் டயர், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • பயணிகள் கடும் அவதி
    • 5 பேருக்கு கடை ஒதுக்குவது சம்பந்தமாக முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மீதமுள்ள 68 கடைகள் ஏலம் விடப்பட உள்ளது. அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் ஒத்திவைத்து வருகின்றனர்.

    ஏற்கனவே 3 முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே இன்று புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறையும் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் ரத்தாகி உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:-

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த 12 பேர் தங்களுக்கு கடைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு கடைகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி ஒருவர் மட்டுமே மாநகராட்சியில் பணம் செலுத்தினார். மற்றவர்கள் பணம் செலுத்த வில்லை. அவர்களில் மீண்டும் 8 பேர் கடைகள் ஒதுக்குவது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதில் 4 பேர் ஏற்கனவே மாநகராட்சிக்கு ரூ.40 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இதனை அவர்கள் கோர்ட்டில் மறைத்து கடைகள் ஒதுக்குமாறு தெரிவித்தனர்.

    வாடகை பாக்கி குறித்து மாநகராட்சி சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு கடை ஒதுக்குவது ரத்து செய்யப்பட்டது.

    இந்த விவகாரத்தில் இன்னும் 5 பேருக்கு கடை ஒதுக்குவது சம்பந்தமாக முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை. அவர்களுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும். அதற்கு பிறகு கடைகள் ஏலம் நடைபெறும் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றனர்.

    பஸ் நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் கடைகள் திறக்கப்படாததால் ‌பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    • நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் முடிவு
    • விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என பல்லாண்டுகளாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்திற்கு குடியாத்தம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்ப டும் என வாக்குறுதி அளித்தார்.

    அதேபோல் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. சட்டமன்றத்திலும் குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 10 முக்கியமான கோரிக்கைகள் பட்டியலிலும் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கைத்தறி துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் கே.வி. கோபாலகிருஷ்ணன், கவிதாபாபு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், எம்.எஸ்.குகன், ஏ.தண்டபாணி, சுமதிமகாலிங்கம், இந்துமதி கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட கைத்தறி துணி நூல் அலுவலர் பி.முத்துராமலிங்கம் தலைமையில் கைத்த றித்துறை அதிகாரிகளும், குடியாத்தம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் பி.சரவணன் தலைமையில் சங்க நிர்வாகிகளும், குடியாத்தம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.அண்ணா மலை தலைமையில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு குடியாத்தம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கலந்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது இந்த கலந்துரையாட கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கவும், அந்த ஜவுளி பூங்காக்களின் உட்கட்டமைப்பு, பொது வசதி மையம், தொழிற்கூட கட்டுமான செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது இரண்டு கோடி 50 லட்சம் ரூபாய் மாநில அரசு மானியமாக வழங்குவது குறித்தும் அதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த ஜவுளி பூங்கா அமைக்க குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலமும் குறைந்த பட்சம் 3 தொழில் கூடங்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஜவுளி பூங்கா அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • கோவில் விழாவுக்கு தோரணம் கட்டியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் குச்சனூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 30) பெயிண்டராக உள்ளார்.

    குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு கோவிலில் விழாவிற்காக தேவன் நண்பர்களுடன் தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மின்விளக்குகள் இருந்த ஒயரை எதிர்பாராத விதமாக தேவன் தொட்டு உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி எரியப்பட்டார்.

    இதில் மின்சாரம் தாக்கியதில் தேவன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி தேவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    சி.ஐ.டி.யு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.

    மாவட்ட செயலாளர் பரசுராமன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினா்.

    ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரோனா நிதி வழங்க வேண்டும்.அடிப்படை சம்பளத்தை சரி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்த பலனை வழங்கி, ஓய்வூதிய உயர்வு, பணி ஓய்வு பெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களின் ஓய்வு கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாவட்ட தலைவர் இளங்கோ, துணை பொது செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிரஞ்சீவி, துணைத்தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முற்றுகை போராட்டத்தையொட்டி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அணைக்கட்டு துனை மின் நிலையத்தில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு பகுதியில் மின்சாரத்துறையின் மூலம் இயங்கிவரும் துணைமின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.

