என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத் தில் தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும். கடன் திட்டங்களான தனிந பர் கடன், சுய உதவிக்குழுக்க ளுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்ப டுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமா யின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    திருப்பத்தூர் மாவட்டத் தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ் லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறு பான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக் குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந் துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். கல்வி கட னுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றி தழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத் திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட் டோர் பொருளாதார மேம் பாட்டு கழகம் (டாப் செட்கோ) மூலம் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பொது கால கடன் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள பெண்க ளுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம், சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆண்களுக்கான சிறுகடன் திட்டம், கறவை மாட்டுக்க டன், சிறு குறு விவசாயிகளுக் கான நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.

    இத்திட்டங்களின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப் படும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இந்த இரு திட்டங்களுக் கானலோன் மேளா திருப்பத் தூர் மாவட்டதில் உள்ள அனைத்து தாலுகா அலுவல கங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தப்பட உள்ளது. திருப் பத்தூர் தாலுகாவில் அடுத்த மாதம் 8-ந்தேதியும், நாட்டறம் பள்ளி தாலுகாவில் நாளை வெள்ளிக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 9-ந்தேதியும் நடக்கிறது.

    வாணியம்பாடி தாலுகாவில் வருகிற 24-ந்தே தியும், அடுத்த மாதம் 15-ந்தே தியும், ஆம்பூர் தாலுகாவில் வருகிற 25-ந்தேதியும், அடுத்த மாதம் 16-ந்தேதியும் முகாம் நடக்கிறது.இந்தமுகாம்களில் கலந்துகொண்டு விண்ணப் பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 657 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். இதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 774 அட் டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இது 99.43 சதவீத மாகும். தமிழகத்திலேயே 39 மாவட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

    திருப்பத்தூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்ததற்காக மாவட்ட வழங்கல் அலுவலர் ஜி.சரஸ்வதி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் திருமலை உள்ளிட்ட அதிகாரிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பாராட்டினார்.

    • தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை
    • புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் பொது சுகாதாரத் துறை சார்பில் பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி தலைமை தாங்கினார்.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பள்ளிகளில் தற்போது அரையாண்டு தேர்வு நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உங்களுக்கு தெரிந்திருக்கும். பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாத மாணவ மாணவிகளை நீங்கள் தேர்ச்சி பெற செய்ய வேண்டும். 2 மாதத்தில் பொது தேர்வு வரவுள்ளது.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்தது. இதனை மாற்ற வேண்டும் கல்வியில் முன்னிலைப் பெரும் மாவட்டமாக கொண்டு வருவதற்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    பள்ளிகளில் முழுமையாக புகையிலை, குட்கா போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.

    மாநில அளவில் நடந்த கலாச்சார போட்டியில் வேலூர் மாவட்ட மாணவ மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதே போல முதல் அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளிலும் அதிகளவில் மாணவ-மாணவிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • காட்பாடி ஷோரூமில் போலி பில் தயாரித்து மோசடி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடியில் இயங்கி வந்த தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணியாற்றி வந்த 4 ஊழியர்கள் 2 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு 40 இருசக்கர வாகனங்களை போலி பில் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.

    அதற்கான பணத்தை அவர்கள் பெற்று அதை நிறுவனத்தின் கணக்கில் சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழியர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் விற்பனை செய்த 40 இருசக்கர வாகனத்தில் இதுவரை 22 இருசக்கர வாகனங்கள் வாடிக்கை யாளர்களிடமும், 5 வாகனங்கள் சப் டீலர்களிடம் இருப்பது கண்டுபிடி க்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மீதம் உள்ள 13 வாகனங்கள் யாரிடம் உள்ளது என்பது தெரியவில்லை. அதை போலீசாரால் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. இது வழக்கின் விசாரணைக்கு தடையாக உள்ளது.

    எனவே அந்த 13 வாகனங்கள் யார் வாங்கியது என்பது குறித்து கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறுகையில்:-

    காட்பாடி இருசக்கர வாகன ஷோரூமில் வாகனங்கள் வாங்கி இதுவரை பதிவு செய்யாமலும், காவல்துறை விசாரணைக்கு வராமலும் உள்ள நபர்கள் உடனடியாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் தாங்கள் வாங்கிய இருசக்கர வாகனத்துடன் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளுடன் விசாரணைக்கு வரவேண்டும்.

