என் மலர்
நீங்கள் தேடியது "மூச்சு திணறி காளை சாவு"
- பாக்கம்பாளையத்தில் மாடு முட்டி 10 பேர் காயம்
- போலீசார் தீவிர பாதுகாப்பு
அணைக்கட்டு:
அணைக்கட்டு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு எருது விடும் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இபப் போட்டியில் கலந்து கொள்ள வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக கொண்டு வந்தனர். போட்டியின் போது தீயணைப்பு துறையினரும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக ஓட விடப்பட்டது. காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. போட்டியை காண வந்த பொதுமக்களும் மற்றும் இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர்.
இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் பாகுபலி என்ற காளை ஓட விடப்பட்டது. அப்போது பாதையில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென பாகுபலி காளைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது.
இதனைக் கண்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க வந்தன. போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி 2 மணி வரை நடைபெற்றது.
விழாக் குழுவின் மூலம் காளைகளுக்கு காலையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.மேலும் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதால் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
போட்டியின் இறுதியில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஓடி கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மஞ்சு விரட்டு போட்டியின் போது குடியாத்தம் தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