    இங்கு பயன்ப டுத்தப்படும் மின்சாதனப் பொருட்களை அருகில் இருக்கும் குடோனில் சேகரித்து வைக்கப்பட்டு வருகின்றன.

    இதனை பல நாட்களாக நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த வாலிபர் நேற்று மாலை 6 மணிக்கு மேல் குடோனின் ஜன்னல் கம்பியினை உடைத்து உள்ளே புகுந்துள்ளா்ா.

    இதனையடுத்து அங்கு இருந்த சுமார் 60 கிலோ எடைக்கொண்ட மின்சாதனப் பொருட்களை கயிற்றால் விரகு சுமை கட்டுவது போல் கட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக கடத்த முயற்ச்சித்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த மின்சார ஊழியர்கள் வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதனையடுத்து அவர் கடத்தி செல்ல வைத்து இருந்த 60 கிலோ எடைக்கொண்ட மின்சாதன கம்பிகள் பறிமுதல் செய்து போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். அணைக்கட்டு போலீசார் வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. இவர் அணைக்கட்டு சுற்றுப் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

    இதனால் விக்னேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மன்ற கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உத்தரகுமாரி, ஒன்றிய பொறியாளர் புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலக மேலாளர் அசோக் குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பா ளராக வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் இமகிரிபாபு, குட்டிவெங்கடேசன், சுரேஷ்குமார், மனோகரன், சரவணன் ரஞ்சித்குமார், தீபிகாபரத் சூரியகலா, இந்திராகாந்தி, கவுரப்பன் உள்ளிட்ட உறுப்பி னர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சி னை கள் குறித்து பேசினார்கள்.

    உறுப்பி னர்களின் கோரிக்கை களுக்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ராமாலை கிராமத்தில் பட்டா ரத்து செய்த பிரச்சினை குறித்து உடனடியாக உயரதிகா ரிகளுக்கு கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், பஸ்கள் இயங்கவும், ஏரிக்கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும், பழுதடைந்த பள்ளிகள் குறித்து கணக்கெ டுத்து கலெக்டருக்கு அனுப்பி உள்ளோம்.

    விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வரும் கூட்டங்களில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்படும் என்றார்.

    மேலும் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வெளியே பல்வேறு அரசியல் கட்சி களின் கொடிக்கம்பங்கள் உள்ளன.

    மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படு வதால் நெடுஞ்சா லைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அனைத்து கட்சியின் கொடிக்கம்பங்க ளை அகற்ற நெடுஞ்சாலை துறையையும் நகராட்சி யையும் கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • குறைதீர்வு கூட்டத்தில் புகார்
    • முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    நடிகர் வடிவேலு நடித்த சினிமா ஒன்றில் கிணற்றை காணோம் என்ற நகைச்சுவை காட்சி இடம் பெரும். தோண்டாத கிணற்றுக்கு ரசீது பெற்றுக் கொண்டு வடிவேலு போலீஸ் நிலையத்தில் புகார் செய்து விட்டு போலீசாரை கிணறு தொண்டப்பட்டதாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்று கூச்சலிடுவார்.

    இதே போல காட்பாடியில் கால்வாயை காணவில்லை என்று கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் துரை என்பவர் புகார் மனு அளித்தார்.

    வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காட்பாடி கல் புதூர் ராஜீவ் காந்தி நகர் 3-வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறோம். இங்குகழிவு நீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று 10 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    2019-ம் ஆண்டு கால்வாய் கட்டுவதற்கு ஒப்பந்த பள்ளி கோரப்பட்டது விரைவில் பணிகள் தொடங்கும் என்று மாநகராட்சி மூலமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கவில்லை.அதே நேரம் எங்கள் பகுதியில் கால்வாய் கட்டப்பட்டு இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டறிந்தோம். அதில் பதில் அளித்துள்ள அதிகாரிகள் 2019-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்த பள்ளி கோரப்பட்டது.