    அவ்வாறு வராமல் இருப்பவர்கள், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • வரலாற்று சார்ந்த படங்கள் மற்றும் வீடியோ சுவரில் ஒளிபரப்பப்பட்டது
    • அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஒளி, ஒலியுடன் கூடிய 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி நவீன தொழில்நுட்பத்துடன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி பெரியார் பூங்காவில் பெரிய அளவிலான 2 புரஜெக்டருடன் கூடிய பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.5 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி சோதனை ஓட்டமாக ஊழியர்கள் ஒளிபரப்பி பார்த்தனர்.

    அப்போது இருள் சூழ்ந்த கோட்டையின் மதில்சுவரின் படக்காட்சிகள் திரையிடப்பட்டது. அதில், வேலூர் வரலாற்றை பின்னணியில் வசீக குரலில் எடுத்துரைக்கப்பட்டது. கோட்டை மதில்சுவர் கட்டப்படுவது போன்றும்.. பின்னர் இடிந்து விழுவது போன்றும், குண்டுகள் சுவரை துளைப்பது போன்றும், பீரங்கிகள் சுவரில் இருந்து வெளியே வருவது போன்றும் வீடியோ அமைந்திருந்தது. மேலும், வேலூர் கோட்டை வரலாற்று சார்ந்த படங்கள் மற்றும் அதுகுறித்த வீடியோ சுவரில் ஒளிபரப்பப்பட்டது. அவை கண்முன்னே தோன்றும் வகையில் மிக தத்ரூபமாக இருந்தது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி கொண்டுவரப்பட்டுள்ளது.

    கோட்டையின் மதில் சுவர் திரையாக பயன்படுத்தப்படுகிறது. அதில் வேலூரின் வரலாற்று சார்ந்த நிகழ்வுகள், படங்கள் மற்றும் வீடியோ 3டி முறையில் ஒளி, ஒலியுடன் ஒளிபரப்பப்படும். சோதனை ஓட்டம் முடிவடைந்துள்ளது.

    நேரடியாக அதிகாரிகள் கள ஆய்வு செய்து, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனர்.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நெஞ்சு வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள கார்த்திகேயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பாஷா (வயது 33) திருட்டு வழக்கில் கடந்த மாதம் குடியாத்தம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

    இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 13-ந் தேதி முகமது பாஷாவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. ஜெயில் ஆஸ்பத்திரியில் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

    பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது பாஷா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாக்கம்பாளையத்தில் மாடு முட்டி 10 பேர் காயம்
    • போலீசார் தீவிர பாதுகாப்பு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு எருது விடும் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இபப் போட்டியில் கலந்து கொள்ள வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக கொண்டு வந்தனர். போட்டியின் போது தீயணைப்பு துறையினரும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பின்னர் காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக ஓட விடப்பட்டது. காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. போட்டியை காண வந்த பொதுமக்களும் மற்றும் இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர்.

    இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் பாகுபலி என்ற காளை ஓட விடப்பட்டது. அப்போது பாதையில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென பாகுபலி காளைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.

    இதனைக் கண்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க வந்தன. போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி 2 மணி வரை நடைபெற்றது.

    விழாக் குழுவின் மூலம் காளைகளுக்கு காலையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.மேலும் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதால் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    போட்டியின் இறுதியில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஓடி கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மஞ்சு விரட்டு போட்டியின் போது குடியாத்தம் தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 100 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது
    • இளைஞர்கள் ஆரவாரம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டில் பொங்கல் பண்டிகையொட்டி எருது விடும் விழா இன்று நடந்தது. விழாவுக்கு சப்- கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.

    தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஷீலா வரவேற்றார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் மற்றும் சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன.

    காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    சீறி பாய்ந்தது ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

    • ரூ.5 கோடியில் அமைகிறது
    • மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக வேலூர் கோட்டை திகழ்கிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர்.

    வரலாற்று சின்னமாகவும் வேலூர் கோட்டை திகழ்கிறது. இந்தக் கோட்டையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக வேலூர் கோட்டையில் ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய 3டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி நவீன தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட உள்ளது.

