என் மலர்
உள்ளூர் செய்திகள்

எல்.இ.டி தெருவிளக்குகள் மூலம் ரூ.2 கோடி மின் கட்டணம் லாபம்
- மாநகராட்சி கமிஷனர் தகவல்
- 30,000 எல்.இ.டி. தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் மின்சிக்கன நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எல்.இ.டி. விளக்குகள் மாநகராட்சி முழுவதும் டியூப் லைட் மற்றும் சோடியம் விளக்குகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக நவீன எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
வேலூர் காட்பாடி சத்துவாச்சாரி பாகாயம் வரை மாநகராட்சி முழுவதும் இதுவரை 30,000 எல்.இ.டி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் மாநகராட்சிக்கு வழக்கத்தை விட மின்சார சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கட்டணமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு ஆண்டுக்கு வேலூர் மாநகராட்சிக்கு ரூ.2 கோடி வரை மின் கட்டண சேமிப்பு லாபமாக கிடைக்கிறது. இதனால் மாநகராட்சி முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது தொடர்பாக கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-
வேலூர் மாநகராட்சியில் கிராமங்களில் உள்ளது போல டியூப் லைட் மற்றும் சோடியம் விளக்குகள் பயன்பாடு அகற்றப்பட்டு நவீன எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இந்த விளக்குகள் 40 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டவை.
இதன் மூலம் வேலூர் மாநாட்சிக்கு ஒரு வருடத்திற்கு ரூ.2 கோடி சேமிப்பு ஏற்படுகிறது.இந்த பணத்தின் மூலம் 6 ஆண்டுகளில் மாநகராட்சி முழுவதும் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணிக்கான செலவு கிடைத்துவிடும்.
அதற்கு அடுத்து வரும் ஆண்டுகளில் இருந்து இந்த பணம் மாநகராட்சிக்கு லாபமாக அமையும் என்றார்.