    தொடர்ந்து 2022 -ம் ஆண்டு ஜனவரி மாதம் கால்வாய் பணிகள் முடிவடைந்து விட்டது என தெரிவிக்கப்பட்டது.இதனை பார்த்ததும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இந்த விவரங்களின்படி எங்கள் பகுதியில் கட்டப்பட்ட கால்வாய் காணாமல் போய்விட்டதாகத்தான் கருத வேண்டி உள்ளது. இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    கட்டாத கால்வாய்க்கு கணக்கு காட்டி அதிகா ரிகள் பணத்தை சுருட்டி கொண்ட தாக மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் விசாரணை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில் பக்கத்து தெருவில் நடந்த கால்வாய் பணியை இந்த தெருவில் நடந்துள்ளது என பதிலாக அளித்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    காட்பாடியில் கால்வாயை காணோம் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளித்த மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர் கண்ணன் கூறியதாவது:-

    காட்பாடி கல் புதூர் ராஜீவ் காந்தி நகரில் உள்ள 1,2,3-வது தெருக்களில் கால்வாய் பணிக்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. ஒதுக்கப்பட்ட ரூ.9.90 லட்சத்தில் 1-வது தெருவில் மட்டுமே கால்வாய் பணிகள் செய்ய முடிந்தது. அதனை நாங்கள் பதிலாக அளித்தோம்.

    ஆனால் 3-வது தெருவில் கால்வாயை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

    அங்கு கால்வாய் பணிகள் நடக்கவில்லை.அந்த தெருவில் கால்வாய் அமைக்க ரூ.50 லட்சம் வரை செலவாகும். ஒதுக்கப்பட்ட நிதி யில் 1-வது தெருவில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. சந்தேகம் இருந்தால் ஆணையத்தில் புகார் தெரிவிக்கிலாம்‌. அதிகாரிகளை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த விதமான ஒளிவு மறைவு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகராட்சி கமிஷனர் தகவல்
    • 30,000 எல்.இ.டி. தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் மின்சிக்கன நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எல்.இ.டி. விளக்குகள் மாநகராட்சி முழுவதும் டியூப் லைட் மற்றும் சோடியம் விளக்குகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக நவீன எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    வேலூர் காட்பாடி சத்துவாச்சாரி பாகாயம் வரை மாநகராட்சி முழுவதும் இதுவரை 30,000 எல்.இ.டி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதனால் மாநகராட்சிக்கு வழக்கத்தை விட மின்சார சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்டணமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு ஆண்டுக்கு வேலூர் மாநகராட்சிக்கு ரூ.2 கோடி வரை மின் கட்டண சேமிப்பு லாபமாக கிடைக்கிறது. இதனால் மாநகராட்சி முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இது தொடர்பாக கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-

    வேலூர் மாநகராட்சியில் கிராமங்களில் உள்ளது போல டியூப் லைட் மற்றும் சோடியம் விளக்குகள் பயன்பாடு அகற்றப்பட்டு நவீன எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இந்த விளக்குகள் 40 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டவை.

    இதன் மூலம் வேலூர் மாநாட்சிக்கு ஒரு வருடத்திற்கு ரூ.2 கோடி சேமிப்பு ஏற்படுகிறது.இந்த பணத்தின் மூலம் 6 ஆண்டுகளில் மாநகராட்சி முழுவதும் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணிக்கான செலவு கிடைத்துவிடும்.

    அதற்கு அடுத்து வரும் ஆண்டுகளில் இருந்து இந்த பணம் மாநகராட்சிக்கு லாபமாக அமையும் என்றார்.

    • போலீஸ் விசாரணைக்கு பயந்து விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அலமேலு மங்காபுரம் சமாதான நகரை சேர்ந்தவர் அருள் செல்வம் (வயது 21). இவர் உள்பட 4 பேர் மீது அந்தப் பகுதியில் அடிதடி சம்பந்தமாக புகார் வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக அருள் செல்வம் மற்றும் அவரது நண்பர்களை சத்துவாச்சாரி போலீசார் அழைத்தனர். போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் பயந்துபோன அருள் செல்வம் நேற்று முன்தினம் விஷம் குடித்தார்.

    ஆபத்தான நிலையில் அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருள் செல்வம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யப்ப பக்தர்கள் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மினி வேனில் சபரிமலை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை கணியம்பாடி அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் மோதியது.

    இந்த விபத்தில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. அதில் இருந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் மற்றும் பஸ்சில் இருந்த 2 பயணிகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வேலூர் தாலுகா போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் வேலூர் திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்ட பிறகு போக்குவரத்து சீரானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×