    இதற்கு பெரிய அளவிலான புரஜெக்டர் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெரியார் பூங்கா அருகே புரஜெக்டர் பாதுகாப்பு அறை கட்டப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் கோட்டை வேலூர் மாநகராட்சியின் அடையாளமாக திகழ்கிறது. இந்த கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3டி நிகழ்ச்சி கொண்டுவரப்பட உள்ளது. சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோட்டையின் மதில் சுவர் திரையாக பயன்படுத்தப்படும்.

    அதில் வேலூரின் வரலாற்று சார்ந்த நிகழ்வுகள், படங்கள் மற்றும் வீடியோ 3டி முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. சீனா, ஜப்பானை தொடர்ந்து இந்தியாவில் வேலூர் கோட்டையில் தான் நவீனு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

    ஒரு நேரத்தில் சுமார் 200 நபர்கள் அமர்ந்து இதை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இங்கு வட மாநிலத்தவர்களும் பலர் வருவதால் வேலூரின் பெருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்திலும் திரையிடப்படும்.

    இவை தத்ரூபமாக இருக்கும். விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 200 மாடுகள் பங்கேற்பு
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தில் 108-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.

    இதில் குடியாத்தம், கே வி குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.

    காளைகள் ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்ட ருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர் தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன. இந்த காளை விடும் திருவிழாக்குழு தலைவர் சிவபிரசாத், செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார்.இந்தப் போட்டிகளை குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் தாசில்தார் எம். விஜயகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    தொடக்க விழாவில் மாவட்ட கவுன்சிலர் குசிலகுமாரி சேகர் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா உமா காந்தன், துணைத் தலைவர் வேலு, ஒன்றிய குழு உறுப்பினர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த காளை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில் காயமடைந்த வர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பலத்த காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வி.மத்தூர் கிராம பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவில் அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் உருவ படத்துடன் மேள தாளங்களுடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.பாஸ்கர், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு, வி.என்.தனஞ்செயன், கே.அமுதாகருணா, எஸ். என்.சுந்தரேசன், எஸ்.ஐ. அன்வர்பாஷா, அட்சயாவினோத்குமார், எம்.கே. சலீம், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி.மோகன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் த.வேலழகன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் அன்னதானங்களை தொடங்கி வைத்தார். நகரில் உள்ள 36 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • டி.ஐ.ஜி. முத்துசாமி போலீசாருக்கு அறிவுரை
    • புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் 6 நாட்கள் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்க ளுக்கு குற்ற வழக்குகளில் புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்புகள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று முதல் 6 நாட்கள் நடக்கிறது.

    இந்த பயிற்சி வகுப்பை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    குற்ற வழக்குகளில் திறம்பட செயல்படுவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இங்கு கற்றுக் கொடுக்கப்படும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இது வழக்கு விசாரணைக்கு பெரிய உதவியாக இருக்கும்.

    குற்ற வழக்குகளில் புதிய தொழில்நுட்பங்களை கையாள தெரிந்து கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவது எப்படி என்பதை கற்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பயிற்சி வகுப்பில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், பணியிடை பயிற்சி பள்ளி டி.எஸ்.பி. முருகன் மற்றும் தடயவியல், கைரேகை நிபுணர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது.
    • தனிப்படை போலீசார் இதுவரை சுமார் 50 பேரிடம் இந்த கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள லத்தேரி அடுத்த பி. என். பாளையம் புதூர் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 41) தி.மு.க. பிரமுகரான இவர் பல ஆண்டுகளாக மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கம்பெனி நடத்தி வந்தார்.

    கடந்த 10-ந் தேதி நள்ளிரவு அவரது கம்பெனியை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வழியில் மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் நாகேஷின் கழுத்து கை ஆகிய இடங்களில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த நாகேஷ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    தொழில் போட்டி காரணமாக நாகேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    இதில் தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை போலீசார் விடுவித்தனர்.

    கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையிலான தனிப்படையும் இந்த கொலையில் துப்பு துலக்க களமிறங்கி உள்ளது.

    தனிப்படை போலீசார் இதுவரை சுமார் 50 பேரிடம் இந்த கொலை சம்பந்தமாக விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. தொடர்ந்து இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×